சங்கராபுரம் அருகே சாலை ஓரத்தில் பிணமாக கிடந்த பெண்

வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தெத்துகாடு சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணை படத்தில் காணலாம்.
தெத்துகாடு சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணை படத்தில் காணலாம்.
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பா அருசூக லப்பட்டு-தெத்துகாடு சாலை ஓரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக சங்கராபுரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது இறந்து கிடந்த பெண் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? மேலும் அவர் நீல நிற ஜாக்கெட், ரோஸ் கலர் புடவை அணிந்துள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த பெண் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com