தியாகதுருகம் அருகே செல்போன் கடையில் தகராறு- 7 பேர் மீது வழக்கு பதிவு

தியாகதுருகம் அருகே செல்போன் கடையில் தகராறு- 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.செல்போன் கடைக்குச் சென்று பொருள் வாங்கியுள்ளார். இந்நிலையில் பொருள் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது
தியாகதுருகம் அருகே  செல்போன் கடையில்  தகராறு- 7 பேர் மீது வழக்கு பதிவு
Published on

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் ஜெய்சங்கர் (வயது 29)இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த காண்டீபன் (45) என்பவர் செல்போன் கடைக்குச் சென்று பொருள் வாங்கியுள்ளார். இந்நிலையில் பொருள் வாங்கியதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு காண்டீபன் மகன்கள் திருக்குமரன் (23) தமிழ் குமரன் (27) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஜெய்சங்கர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஜெய்சங்கரின் அண்ணன் பெருமாள் சண்டையை விலகியதாக கூறப்படுகிறது.

அப்போது காண்டீபன், திருக்குமரன், தமிழ் குமரன் ஆகியோர் பெருமாளை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . இதுகுறித்து இரு தரப்பினரும் வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதில் ஜெய்சங்கர் கொடுத்த புகாரின் பேரில் காண்டீபன், திருக்குமரன், தமிழ்குமரன் ஆகிய 3 பேர் மீதும், தமிழ்குமரன் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் அவரது மனைவி ராஜேஸ்வரி, ஜெய்சங்கர் அவரது மனைவி கவிதா பேர் மீதும், ஆக மொத்தம் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com