என் மலர்
கள்ளக்குறிச்சி
- அங்கிருந்து வீட்டுக்கு சென்று இரவு தூங்கச்சென்றார்.
- போலீசார் சம்ப வஇடத்திற்குவிரைந்து சென்று வழக்குபதிவு செய்துதீவிரவிசா ரணைமேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர் உளுந்தூ ர்பேட்டை நகராட்சியில் தற்காலிக ஊழியராக குடிநீர் வினியோகம் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை விருத்தாச்சலம் ரோட்டில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்றார். அங்கு போண்டா வடைபோன்றவை சாப்பிட்டு விட்டு டீ குடித்துள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு சென்று இரவு தூங்கச்சென்றார். அப்போதுதூங்கிக் கொண்டிருந்த பிரபுவிற்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சுத திணறல் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் உதவி யுடன்அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அருள் செல்வம் தலைமை யிலான போலீசார் சம்ப வஇடத்திற்குவிரைந்து சென்று வழக்குபதிவு செய்துதீவிரவிசா ரணைமேற்கொண்டு வருகின்றனர்.மேலும் உளுந்தூர்பேட்டை சுகாதார துறை அதிகாரிகள் சாலை ஓரம் உள்ள டீக்கடை போன்ற சிற்றுண்டிகளில் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
- தியாகதுருகம் அருகே ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் சித்தலூர், பானையங்கால் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலரும் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில கும்பல்கள் மட்டும் அந்த ஏரி வழியாக வயல்வெளி பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பிகளில் திருட்டுத்தனமாக கொக்கியின் மூலம் மின்சாரம் எடுத்து அதன் மற்றொரு முனையை சுமார் 20 அடி நீளம் உள்ள குச்சியின் நுனி பகுதியில் சல்லடை போன்ற இரும்பு தகடுகளில் பொருத்துகின்றனர். தொடர்ந்து மின் கம்பிகளில் இருந்து கேபிள் வழியாக செல்லும் மின்சாரம் அந்த குச்சியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுக்கு வருகிறது. அப்போது நீண்ட குச்சியின் மறுமுனையை அந்த நபர்கள் பிடித்துக் கொண்டு ஏரியில் உள்ள நீரில் அலசுகின்றனர். அப்போது சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கிறது. இவ்வாறு ஆபத்தான முறையில் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன்களை பிடித்து வருவதாக கடந்த 10- ந்தேதி மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையொட்டி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவின் படி மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்திய பிரியதர்ஷினி, மீன் வள ஆய்வாளர் சந்திரமணி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, விழுப்புரம் மீன்வள மேற்பார்வையாளர் சுதாகர் நேற்று மணிமுக்தா ஏரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் ஏரியில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்தால் உயிர் சேதம் ஏற்படும். எனவே அவ்வாறு மீன் பிடிக்கக் கூடாது .மீறி மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின் ஒயர்களில் திருட்டுத்தனமாக மின் இணைப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்கும் நபர்கள் மீது மின்சாரத் துறையினர் கடுமையாக நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரித்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் ராஜதுரை, பானையங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின நாளில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் அறிவித்துள்ளார்.
- மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
வருகின்ற 15 - ந்தேதி (திங்கள்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது என அதில் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் 11- ந்தேதி முதல் ஒரு வார காலத்திற்கு போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்க அறிவுறுத்தினார்.
அதன்படி கள்ளக்குறிச்சியில் போதை ப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
போதைப்பழக்கம் உடல்நலத்திற்கு கேடு விளை விப்பதோடு, குடும்பத்தின் அமைதியான சூழலுக்கும் தீங்கு விளைவி க்கிறது. எனவே மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பழக்கத்திற்கு உட்படாமல் இருத்தல் வேண்டும்.
