என் மலர்
நீங்கள் தேடியது "சின்னசேலம் கலவரம்"
- கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் ஏற்பட்டது.
- கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 பேரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. இது தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தொடர்ந்து தேடி கண்டுபிடித்து கைது செய்து வருகிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டு பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சின்னசேலம் அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், கோமதுரை, மூங்கில் பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் ஆகிய 3 பேரையும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கைது செய்தனர். கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்பட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த 3 பேரையும் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால் கைது எண்ணிக்கை 338 ஆக உயர்ந்துள்ளது.






