என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • கல்வராயன் மலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க 5 தனிப்படைகள் அமைத்து பதிக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தையும் போலீ–சார் கண்டுபிடித்து அழித்தனர்.
    • போலீஸாரின் அதிரடி நடவடிக்கையால் சாராய வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை 171 மலை கிராமங்களும், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களும் வசித்து வருகிறார்கள்.

    இந்த கல்வராயன் மலை–யில் கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் ஒரு அடர்ந்த வனப்பகுதியாகவும் இந்த கல்வராயன் மலை உள்ளது. வனப்பகுதி நீரோடை–களில் வரும் தண்ணீரை பயன்படுத்தி சில சமூக விரோ–திகள் கள்ளச்சா–ராயம் காய்ச்சி, அவற்றை கல்வராயன்மலை அடி–வாரப் பகுதியான சின்ன–சேலம், கல்லாநத்தம் வழியா–கவும், அதேபோல் சங்கராபுரம், மூலக்காடு, லக்கிநாயக்கன்பட்டி வழியாகவும், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் பல்வேறு மாவட்டங்க–ளுக்கும் லாரி டியூப்களில் சாராயம் கடத்திச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இவற்றை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு பகலவன் தீவிர முயற்சி செய்து வருகிறார். அதன் அடிப்படையில் சின்னசேலம் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப் பட்ட வீடியோ சமூக வலை–தளங்களில் பரவியதின் அடிப்படையில் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் கூண்டோடு இடம் மாற்றம் செய்யப் பட்டார்கள். அது மட்டுமின்றி 5-க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு போலீஸ் நிலை–யங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

    இதற்கு எல்லாத்துக்கும் மூலகாரணமாக இருக்கும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதை தடுத்து நிறுத்தினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சா–ராயம் இருக்காது என்ற ஒரு நோக்கத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமை யில் தியாகதுருகம் சப்-இன்ஸ்பெக்டர் குணசே–கரன் சங்கராபுரம் சப்-–இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி, கச்சிரா–யப்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, என 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் கல்வ–ராயன் மலையில் கள்ளச்சா–ராயத்தை ஒழிக்கும் நட–வடிக்கையில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற–னர்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று கல்வராயன் மலை–யில் உள்ள சேத்தூர், ஆரம்பூண்டி, மேல்பாச்சேரி, கிணத்தூர், கெடார் என பல்வேறு கிராமங்களில் உள்ள வனப்பகுதி களுக்கு சென்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சு–வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5000 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

    மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதற்கு தயாராக லாரி ட்யூப்களில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தையும் போலீ–சார் கண்டுபிடித்து அழித்த–னர். இந்த அதிரடி நடவடிக்கை–யால் சாராய வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர். மலை–வாழ் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவைகள் பல்வேறு நடவடிக்கைக ள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம்அணியாமல் செல்லுதல், 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், முக்கியமாக கைப்பேசியில் பேசிக்கொண்டே இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தை இயக்குவது பெரும்பாலான விபத்து க்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும்4 சக்கர வாகனங்களில் வாகன ஓட்டுநர் மட்டுமின்றி வாகனத்தில் பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து, சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருண் ஆதித்யா (4) என்பவர் கடந்த மாதம் 7- ந்தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டார்.
    • பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அக்கராயபாளையம் கிராமத்தைச் சேர்ந்த லோக நாதன். மனைவி கவுரி (வயது 35), இவரது குழந்தை தருண் ஆதித்யா (4) என்பவர் கடந்த மாதம் 7- ந்தேதி நள்ளிரவு காணாமல் போய்விட்டார். இதுகுறித்து கவுரி கொடுத்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி குழந்தை யை கடத்திய கச்சிராபாளை யம் அருகே ஊத்தோடை, அக்கரைக்காடு பகுதி யைச் சேர்ந்த சுந்தர சோழன் (42), கச்சிராயபாளை யம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்டர்ஜாய் (33), கல்வராயன் மலை அருகே சுண்டகபாடி கிராமத்தைச் சேர்ந்த அருள்செல்வம்(29), இதே கிராமத்தைச்சேர்ந்த ரகுபதி ஆகியோர் கைது செய்யப்பட்டு குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்ப டைக்கப்பட்டது.

