என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் ரோந்து: கஞ்சா வியாபாரிகள் 4 பேர் அதிரடி கைது
- கள்ளக்குறிச்சியில் ரோந்து பணியில் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீத்தாங்கரை ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் (வயது 30), நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (24), கள்ளக்குறிச்சி கரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (21) இதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் (21) என தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பிரித்துக் கொண்டிருந்தனர். . இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.
Next Story