மேலும் குடும்பத்தை அழிக்கக்கூடிய போதைப் பழக்கத்தை அனைவரும் தவிர்த்து குடும்ப நலத்தை பேணிக்காப்பதோடு நாளைய சமுதாய வளர்ச்சிக்கு வித்திட வேண்டும். தொடர்ந்து போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாகவும் அல்லது பயன்பாடு தொடர்பாக ஏதேனும் அறிந்தால் மாவட்ட நிர்வா கத்தின் தொலைபேசி எண் 04151-228801 வாயிலாகவும் காவல்துறைக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும் போதை ப்பொருட்கள் இல்லாத மாவட்டமாக நமது மாவட்டத்தை உருவாக்கிட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பள்ளி மாணவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள் அகியோர் போதைப்பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்மணி, கள்ளக்கு றிச்சி ஊராட்சிக்குழு தலைவர் புவனேஷ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ஹஜிதா பேகம், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீசாரகம் வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் என்கிற கட்ட சுரேஷ். பிரபல கள்ள சாராய வியாபாரி. இவரை கைது செய்ய விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் உத்தரவின் பேரில் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற வாகன சோத னையின் போது வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி பிடித்தனர். அதனை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 60 லிட்டர் சாராயம் எடுத்து வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அதனை கொண்டு வந்தது வீரபாண்டி காமன் கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ் என்கின்ற கட்ட சுரேஷ் (வயது 40) என்றும், திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்ப ள்ளத்தில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவதும் தெரிய வந்தது. மேலும் அவனிடமிருந்து 60 லிட்டர் சாராயம் மற்றும் அதனை கடத்தி வந்த மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்த துடன் சுரேஷையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருக்கோவிலூர் அருகே பஸ்சில் போதை ெபாருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுரங்கம் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் போதை பாக்குகள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த விக்ரம் சிங் (வயது 30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட விக்ரம் சிங் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், செங்கம் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை மற்றும் போதை பாக்குகள் கேட்பவர்களுக்கு பஸ் மூலம் கடத்திக்கொண்டு வந்து விநியோகம் செய்யும் பழக்கம் உள்ளவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சின்னசேலம் பள்ளி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைதுசெய்தனர்.
- ஏற்கனவே 70 பேருக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் 13-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். பள்ளி மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 17-ம் தேதி சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எதிரே நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இதில் பள்ளியில் இருந்த பஸ், காவல்துறை பஸ், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வன்முறையாளர்கள் எரித்தனர்.
இதையடுத்து, டிஜிபி சைலேந்திரபாபு வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்தும், அந்த இடத்தில் செல்போன் கோபுரங்களில் பதிவான பெயர்களை கண்டுபிடித்தும் விசாரணை நடத்தினர். அதன்படி வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் கைதானவர்களில் 64 பேருக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரத்தை அரசுத்தரப்பு வழங்கியதால் 45 பேரின் ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், மற்ற 174 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இம்மனுக்களை விசாரித்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, மேலும் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதுடன் 56 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார். மற்ற 49 பேரின் ஜாமீன் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது.
- நீர்மட்டம் 43 அடி உயர்வினால் கோமுகி அணையில் விரைவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளது.
- விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இந்த கோமுகி அணை மொத்த கொள்ளளவு 46 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். அவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய பாசனமும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டு பிறகு விவசாயத்திற்கு செல்லக்கூடிய தண்ணீர் நிறுத்தப்பட்டது இதனால் அணையில் வெறும் 15 அடி மட்டும் தண்ணீரை நிலத்தடி நீர்மட்டம் ஊறுவதற்காக நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்ப சலனம் காரணமாக கல்வராயன் மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்தை மழை பெய்தது. இதனால் கல்வராயன் மலையில் உள்ள கல்படை, மல்லிகைப்பாடி, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கண்ணாடி வரை நீர் வரத்து வந்ததால் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்தது. தற்போது நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் வெகு விரைவில் அணையில் இருந்து த ண்ணீர் திறக்கப்படும் நிலை உள்ளதால் விவசா யிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- சின்னசேலம் அருகே சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்றுச்செல்லும் அவலநிலை உள்ளது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் கிராமத்தில் தாகம் தீர்த்தபுரம் செல்லும் முக்கிய சாலையில் சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கிறது. இந்த வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் அதிக அளவில் செல்கிறார்கள். இதனால் சாக்கடை நீரை மிதித்துக் கொண்டு பள்ளிக்கு செல்லும் அவநிலையில் மாணவர்கள் உள்ளனர். இந்த சாக்கடை நீர் பல மாதங்களாகவே தேங்கி நிற்கின்றது.
