என் மலர்
கள்ளக்குறிச்சி
- ஆறுகளில் இரவு நேரங் களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் செம்மண்ணை திருடிச் செல்கின்றனர்.
- இதனை கண்டு ெகாள்ளாதது வேதனை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டத்திற் குட்பட்ட வடக்கநந்தல், நயினார்பாளையம் என மூன்று வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 70-க்கும் மேற் பட்ட கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் சின்ன சேலம் குறுவட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலம் தகரை கள்ளநத்தம், குரால், வடக்கநந்தல், மாத்தூர், மண்மலை கரடிசித்தூர் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆறுகளில் இரவு நேரங் களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் செம்மண்ணை திருடிச் செல்கின்றனர். மேலும் இந்த திருட்டு இரவு முதல் அதிகாலை வரை நடக்கிறது. இந்ததிருட்டை தடுக்க வேண்டிய வருவாய் துறையும் இதனை கண்டு ெகாள்ளாதது வேதனை அளிக்கிறது என பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் இதில் கவனம் செலுத்தி கிராவல் மண் மற்றும் செம்மண் போன்ற கனிம வளங்களை கொள்ளையடிப்பவர்கள் மீது கடுமையான ந டவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இந்த மணல் கொள்ளையை கண்டுகொள்ளாத அதிகாரிகள் மீதும் தக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- எதிர்பாராதவிதமாக மான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் இறந்தது.
- விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 34). இவர் சுதந்திர தின விடுமுறையில் சொந்த ஊரான சேலத்திற்கு சென்றார். விடுமுறையை கழித்துவிட்டு மீண்டும் கள்ளக்குறிச்சியில் பணி புரியும் தனியார் நிறுவனத்திற்கு செல்ல காலையில் இரு சக்கர வாகன மூலம் புறப்பட்டு வந்துள்ளார் . சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர்- பங்காரம் நெடுஞ்சாலையில் மான் சாலையை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக மான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சம்பவ இடத்திலேயே மான் இறந்தது. இருசக்கரத்தை ஓட்டி வந்த தமிழ்ச்செல்வனுக்கு நெஞ்சு பகுதியில் பலத்த அடிபட்டது. விபத்து குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சின்னசேலம் போலீசார் விபத்தில் சிக்கிய தமிழ்செல்வனை மீட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் தமிழ்ச்செல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் தொண்டநந்தல் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
- சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவை சேர்ந்த கோலஸ் மனைவி ரீத்தாமேரி(38) என்பவரை கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் போலீசார் தொண்டநந்தல் கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மேட்டு தெருவை சேர்ந்த கோலஸ் மனைவி ரீத்தாமேரி(38) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குடிபோதையில் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
- சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள காட்டு எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் வீரன்(46). தொழிலாளியான இவர் சம்பவத்தன்று காலை குடிபோதையில் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த வீரனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கள்ளக்குறிச்சியில் சுதந்திர தின விழா 321 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஷ்ரவன் குமார் வழங்கினார்.
- சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் சமாதான புறாக்கை பறக்கவிட்டு, மூவர்ண கலரில் பலூன்கள் பறக்கவிட்டார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் வெள்ளை நிற திறந்த வேனில் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் இளையராஜா தலைமையில் காவல்துறை, தீயணைப்புத்துறை, வனத்துறை, ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படை ஆகியோரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டரின் மனைவி சாந்தி பிரியா ஷ்ரவன் குமார் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை 2-பயனாளிகளுக்கும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 13 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10- பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 10 துறைகளைச் சேர்ந்த 321 பயனாளிகளுக்கு 1 கோடி ரூ.43 லட்சத்து 27 ஆயிரத்து 930 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உள்ளிட்ட 37 துறைகளைச் சார்ந்த 174 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து சுதந்திர தின சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஊராட்சிக்குழு சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா, திட்ட இயக்குனர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் வேல்விழி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, நகராட்சி ஆணையர் குமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
- சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவர்களும், பொதுமக்களும், கல்லூரி வாகனங்களும் செல்வதற்கு இடையூறாக இருந்தது.
- யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் நிதியிலிருந்து 15- வது நிதிக்குழு மானியம் மூலம் 16 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வாசுதேவனூர் கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு வழி இல்லாமல் தெருக்களிலும், சாலைகளிலும் சென்றது. இதனால் சாலையில் செல்லும் பள்ளி மாணவ மாணவர்களும், பொதுமக்களும், கல்லூரி வாகனங்களும் செல்வதற்கு இடையூறாக இருந்தது. இந்த சாக்கடை நீரால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் பல வருடங்களாகவே சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்துள்ளனர். கடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற சத்தியமூர்த்தியிடம் சாக்கடை கால்வாய் வசதி அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அந்த கோரிக்கையை உடனே நிறைவேற்றும் விதமாக யூனியன் தலைவர் சத்தியமூர்த்தி அவர்களின் நிதியிலிருந்து 15- வது நிதிக்குழு மானியம் மூலம் 16 லட்சம் செலவில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணி தொடங்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இப்பணி தொடங்கும் பொழுது ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா தனவேல், துணைத் தலைவர் தனலட்சுமி, ஒப்பந்தர் செல்வராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் கருப்பையா, கிளைச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் இருந்தனர்.
- ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டிற்காக தங்களது கிராமம் அல்லது அருகாமையில் உள்ள கிராமங்களில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் படிந்துள்ள வண்டல் மண் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம் என கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதில் விவசாயிகள் நஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 டிராக்டர் லோடுகளும், புஞ்சை நிலத்திற்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 டிராக்டர் ரோடுகளும், வீட்டு பயன்பாட்டிற்கு 10 டிராக்டர் லோடுகளும், மண்பாண்டம் தொழில் செய்ய 20 டிராக்டர் லோடு அளவிற்கு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை விலை இல்லாமல் பெற்று பயன் அடையலாம் என கூறப்பட்டது. மேலும் இவ்வாறு மண் அடிக்கும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கள் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து வருவாய் ஆய்வாளர் பரிந்துரையின் பேரில் வருவாய் கோட்டா ட்சியரிடம் அனுமதி பெற்று மண் அடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் வண்டல் மண் அடிக்க ஒரே ஒரு விவசாயி மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். ஆனால் சமூக விரோதிகள் பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் இரவு நேரங்களில் வருவாய்துறையினரிடம் அனுமதி பெறாமல் திருட்டுத்தனமாக கிராவல் மண் அடித்து வருகின்றனர். இவ்வாறு கிராவல் மண் அள்ளும் சமூக விரோதிகள் ஏரி பகுதியில் ஊருக்கு அருகே உள்ள பகுதியில் அதிக ஆழமாக அள்ளுவதாகவும், இவ்வாறு கிராவல் மண் அள்ளுவதால் மழை காலங்களில் குழந்தைகள் தண்ணீரில் மூழ்க வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் கிராவல் மண்ணை கள்ளக்குறிச்சி, உலகங்காத்தான், தச்சூர் ஆகிய பகுதிக்கு எடுத்து ச்சென்று விற்பனை செய்வதாகவும், மலைக்கோட்டாலம், விளம்பாவூர் பகுதியை சேர்ந்த சிலர் செங்க ல்சூலைக்கு அனுமதியின்றி வண்டல் மண் அள்ளிச் செல்வதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவ்வாறு ஏரியில் அனுமதியின்றி 1000- க்கும் மேற்பட்ட நடை கிராவல் மண் மற்றும் வண்டல் மண்ணை சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து ள்ளதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ஏரியில் சுமார் 10 அடி ஆழம் வரை மண் எடுப்பதாலும், ஏரியில் பல்வேறு இடங்களில் மண் எடுப்பதாலும் ஆடு, மாடுகளை கூட ஏரியில் மேய்க்க முடியாமலும், ஆடு மாடுகள் வந்து செல்லக்கூட வழி இல்லாமல் அவதிப்படுவதாகவும், ஏரியின் அமைப்பு உருக்குலைந்து காணப்படு வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் சமூக விரோதிகள் அனுமதியின்றி மண் எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதாகவும், இதனால் அதிகாரிகள் சமூக விரோதிகள் மண் அடிப்பதை கண்டு கொள்வதில்லை என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இவ்வாறு பெரிய ஏரியில் மணல் கொள்ளை தொடர்ந்தால் அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர்.