    கைதான அனைவரும் தொடர்ந்து மேற்படி கிராமத்தில் பொது அமை திக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் குழந்தையை கடத்திய குற்றச்செயலில் ஈடுபட்ட துடன் பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி யும், அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி வந்தனர். எனவே இவர்கள் வெளியே இருந்தால் வரும் காலங்களில் தொட ர்ந்து இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட க்கூடும் என்பதால், இவர்கள் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பகலவன் ஓராண்டு குண்டர் தடுப்புக்காவல்  சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். அதன்படி கள்ள க்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மேற்படி நபர்களை ஓராண்டு குண்டர் தடுப்பு க்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். அதன்படி 4 பேரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார்.
    • திருக்கோவிலூர் காவல் துறை, திருக்கோவிலூர் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் உட்கோட்ட போலீசார் சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமை தாங்கினார். தாசில்தார் குமரன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு ஊர்வலம் தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங் களை முழங்கியவாறும் விழிப்புணர்வு பதாகை களை கையில் ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் திருக்கோவி லூர் இன்ஸ்பெக்டர் பாபு, மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இள வழகி, வருவாய் ஆய்வாளர் சிட்டிபாபு உள்ளிட்ட வர்களும் கலந்து கொண்ட னர். முடிவில் திருக்கோவி லூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் நன்றி கூறினார்.

    அதேபோல் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், திருக்கோவிலூர் இன்ஸ் பெக்டர் பாபு, போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் சத்யன், சப்-இன்ஸ் பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பேசினர். போதைப் பொருள் எதிர்ப்பு நாளை முன்னிட்டு திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு, பஸ் நிலையம், ஏரிக்கரை மூலை மற்றும் தெற்கு தெரு வழியாக 5 முனை ரோடு வரை ஹெல்மெட் ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருக்கோவிலூர் காவல் துறை, திருக்கோவி லூர் போக்குவரத்து துறை மற்றும் பொதுமக்கள் இணைந்து கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.
    • ற்றுலா பயணிகளின் கார், இரு சக்கர வாகனங்கள் படகு குளத்திற்கு உள்பகுதிக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஏழைகளின் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. இங்கு புதுவை, கடலூர், சென்னை, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதற்கு ஏதுவாக கரியாலூர் - வெள்ளிமலை சாலையில் வனத்துறை சார்பில் படகு குளம் அமைக்கப்பட்டு படகு சவாரி செய்வதற்காக 9 படகுகளும் உள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் படகு குளத்தில் மூழ்கிக் கொண்டு தண்ணீர் செல்வதால் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 2 நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.  மேலும் சுற்றுலா பயணிகளின் கார், இரு சக்கர வாகனங்கள் படகு குளத்திற்கு உள்பகுதிக்கு சென்று வர தடை விதிக்கும் விதமாக படகு குளத்திற்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் வனத்துறை சார்பில் 2 செக் போஸ்ட்கள் போட்டு வைத்துள்ளார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் இனிமேல் இருசக்கர வாகனமோ அல்லது கார், வேன் போன்ற வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் படகு குளம் பகுதிக்கு செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 செக்போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் படகு குளத்திற்கு செல்ல தடை இருப்பதாக கருதி தற்போது சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துள்ளது.

    • சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது.
    • சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளநத்தம் ,பாண்டியன் குப்பம், சமத்துவபுரம், அம்மையகரம் ,சின்னசேலம், தாகம் தீர்த்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் சாராய விற்பனை படுஜோராக நடந்து வந்தது. சாராய விற்பனையால் மது பிரியர்கள் காலையிலேயே சாராயம் அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் நிலவியது. இதன்காரணமாக பல்வேறு குடும்பத்தினர் மன உளைச்சலால் நிம்மதி இன்றி இருந்து வந்தனர். எனவே கள்ளச்சாரயத்தை தடுக்க சமூக ஆர்வலர்கள் பலமுறை போலீசாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.கள்ள சாராயம் விற்பனை குறித்து செய்திகள் வெளியானது.

    எனவே சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசாரை கூண்டோடு போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மாற்றம் செய்தார்.  அதன்படி சின்னசேலத்தில் பணிபுரிந்த நாராயணசாமி, தேவமூர்த்தி, தேவேந்திரன், ராபர்ட் ஜான், ஆகியோர்களை கள்ள க்குறிச்சி, கச்சிரா யபளையம், பகண்டை எக்ஸ் கூட்ரோடு ஆகிய போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கீழ் குப்பம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த ராஜேந்திரன், கோவிந்தராஜ், சேட்டு, நந்தகோபால், ஆறுமுகம் உள்ளிட்டோர் கச்சிராய பாளையம், திருநாவலூர், உளுந்தூ ர்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