தாகம் தீர்த்தாபுரத்தில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பயிலும் வாசுதே வனூரை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாக்கடை நீரை கடந்து செல்லும் பொழுது எங்கே தடுமாறி கீழே விழுந்து விடுவோமோ என்று அவதிப்பட்டு வருகி றார்கள். பள்ளி மாணவர்கள் சாக்கடை நீரை கடக்கும் பொழுது அந்த வழியாக செல்லும் பேருந்துகளால் சாக்கடை நீர்மாணவர்கள் சீருடைகள் மேல் பட்டு மீண்டும் வீட்டுக்கு சென்று மாணவர்கள் சீருடை மாற்று ச்செல்லும் அவலநிலை உள்ளது.
இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மலேரியா, டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நிறைய பேருக்கு டெங்கு நோய் வந்தது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சாக்கடை நீரை அகற்றி பள்ளி மாணவ-மாணவிகளுக்கும் பொது மக்களுக்கும் எந்த பாதிப்பும் வராதவாறு உடனடியாக அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்
- தியாகதுருகம் அருகே 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.
- இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சி தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார உதியன் தலைமையில்,தொல்லியல் ஆய்வாளர்கள் விழுப்புரம் வீரராகவன், காப்பாட்சியர் ரஷீத்கான், நூலகர் அன்பழகன், பண்ரூட்டி இமானுவேல், ஆசிரியர் உமாதேவி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சோழர்கால வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 5 அடி நீளம் 3.5 அடி அகலத்தில் உள்ள கல்லில் இருபுறமும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரு பக்கத்திலும் 2-ம் குலோத்துங்க சோழனின் 12 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு. முழுமையாகப் படித்து அறியமுடியாத 44 வரிகளைக் கொண்டது. எழுத்துகள் சிதைந்து உள்ளன. இந்த கல்வெட்டில் 2-ம் குலோத்துங்கசோழனின் "பூமேவி வளர" என்னும் மெய்க் கீர்த்தி முழுமையாக இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்வூரை பிரமதேயமாகவும், சதுர்வேதி மங்களமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊரின் பெயரை அறியமுடியாதவண்ணம் சிதைந்துள்ளது.
இங்குள்ள இறைவன் பெயரை அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் என்று அழைக்கப்படுகிறார். மிலாடு நாட்டுக்கு உட்பட்ட கிளியூரை (இன்றைய கிளியனூர்) தலைநகராகக் கொண்டு கி.பி.1133 முதல் 1150 வரை அரசாண்ட இரண்டாம் குலோத்துங்கசோழன் காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த "திருநீரேற்றான் ராஜேந்திர சோழ மலையகுலராயன்" என்ற சிற்றரசன் காலத்தில் பல்வேறு அளவுகோலால் அளவீடு செய்யப்பட்ட 4004 குழிகள் கொண்ட நிலத்தை அகத்தீஸ்வரர் ஆலயத்திற்கு தினசரி பூசைக்காகத் தானம் அளிக்கபட்ட செய்திக் காணப்படுகிறது. மேற்கண்ட நிலங்களுக்கு எல்லைகள் குறிப்பிடப் பட்டுள்ளன. முன்பக்கத்தில் 20 வரிகளுடன் முடிவடைகிறது. அடுத்தப் பக்கத்தில் 4 வரிகள் மட்டும் இந்தக் கல்வெட்டின் தொடர்ச்சி தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பக்கத்தில் மொத்தம் 24 வரிகள் உள்ளது. அதில் 4வரிகள் முன்பக்கத்திற்குரியது. கல்வெட்டின் இறுதியில் வழக்கமாகக் காணப்படும் எச்சரிக்கை வாசகம் இக்கல்வெட்டில் காணப்படவில்லை.
