மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார்.
மனைவி கோபித்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

கள்ளக்குறிச்சி:

சங்கராபுரம் அருகே அரசராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 43) தொழிலாளி. இவரது மனைவி சுமதி கூலி வேலைக்கு சென்று தாமதமாக வந்ததார். இதை குழந்தைவேல் கண்டித்ததால் அவருடன் கோபித்துக்கொண்டு சுமதி தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனால் விரக்தி அடைந்த குழந்தைவேலு விஷத்தை குடித்தார். பின் மயங்கி விழுந்த குழந்தைவேலுவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். 

X

Maalai Malar
www.maalaimalar.com