எனவே மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் நேரில் சென்று ஆய்வு செய்து இதுவரை எத்தனை பேர் வண்டல் மண் அடிக்க அனுமதி பெற்றுள்ளனர், இந்த ஏரியில் இருந்து மண் வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு செல்கிறதா? ஏரியில் எவ்வளவு மண் அள்ளப்பட்டுள்ளது. இந்த ஏரியில் மண் அள்ளும் பள்ளத்தால் குழந்தைகள் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பவர்களுக்கு பாதிப்பு உள்ளதா? சமூகவி ரோதிகள் திருட்டுத்தனமாக மண் அள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனரா? என்பது குறித்து விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 171 மலை கிராமங்கள் உள்ளன. இதில் குண்டியாநத்தம், ஊராட்சிக்கு உட்பட்டது கருவேலம்பாடி, சின்ன கருவேலம்பாடி, மேட்டுவளவு கிராமங்கள். இந்த 3 கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1000 மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக சாலை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் இந்த கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நொச்சிமேடு கிராமத்தில் இருந்து 5 கிலோமீட்டர் கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் தான் செல்ல வேண்டும் இந்தபகுதி மக்கள் அவசரத்துக்கு கூட மருத்துவத்திற்கோ அத்தியாவசிய பொருட்களை வாங்க வர முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மண் சாலைகள் அமைத்து அதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பகுதி மக்கள் சாலை வசதி வேண்டுமென்று பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நொச்சி மேடு முதல் கருவேலம்பாடி வரை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு 1 கோடியே 54 லட்சம் தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணியும் அப்பொழுது தொடங்கப்பட்டது. ஆனால் அப்போதைய வனத்துறையினர் இந்த கிராமத்திற்கு சாலை அமைக்க கூடாது. இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சாலை அமைக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினார்கள். அதன் பிறகு தார்சாலை அமைக்க வனத்துறையினரிடம் அனுமதி கேட்டு மனு அளித்தனர். அதன்பிறகு ஒரு வருடத்திற்கு பிறகு 2022 ஜூலை மாதம் கருவேலம்பாடி கிராமத்திற்கு சாலை அமைக்க அதுவும் 2.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டுமே வனத்துறை அனுமதி வழங்கியது.
இருந்தாலும் 21/2 கிலோமீட்டர் முதலில் சாலை பணியை தொடங்கி விடலாம் என்று ஊராகவளர்ச்சித் துறையினர் ஜூலை 15ஆம் தேதி உதயசூரியன் எம்.எல்.ஏ. வைத்து பூமி பூஜை போட்டு சாலை பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின் சாலை பணிகள் தொடங்கி ஜல்லி கொண்டுவரப்பட்டு சாலைகள் சீரமைக்கும் பணியும் தொடங்கியது. ஆனால்மீண்டும் வனத்துறையினர் வனத்துறைக்கு சொந்தமான இடம் எது என்று முதலில் அளவீடு செய்து வனத்துறையிடம் காண்பித்து விட்டு அதன் பிறகு நீங்கள் சாலைகள் போட வேண்டும் என்று கூறி வனத்துறையினர் மீண்டும் சாலை பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வந்த அப்பகுதி மக்களுக்கு இப்போது தான் சாலை வசதி வருகிறது என்று நிம்மதியாக இருந்தனர் ஆனால் அதையும் தடுத்து நிறுத்தி உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையில் உள்ளனர்.
- கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
- அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
தமிழகம் முழுவதும் கடந்த 11- ந்தேதி முதல் வருகின்ற 18- ந்தேதி வரை போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சியில் வட்டார போக்குவரத்துத்துறையின் சார்பில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஆட்டோ பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் போதைபொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்களுடன் சுமார் 145 ஆட்டோக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி ஏமப்பேரில் நிறைவடைந்தது.
முன்னதாக ஆட்டோ பேரணியில் கலந்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ்,மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு) விஜய கார்த்திக்ராஜ், கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்திகணேஷ், கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்துஅலுவலர் ஜெயபாஸ்கரன், மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பிள்ளை (55).
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தண்டராமன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் சாலையில் பைப் லைன் அமைப்பதற்காக கிராம ஊராட்சி சார்பில் பள்ளம் தோன்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பி ள்ளை (55)ஆகியோர் உத்தண்டராமன் தான் பள்ளம் தோண்டி யதாக தவறாக நினைத்துக் கொண்டு, அவரைத் திட்டி அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் படியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிவேல், சின்னப்பிள்ளை ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- சமூக விரோதிகளின் கூடாரமான கல்வராயன்மலை மாறி வருகிறது.
- எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து இந்த மலையில் சாராயம் காய்ச்சுவதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையத்தில் கல்வராயன் மலை உள்ளது. இந்த மலை சுமார் 2,000 சதுர பரப்பளவு கொண்டது. 171 மலை கிராமங்களை கொண்ட 75,000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் இங்கு வசிக்கின்றனர். மேலும் இந்த மலை அடர்ந்த வனப் பகுதிகளைக் கொண்டது. சேலம், தர்மபுரி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி இவர்களை இணைக்கும் முக்கிய பகுதியாக விளங்கிறது.இந்த கல்வராயன் மலையில் வனவிலங்குகள் இல்லை. மேலும் இது உயரம் குறைவான மலையாக உள்ளது. ஆனால் மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளதால் சமூக விரோதிகளுக்கு உகந்த மலையாக உள்ளது.
சமூக விரோதிகள் அதிகமாக இங்கு இருப்பதால் சாதாரண பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வர அச்சப்படுகின்றனர். இதனால் சமூக விரோதிகள் மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகள் மிகவும் எளிதாக சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான பொருள்களை கொண்டு செல்கின்றனர். பின்னர் அவர்கள் கல்வராயன் மலையில் நீரோடை ஓரமாக கள்ளச்சாராயம் காய்சுகின்றனர்.இங்கு காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், மற்றும் மலை அடிவாரத்தில் உள்ள மாவட்டங்கள், பல்வேறு இடங்களுக்கு விற்பனை ஆகிறது.
இதனை தடுக்க கச்சிராய பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார். இவரது சோதனையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் லிட்டர் சாராய ஊறல் கொட்டி அளிக்கப்பட்டது. மேலும் 150 -க்கு மேற்பட்ட கள்ளச்சார வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
இருந்த போதிலும் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் தரப்பில் எடுத்து வருகின்றனர். மேலும் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும் சமூக விரோதிகள் தொடர்ந்து இந்த மலையில் சாராயம் காய்ச்சுவதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்த பகுதியை சேர்ந்த மதுவிலக்கு போலீசார் உடனடியாக இதில் தலையிட்டு சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் கல்வராயன் மலையை சமூக விரோதிகளின் அவர்களின் பிடியிலிருந்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.
கள்ளக்குறிச்சி:
கல்வராயன் மலையில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வருவதாக கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கல்வராயன் மலை அடிவாரம் அம்மாபேட்டை கிராமம் தண்ணீர் டேங் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்தார். வாலிபர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார். உடனே போலீசார் அந்த மூட்டைகளை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அதில் 60 லிட்டர் சாராயம் இருந்தது. இதையடுத்து சாராயத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரணை செய்து தப்பி ஓடிய வாலிபரை தேடி வருகிறார்கள்.