மேலும் மிகப்பெரிய சிவாலயம் ஒன்று இங்கிருந்ததற்கான ஆதாரமாக இப்பகுதியைச் சுற்றிக் காணப்படும் நேர்த்தியானப் பழமைவாய்ந்த, பல்வேறு அளவுகளில் உள்ள சிலைகளைக் காணலாம். இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் சிங்கார.உதியன் கூறுகையில் எங்களது மையத்தின் சார்பில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய கண்ணாடி மணி உருக்கு உலைக்கலன் வீரபாண்டி கிராமத்தில் புலிக்கல் பகுதியிலும், கல்திட்டை (டால்மன் ) திருக்கோவலூர் வட்டத்தில் உள்ள ஆதிச்சனூரிலும், அந்திலி கிராமத்தில் முதுமக்கள் தாழியையும் கண்டெடுத்துள்ளோம். இப்பகுதியும் வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பகுதி என்று இந்த ஆய்வு மூலம் வெளிப்பட்டு வருகிறது. ஆகவே மத்திய மாநில அரசுகள் இப்பகுதியில் தொல்லியல் அகழாய்வு நடத்தினால் இப்பகுதியின் தொன்மை வரலாறு வெளிப்டும் என கூறினார்.
- தியாகதுருகம் அருகே ஏரியில் மர்ம கும்பல் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
- மணிமுக்தா ஏரியில் மீன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் மணிமுக்தா ஏரி உள்ளது. இந்த ஏரியில் மீன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சித்தலூர், பானையங்கால் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த பலரும் வலைகளை வீசியும், தூண்டில் போட்டும் மீன் பிடித்து வருகின்றனர். ஒரு சில கும்பல்கள் மட்டும் மின்சாரம் செலுத்தி மீன்களை பிடித்து வருகி ன்றனர். அந்த ஏரி வழியாக வயல்வெளி பகுதிகளுக்கு மின் கம்ப ங்கள் நடப்பட்டு அதில் மின் கம்பிகள் மூலம் மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. அந்த மின் கம்பிகளில் திருட்டுத்தனமாக கொக்கி யின் மூலம் மின்சாரம் எடுத்து அதன் மற்றொரு முனையை சுமார் 20 அடி நீளம் உள்ள குச்சியின் நுனி பகுதியில் சல்லடை போன்ற இரும்பு தகடுகளில் பொருத்துகின்றனர். இவ்வாறு பொருத்தும் போது மின் கம்பிகளில் இருந்து கேபிள் வழியாக செல்லும் மின்சாரம் அந்த குச்சியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு தகடுக்கு வருகிறது.
அப்போது நீண்ட குச்சியின் மறுமுனையை அந்த நபர்கள் பிடித்துக் கொண்டு ஏரியில் உள்ள நீரில் அலசுகின்றனர். அப்போது சல்லடை பகுதியில் படும் மீன்கள் மீது மின்சாரம் பாய்வதால் மீன்கள் செத்து மிதக்கி றது. தொடர்ந்து அந்த நீண்ட குச்சியை தண்ணீ ரில் படாதவாறு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு செத்து மிதக்கும் மீன்களை இவர்கள் எடுத்துச் செல்கி ன்றனர். இவ்வாறு மீன் பிடிப்பதால் மீன் பிடிக்கும் நபர்களுக்கே மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மேலும் இதே போல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடித்த போது இறந்து போனதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகா ரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின்சாரம் செலுத்தி ஏரியில் மீன் பிடிக்கும் நபர்களை எச்சரித்து, அவர்களிடம் மின்சாரம் செலுத்தி மீன் பிடித்தால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- சங்கராபுரம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானதால் ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
கள்ளகுறிச்சி:
கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி முத்துலட்சுமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்ற நிலையில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பணம் உள்ளிட்ட மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.