    • பூவரசிக்கும், பால்ராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது.
    • கரியாலூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள கென்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பூவரசி. இவருக்கும், தாழ் கெண்டிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து இரு கோஷ்டியினரும் மோதி கொண்டனர். இது குறித்து கரியாலூர் போலீஸ் நிலையத்தில் இரு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பூவரசி கொடுத்த புகாரில் பால்ராஜ், கணேசன், லட்சுமணன் ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் பால்ராஜ் கொடுத்தாரின் பேரில் கிருஷ்ணன், ராஜ்குமார், சசிகுமார், தமிழ்மணி ஆகிய 4 பேரும் மீதும் என இரு தரப்பிலும் சேர்த்து மொத்தம் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளி பேருந்துகள், கட்டிடங்கள் முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட, அனைத்து பொருட்களும் சேதம் அடைந்தது.
    • போட்டோ, வீடியோக்களை ஆதாரங்களை கொண்டு கைது செய்து வரும் சிறப்பு புலனாய் குழு போலீசார் மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து என அறிவித்துள்ளனர்

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில கடந்த மாதம் 13-ந் தேதி அன்று மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீமதி மாணவிக்கு நீதி கேட்டு மாணவியின் பெற்றோர் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று. அது 17ஆம் தேதி அன்று மிகப்பெரிய ஒரு வன்முறையாக மாறியது. இதில் பள்ளி பேருந்துகள், கட்டிடங்கள் முக்கிய ஆவணங்கள், உள்ளிட்ட, அனைத்து பொருட்களும் சேதம் அடைத்தது. வன்முறையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சிறப்பு புலனாய் குழு அமைத்து வன்முறையில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

    இதில் பள்ளி கட்டிடங்களையும், சான்றிதழ்களையும், பேருந்துகளையும் சேதப்படுத்தியவர்களை நேற்று முன் தினம் வரை 327 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேருந்துக்கு தீ வைத்ததாகவும் பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் பஸ் மீது கல் இருந்ததாகவும் போட்டோ, வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த சந்தோஷ் (வயது 22), சங்கராபுரத்தை சேர்ந்த நவீன்குமார், (வயது 21) சின்னசேலத்தை சேர்ந்த மணிவர்மா (வயது 21), உளுந்தூர்பேட்டை சேர்ந்த முருகன் வயது 20, மேலும் நான்கு பேரை நேற்று கைது செய்தனர். இதனால் கைது எண்ணிக்கை 331 ஆக உயர்ந்தது. போட்டோ, வீடியோக்களை ஆதாரங்களை கொண்டு கைது செய்து வரும் சிறப்பு புலனாய் குழு போலீசார் மேலும் கைது நடவடிக்கை தொடர்ந்து என அறிவித்துள்ளனர்.

    • திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
    • விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் பஸ் நிலையத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு கிடைத்து தகவலின் பேரில் திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து போலீசார் சோதனை செய்த போது அவரிடம் தடை செய்யப்பட்ட போதை, புகையிலை மற்றும் பாக்குகள் ஆயிரம் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதை விற்பனை செய்த ஆடூர் கொளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (வயது 60) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே அரியலுார் துணை மின்நிலைய பராமரிப்பு பணி நாளை (18-ந் தேதி) நடக்கிறது.
    • சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலுார் துணை மின்நிலைய பராமரிப்பு பணி நாளை (18-ந் தேதி) நடக்கிறது. எனவே அரியலுார், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், வடகீரனுார், மையனுார், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவரியார்பாளையம், வடமாமாந்துார், ஈருடையாம்பட்டு, கடுவனுார், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால், ஏந்தல் உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யபடுகிறது.

    • சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் துணை மின் நிலையத்தில்நாளை (18-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கணியாமூர், சின்னசேலம், தொட்டியம், நமச்சிவாயபுரம் பைத்துந்துறை, எளியத்தூர் பங்காரம், வினை தீர்த்தபுரம், தச்சூர், தென் கீரனூர், உலகம் காத்தான், இந்திலி, மலைக்கோட்டாலம், சிறுவத்தூர், ராயர் பாளையம், நாட்டார்மங்கலம், லட்சியம், காட்டனத்தல், தென்தொரசலூர், மேலூர், ஏரவார், பொற்படாகுறிச்சி, விளம்பாவூர் ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தகா யங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த அருளின் உடலை மீட்டனர்.
    • உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி மகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா குனலவாடி பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 45) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்.இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் முதல் மனைவி சில வருடங்களுக்கு முன் இவரை விட்டு சென்றுவிட்டார். தற்போது 2-வது மனைவி ஆரியமாலாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு செல்வதாக வீட்டில் சொல்லிவிட்டு நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து இன்று காலை வடமாம்பாக்கம் வயல்வெளி காட்டுப்பகுதியில் அருள் மர்மமான முறையில் உடலில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக வயல்வெளிக்கு வேலைக்கு சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இ ன்ஸ்பெக்டர் அசோகன், தனிப்பிரிவு தலைமை காவலர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தகா யங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்த அருளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி மகேஷ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து போலிசார் வழக்குபதிவு செய்து இவரை யாரேனும் கொலை செய்து இருக்கலாமா ? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மமான முறையில் அருள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×