search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "damage to property"

    • வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் கூனக்கா பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது வீடு கூரை வீடு ஆகும். இரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தார்கள். பின்னர் அதிகாலை நேரம் வீட்டில் புகை வருவதை கண்ட அனைவரும் எழுந்து வீட்டின் வெளியே வந்தனர்.

    அப்போது வீட்டின் மேல் கூரைகள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு தீயை அணைக்க முயற்சி த்தனர். இருப்பிடம் மள மள என கூரை வீடு என்பதால் பற்றி கொண்டது.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை முற்றிலும் அணைத்தனர்.

    ஆனால் அதற்குள் வீடு முற்றிலும் தீயில் கருகி சேதமானது. இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள், ஆதார் கார்டு, பள்ளி, வீட்டு பத்திரங்கள், சான்றிதழ்கள் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமானது.

    முதற்கட்ட விசாரணை யில் மின் கசிவின் காரண மாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு நிலைய அலுவ லர்கள் தெரிவித்தனர்.

    • லேப்டாப் சார்ஜ் ஏற்றும்போது தீ விபத்தில் வீட்டில் பொருட்கள் எரிந்து நாசமாகியது.
    • திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெரு சேர்ந்தவர் ஆனந்தன். இவரது வீட்டில் கார் டிரைவர் மாணிக்கம் (வயது 28) குடியிருந்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி நேற்று இரவு 7 மணி அளவில் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு மெத்தையில் வைத்துள்ளார்.

    அப்போது திடீரென மின்கசிவினால் லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீ கண்ணி மைக்கும் நேரத்தில் மளமள வென எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் உடனடி யாக தீயை அணைக்க முற்பட்டனர்.

    ஆனால் தீ பற்றி எரிய தொடங்கியதால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக திருமங்கலம் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனை த்தும் எரிந்து நாசமாயின.

    • சங்கராபுரம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானதால் ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

    கள்ளகுறிச்சி:

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி முத்துலட்சுமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்ற நிலையில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பணம் உள்ளிட்ட மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

    ×