என் மலர்
கள்ளக்குறிச்சி
- திருநாவலூர் அருகே சமையல் செய்த பெண் தீயில் கருகி பலியானார்.
- என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் அருகே இரும்பை பகுதியை சேர்ந்த பெரியநாயகம்.அவரது மகள் யட்சிதா (வயது 28). இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டுஇருந்தார். அப்போதுஅவரது துப்பட்டாவில் எதிர்பாராத விதமாக தீ பற்றியது. இந்த தீ சற்று நேரத்தில் மலமல என பற்றி எரியத் தொடங்கியது. துப்பட்டாவில் தீ பற்றி எரிவதை அறிந்த யட்சிதா அதிர்ந்து போய் செய்வ தறியாது திகைத்தார். என்னை காப்பாற்றுங்கள் என்னை காப்பாற்றுங்கள் என வீட்டின் வெளியே வந்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து இவர் மீது பற்றி தீயை போராடி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் யட்சிதாவிற்க்கு 80 சதவீதம் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்தவர்கள் யட்சிதாவை விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில்சிகிச்சைக்கு சேர்த்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி யட்சிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து யட்சிதாவின் தந்தை பெரியநாயகம் திருநாவலூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து சென்று யட்சிதாவின் உடலை ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தியாகதுருகத்தில் கழிவுநீர் கால்வாயில் தேங்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
- தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம்- திருக்கோவிலூர் சாலையில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் உள்ளது. பஸ் நிலையத்தில் உள்ள வணிக வளாக ங்களில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் இந்த கால்வாய் வழியாக செல்கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கால்வாய் சந்தைமேடு செல்லும் பாலத்தில் தூர்ந்து போனது. இதனால் கழிவு நீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறாமல் பல மாதங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் பைகள், டப்பாக்கள் போன்றவை குவிந்து கிடக்கின்றன. இந்த கழிவு நீர் கால்வாய் கொசுக்களின் உற்பத்தி கூடாரமாக திகழ்கிறதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவல நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.
இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 296 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதான 296 பேரில் 70 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
மேலும், கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
- தியாகதுருகம் அருகே செல்போன் கடையில் தகராறு- 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- செல்போன் கடைக்குச் சென்று பொருள் வாங்கியுள்ளார். இந்நிலையில் பொருள் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் ஜெய்சங்கர் (வயது 29)இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த காண்டீபன் (45) என்பவர் செல்போன் கடைக்குச் சென்று பொருள் வாங்கியுள்ளார். இந்நிலையில் பொருள் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு காண்டீபன் மகன்கள் திருக்குமரன் (23) தமிழ் குமரன் (27) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஜெய்சங்கர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெய்சங்கரின் அண்ணன் பெருமாள் சண்டையை விலகியதாக கூறப்படுகிறது.
அப்போது காண்டீபன், திருக்குமரன், தமிழ் குமரன் ஆகியோர் பெருமாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இதுகுறித்து இரு தரப்பினரும் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் காண்டீபன், திருக்குமரன், தமிழ்குமரன் ஆகிய 3 பேர் மீதும், தமிழ்குமரன் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் அவரது மனைவி ராஜேஸ்வரி, ஜெய்சங்கர் அவரது மனைவி கவிதா பேர் மீதும், ஆக மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி அருகே தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை செய்துகொண்டார்.
- தாய் செல்வி மகள் சரிவர வேலை செய்யவில்லை என்று கேட்டர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே குதிரைச்சந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன்மனைவி செல்வி (வயது36). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். இதைப்போல மகனும் தந்தையுடன் சென்று விட்டார். இவருடைய மகள் தமிழரசி மட்டும் தாயுடன் வசித்து வந்தார். மேலும் தமிழரசி டிப்ளமோ நர்சிங் படித்து தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு விட்டு பருத்தி வயலில் மொக்கு போடும் வேலை செய்து வந்தார். இந்நிலையில் அவரது தாய் செல்வி மகள் சரிவர வேலை செய்யவில்லை என்று கேட்டர்.
