லேப்டாப் சார்ஜ் ஏற்றும்போது தீ விபத்து; வீட்டில் பொருட்கள் எரிந்து நாசம்

லேப்டாப் சார்ஜ் ஏற்றும்போது தீ விபத்தில் வீட்டில் பொருட்கள் எரிந்து நாசமாகியது. திருமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
லேப்டாப் சார்ஜ் ஏற்றும்போது தீ விபத்து; வீட்டில் பொருட்கள் எரிந்து நாசம்
Published on

திருமங்கலம்

திருமங்கலம் முகமதுஷா புரம் தேவர் தெரு சேர்ந்தவர் ஆனந்தன். இவரது வீட்டில் கார் டிரைவர் மாணிக்கம் (வயது 28) குடியிருந்து வருகிறார். இவருடைய மனைவி இந்துமதி நேற்று இரவு 7 மணி அளவில் லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டு மெத்தையில் வைத்துள்ளார்.

அப்போது திடீரென மின்கசிவினால் லேப்டாப் சார்ஜர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. தீ கண்ணி மைக்கும் நேரத்தில் மளமள வென எரிய தொடங்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த இந்திராணி வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். அக்கம் பக்கத்தினர் உடனடி யாக தீயை அணைக்க முற்பட்டனர்.

ஆனால் தீ பற்றி எரிய தொடங்கியதால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக திருமங்கலம் தீயணைப்புத் துறையி னருக்கு தகவல் கொடுத்த னர். திருமங்கலம் தீயணைப்பு அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் அனை த்தும் எரிந்து நாசமாயின.

X

Maalai Malar
www.maalaimalar.com