தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்: 2 பேர் மீது வழக்கு பதிவு

தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பிள்ளை (55).
தியாகதுருகம் அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்:  2 பேர் மீது வழக்கு பதிவு
Published on

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உத்தண்டராமன் (வயது 65) இவர் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்புறம் உள்ள சிமெண்ட் சாலையில் பைப் லைன் அமைப்பதற்காக கிராம ஊராட்சி சார்பில் பள்ளம் தோன்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிவேல் (35)மற்றும் இவரது தாய் சின்னப்பி ள்ளை (55)ஆகியோர் உத்தண்டராமன் தான் பள்ளம் தோண்டி யதாக தவறாக நினைத்துக் கொண்டு, அவரைத் திட்டி அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் படியை சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து உத்தண்டராமன் கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் மணிவேல், சின்னப்பிள்ளை ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com