இதனால் மனமுடைந்த தமிழரசி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை தூக்கிகொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செல்வி அளித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- திருக்கோவிலூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீரபாண்டி அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெகன்(வயது23), வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த முகமது அஜிம்(16 ) ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 350 கிராம் கஞ்சா, பைக், செல்போனை பறிமுதல் செய்தனர்.
- சங்கராபுரம் அருகே கோவில் திருவிழாவில் வாக்குவாதம் ஏற்பட்டதால் பதட்டம் நிலவியது.
- முப்பூசை விழாவையொட்டி இரவு சுவாமி வீதியுலாவை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பிரிவிடையாம்பட்டு கிராமத்தில் பெரியாயி கோவில் உள்ளது. அதே கிராமத்தில் வசிக்கும் ஒரு தரப்பினர் இந்த கோவிலில் முப்பூசை விழாவையொட்டி இரவு சுவாமி வீதியுலாவை விமர்சையாக நடத்த ஏற்பாடுகள் செய்தனர். ஏற்கனவே சுவாமி வழிபாடு தொடர்பாக பிரச்னை இருந்ததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. அதில், வழக்கத்திற்கு மாறாக எந்த நிகழ்ச்சிகளும் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக சுவாமி வீதியுலா நடைபெறுவதாக கூறி, அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தகவலறிந்த திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பழனி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், பிரிவிடையாம்பட்டு கிராமத்திற்கு சென்று இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நள்ளிரவு 12.30 மணியளவில் சுவாமி வீதியுலா ரத்து செய்யப்பட்டது. இதில், மாரியம்மன் கோவிலில் நேற்று நடைபெற இருந்த சாகை வார்த்தல் நிகழ்ச்சியையும் ரத்து செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தினர். தொடர்ந்து, ரிஷிவந்தியம் வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் இரு தரப்பினர் முன்னிலையில் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்னைக்கு சுமூக தீர்வு காணலாம் என கூறினார்.இதையொட்டி நள்ளிரவு 1 மணியளவில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர். பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், பிரிவிடையாம்பட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- சங்கராபுரம் அருகே பாம்பு கடித்ததில் முதியவர் பலியானார்.
- அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே புதுபாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் லட்சாதிபதி (வயது58). இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த போது பாம்பு கடித்தது. உடனே அவரது குடும்பத்தினர் லட்சாதிபதியை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே லட்சாதிபதி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- கள்ளக்குறிச்சி அருகே பள்ளிக்கு சென்ற ஆசிரியையை காணவில்லை.
- பாபு தினமும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அண்ணா நகரில் உள்ள பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும் வழக்கம்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே க.மாமானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 40) இவரது மனைவி அபிமாபீ (28) பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சி அண்ணா நகர் பகுதியில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு முகமது ராஷீத் (10) என்ற மகனும், ஆலியா (8) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பாபு தினமும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று அண்ணா நகரில் உள்ள பள்ளியில் விடுவதும், மீண்டும் மாலையில் அழைத்து வருவதும் வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் மாலை தனியார் பள்ளிக்கு சென்று மனைவியை அழைத்துவர மோட்டார் சைக்கிளில் காத்திருந்தார். ஆனால் மனைவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை. பள்ளியில் சக ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள், அக்கம், பக்கத்தில் விசாரித்ததில் மனைவி காணவில்லை. இதுகுறித்து பாபு கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- இன்று காலை நகைக்கடை திறந்துகிடப்பது கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
- கிராமப்பகுதி என்பதால் நகைக்கடைக்கு காவலாளிகள் போடப்படவில்லை.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூர் கிராமத்தில் உள்ள சேலம்-கள்ளக்குறிச்சி சாலையில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ணமஹால் என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது.
இவர் இரவு நேரம் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கள்ளக்குறிச்சிக்கு வருவது வழக்கம்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் நகைக்கடைக்கு வந்தனர். அவர்கள் நகைக்கடை முன்பு உள்ள இரும்பு கிரில்கேட்டை ஆக்ஷா பிளேடால் அறுத்தனர். பின்னர் நகைக்கடையின் பூட்டு மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதனைத்தொடர்ந்து நகைக்கடையில் உள்ள நகை பெட்டகத்தை தூக்கி சென்றனர்.
