என் மலர்

  நீங்கள் தேடியது "Wife scolds"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  • சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.

  கள்ளக்குறிச்சி:

  கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 29) கூலி தொழிலாளி, இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது இவரது மனைவி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது பருத்தி வயலுக்குச் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்ததார். இதனை கண்ட அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இது குறித்து இவரது மனைவி தேவகி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

  ×