என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • தாய் கிணற்றில் விழுவதை பார்த்த ஜோதிகா கூச்சலிட்டார்.
    • ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூ.பாலப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். அவரது மனைவி தேவிகா (வயது 45) இவர் அதே கிராமத்தில் மதுரா காந்திநகர் பகுதியில் கண்ணன் என்பவரது கிணற்றின் அருகே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தார். கிணற்றின் அருகே இவரது மகள் ஜோதிகா நின்று கொண்டிருந்தார்.

    அப்போது கால் தவறி தேவிகா 100 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்தார். தாய் கிணற்றில் விழுவதை பார்த்த ஜோதிகா கூச்சலிட்டார். அப்போது அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் இதுகுறித்து தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் மூழ்கி இறந்து கிடந்த தேவிகா உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஜோதிகா கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பா அருசூக லப்பட்டு-தெத்துகாடு சாலை ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

    அப்போது இறந்து கிடந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? மேலும் அவர் நீல நிற ஜாக்கெட், ரோஸ் கலர் புடவை அணிந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை பகுதியில் குரும்பாலூர், குரும்பாலூர் ஏரிக்கரை உள்ளிட்ட மலை கிராம பகுதியில் சாராயம் காய்ச்சுவதாகவும், விற்பதாகவும் கிடைத்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி பகலவன் உத்தரவின்பேரில் கச்சிராய பாளையம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மேற்பார்வையில் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் சாராய ரெய்டு செய்தனர்.

    கரியாலூர் 5 சப்இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், தலைமை காவலர் மாரியப்பன் உள்ளிட்ட போலீசார் குரும்பாலூர் மற்றும் ஏரிக்கரை பகுதியில் சாராய ரெய்டு செய்தனர்.

    அப்போது 4 பேரல்களில் இருந்த 2000 லிட்டர் ஊறல் மற்றும் 500லிட்டர் விஷ சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர். இதுகுறித்து கரியாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை, அருணாசலம் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சியில் ரோந்து பணியில் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீத்தாங்கரை ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் (வயது 30), நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (24), கள்ளக்குறிச்சி கரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (21) இதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் (21) என தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பிரித்துக் கொண்டிருந்தனர். . இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    • வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    அரகண்டநல்லூர் அருகே சு.கொல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகதாஸ்அவரது மகன் சுதர்சன். (வயது 25;) பி.இ., பட்டதாரி. வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்த சுதர்சன், நேற்று உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுஅங்கு அவர் இறந்தார்.இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    • சங்கராபுரம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    • ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி சங்கராபுரம் அருகே தொண்டனந்தல் கிராமத்தைச் சேர்ந்த யோகிதாஸ் (29) என்பவர் கடந்த மாதம் 15-ந் தேதி அவரது வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் விற்பனை செய்யும்போது பகண்டை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 114 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது. இவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளச்சாரயம் விற்பனை செய்யும் குற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர் மீது பகண்டை காவல் நிலையத்தில் கள்ளச்சாராயம் கடத்திய மற்றும் விற்பனை செய்த பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர் தொடர்ந்து இதுபோன்று மதுவிலக்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவர் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் க்கு பரிந்துரை செய்தார். அதன்படி மேற்படி நபரை ஓராண்டு தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி யோகிதாஸை, போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.

    • சங்கராபுரம் பகுதியில் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டியன் தலைமையிலான போலீசார் சங்கராபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிரு ந்தனர். தியாகராஜபுரம் ஏரிக்கரை அருகில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த மீனாட்சி (வயது 40), மற்றும் வீட்டின் அருகில் சாராயம் விற்ற நெடுமானூர் கிராமத்தைச்சேர்ந்த முத்தம்மாள் (34), மொட்டையம்மாள் (58), சங்கராபுரத்தை சேர்ந்த ஏழுமலை (54) ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பின் அவர்களை கைது செய்து அவர்களிடம் 41 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து அழித்தனர்.இதே போன்று வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொ ண்டிருந்தனர். அப்போது சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த மூலக்காடு பகுதியை சேர்ந்த குமார் (48), கொடியனூர் வெள்ளையன் (40), சின்னபுளியங்கொட்டை பிரபு (31), ரங்கப்பனூர் ராஜேந்திரன்(55) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின் அவர்களிடம் இருந்து 100 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • சங்கராபுரம் அருகே அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சத்தான உணவுகளை மாணவ-மாணவி களுக்கு வழங்கிட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ-மாணவிகளின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்த அவர் மதிய உணவு தரமானதாகவும், சுவையாகவும் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்து தரமான சத்தான உணவுகளை மாணவ-மாணவி களுக்கு வழங்கிட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் பள்ளி வகுப்பறைகளை ஆய்வு செய்த கலெக்டர் பயன்பாட்டில் இல்லாத பழுதடைந்த கட்டிடங்களை முறையான அனுமதி பெற்று இடித்து அகற்றிடவும், கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும், போதிய தண்ணீர் வசதி ஏற்படுத்தி தரவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் ஜெசிந்தாமேரி, ஆசிரியர் லூர்துமேரி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கள்ளக்குறிச்சியில் கெட்டுப்போன 110 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாக கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன், விழுப்புரம் மீன்வள மேற்பா ர்வையாளர் சுதாகர் ஆகியோர் அப்பகுதியில் உள்ள மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கெட்டுப்போன நிலையில் இருந்த சுமார் 110 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்தக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தியதாக கடை உரிமையாளருக்கு ரூ.2000 அபராதம் விதித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், இவ்வாறு கெட்டுப்போன மீன்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரை எச்சரித்தனர். கள்ளக்குறிச்சி மீன் மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் 110 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
    • இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

     சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிந்து கொண்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிறகு காலை 6 மணி முதல் சின்னசேலத்தில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் காலையிலே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பக்தர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு காலை 10 மணிக்கு மழை நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.

    • கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் ஏற்பட்டது.
    • கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 பேரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தொடர்ந்து தேடி கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சின்னசேலம் அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், கோமதுரை, மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் ஆகிய 3 பேரையும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 பேரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கைது எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.

    • மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 29) கூலி தொழிலாளி, இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது இவரது மனைவி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது பருத்தி வயலுக்குச் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்ததார். இதனை கண்ட அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இது குறித்து இவரது மனைவி தேவகி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×