இன்று காலை நகைக்கடை திறந்துகிடப்பது கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடையின் உரிமையாளர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். பதறிபோன லோகநாதன் உடனடியாக நகைக்கடைக்கு விரைந்தார்.
இதுகுறித்து வரஞ்சரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்களும் நகைக்கடைக்கு வந்தனர்.
அப்போது கடையில் இருந்த இரும்பு பெட்டகம் மாயமாகியிருந்தது. இதில் 281 பவுன் நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனதாக போலீசாரிடம் லோகநாதன் தெரிவித்தார். கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து வயல்வெளிக்கு ஓடி சென்றது. கொள்ளையர்கள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவு மூலம் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகைக்கடையை கொள்ளையர்கள் கடந்த சில நாட்களாக நோட்டமிட்டுள்ளனர். கடைக்கு யார்? யார்? வருகிறார்கள்? எந்த நேரத்தில் கடை மூடப்படுகிறது? என்பதை கொள்ளையர்கள் கண்காணித்துள்ளனர். கிராமப்பகுதி என்பதால் நகைக்கடைக்கு காவலாளிகள் போடப்படவில்லை.
இதனை அறிந்த கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை இன்று அதிகாலை துணிகரமாக நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
- கள்ளக்குறிச்சியில் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
- பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதயில்கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கள்ளக்குறிச்சி நகராட்சியில் ஏமப்பேர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.121 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்து, குளத்திற்கு மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி டவும், குளக்கரையின் மேல் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கான நடைபாதையும், பூங்கா அமைப்பதற்கான பணிகளையும் விரை ந்து மே ற்கொள்ள அறிவுறுத்தினார். பின்னர் ஏமப்பேர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நீர் உந்து நிலையத்தை பார்வையிட்டார். அப்போது கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் தினசரி குடிநீர் வழங்கிடவும், நீரினை குளோரினேஷன் செய்து, தூய்மையாக நீரை பொதுமக்களுக்கு விநியோகித்திட அறிவுறுத்தினார்.
தொடர்ந்து ஏமப்பேரில் கலைஞர் நகர்ப்புற மேம்பா ட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.148.58 லட்சம்மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணியினையும், சீத்தா ராமன் பார்க் அருகில் ரூ.115 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் மொத்தம் ரூ.384.58 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையரிடம் அறிவுறுத்தி னார். ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நகர்மன்றத் தலைவர் சுப்புராயலு, நகராட்சிப் பொறியாளர் முருகன் மற்றும் நகராட்சிப் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.
- கள்ளக்குறிச்சியில் போக்சோவில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம வெள்ளிமலை அருகே தாழ்தேவனூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சேகர் (வயது 21) இவர் கர்நாடகா மாநிலம் சிங்கமங்களூர் அருகே பண்ணூர், கங்கவெள்ளி கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். அப்போது அருகில் இருந்த பெட்டிக்கடைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு அந்த பெட்டி கடைக்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த (17) வயது மைனர் பெண்ணிடம் சேகருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சேகர் மைனர் பெண்ணுக்கு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அவருடன் போனில் பழகி வந்துள்ளார். இந்நிலையில் சேகர் சொந்த வேலைகா ரணமாக ஊருக்கு திரும்பி வந்து விட்டார். சம்பவத்தன்று மைனர் பெண் சேகரிடம் தொலை பேசியில் பேசினார். அப்போது நானும் உங்கள் ஊருக்கு வந்து விடுகிறேன் என கூறியுள்ளார். அதற்கு சேகர் புறப்பட்டு வா என சொல்லியுள்ளார். அதன்படி மைனர் பெண், அவரது தங்கை (14) அழைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி வந்தார். அவர்களை சேகர் தாழ் தேவனூருக்கு அழைத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து கடந்த 3- ந் தேதி சேகர் மைனர்பெண்ணை (17) என்பவரை பரிகம் கிராமத்தில்உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வும், மைனர் பெண்ணிடம் சேகர் உல்லாசமாக இருந்து ள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சேகர் வீட்டில் இல்லாதபோது மைனர் பெண் தனது தங்கையை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் மைனர் பெண்கள் இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படை க்கப்பட்டனர்.






