என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே ரேஷன் பொருட்கள் வாங்குவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக தீக்குளிக்க முயன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (வயது 23), இவர் நேற்று முன்தினம் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அமரம்பேடு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (19) இவர் 3-க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பொருட்கள் வாங்க வந்த பவித்ரா நான் ஒரு கார்டுக்கு பொருட்கள் வாங்கி கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் பாலாஜிக்கும், பவித்ராவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த பவித்ராவின் சகோதரர் வினோத் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அது கைகலப்பாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் பவித்ரா சோமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பாலாஜி தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்றுக்கொண்ட சோமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் பாலாஜியின் தந்தை தாமோதரன் சோமங்கலம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் பவித்ராவின் சகோதரர் வினோத் நேற்று முன்தினம் இரவு தங்கள் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதாக புகார் அளித்தார். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று சோமங்கலம் போலீஸ் நிலையத்துக்கு வந்த வினோத் நாங்கள் அளித்த புகாரின் பேரில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தாமதப்படுத்தியதாக கூறி கேனில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை பார்த்த சோமங்கலம் போலீசார் வினோத்தை காப்பாற்றி அவரது உடல் மீது தண்ணீரை ஊற்றினர். வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது சம்பந்தமாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நெதர்லாந்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.6½ லட்சம் போதைப்பொருட்கள் பிடிபட்டது.
சென்னை:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய சரக்கு பிரிவு தபால் நிலையத்திற்கு நெதர்லாந்து நாட்டில் இருந்து 2 பார்சல்கள் வந்திருந்தன. இந்த பார்சல்களை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, நாமக்கல், சென்னை முகவரிகளுக்கு வந்த 2 பார்சல்களில் பரிசு பெட்டி, சூப் என இருந்தது. இவற்றை சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அதில், நாமக்கல் முகவரிக்கு வந்த பார்சலுக்குள் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நில நிற போதை மாத்திரைகள் இருந்தன. சென்னை முகவரிக்கு வந்த பார்சலில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 26 கிராம் போதை பவுடர் இருந்தது.
மேலும் அதிகாரிகள் விசாரித்த போது, பார்சல்களில் இருந்த முகவரிகள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து ரூ.6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 மாதங்களுக்கு பின் மீண்டும் தபால் பார்சல்களில் போதை மாத்திரைகள் கடத்தப்பட்டிருப்பது சுங்க இலாகா அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷவாயு தாக்கி 3 பேர் பலியான வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள காட்ரம்பாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உணவு தயாரிக்கும் மையம் இயங்கி வந்தது. இங்கு உள்ள கழிவுநீர் தொட்டியில் இருந்து நேற்று முன்தினம் கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது, பாக்கியராஜ், (வயது 40) முருகன், (42) மற்றும் ஆறுமுகம், (50) ஆகியோர் விஷவாயு தாக்கி இறந்தனர்.
இது சம்பந்தமாக சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக உணவு தயாரிக்கும் மையம் நடத்தி வந்த ஆவடியை சேர்ந்த வெங்கடேசன் (38) மற்றும் இடத்தின் உரிமையாளர் கோவில்பட்டி தாலுகா துறையூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ் (40) ஆகிய இருவரையும் சோமங்கலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரகடம் அருகே வீட்டில் படுத்துக் கொண்டிருந்த மூதாட்டி மீது பாம்பு கடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படப்பை:
காஞசீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதம், (வயது 80). மூதாட்டியான இவர், நேற்று முன்தினம் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது காலில் பாம்பு கடித்து உள்ளது.
இதனை கண்ட மூதாட்டி அலறியடித்து எழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓரகடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர், மதுராந்தகம், காஞ்சீபுரம் தொகுதிகளை சேர்ந்த தே.மு.தி.க. செயல்வீரர்கள் கூட்டம் உத்திரமேரூரில் நடந்தது. இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தில் கண்டிப்பாக விஜயகாந்த் கலந்து கொள்வார். விஜய பிரபாகரன் தேர்தலில் போட்டியிடுவாரா என்று கேட்டபோது தேர்தல் தேதி அறிவிக்கப்படும் போது தே.மு.தி.க. பொதுக்குழு, செயற்குழு கூடி இதுகுறித்து அறிவிக்கப்படும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவவாறு அவர் கூறினார்.
காஞ்சீபுரத்தில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் சர்வ தீர்த்த குளத்தில் நேற்று காலை ஒரு பெண்ணின் உடல் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் இதுகுறித்து சிவ காஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பூங்கொடியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் அந்த பெண் காஞ்சீபுரம் வெள்ளைக்குளம் பகுதியை சேர்ந்த பூங்கொடி (வயது 48) என்பது தெரியவந்தது.
அவர் கடந்த பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அவதிக்குள்ளாகி இருந்தார் என்பதும் மனவருத்தத்தில் இருந்த அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
பூங்கொடியின் மகன்கள் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவரை அழைத்து் செல்ல இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரகடம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
படப்பை:
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், (வயது 25). இவருக்கும் எழிச்சூர் பகுதியை சேர்ந்த சூர்யா, (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் வடகால் பகுதியில் வசித்து வந்தனர். கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் மனவருத்தம் அடைந்த சூர்யா வீட்டில் இருந்த டர்பன்டைனை (பெயிண்டில் கலக்கும் திரவம்) குடித்துள்ளார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து ஒரகடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ஆண் பிணம் கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு வருகை முனையத்தின் அருகே வாகனங்கள் நிறுத்தும் பகுதி உள்ளது. அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நீண்டநேரமாக தூங்கியபடி இருந்தார். காா் டிரைவா்கள் சிலர் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றும் அவர் அசைவற்ற நிலையில் கிடந்தாா்.
இதுபற்றி சென்னை விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மருத்துவ குழுவினருடன் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் அவர் இறந்து விட்டது தெரிந்தது. அவரது உடலை மீட்ட போலீசார், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்தவர் யார்? என விசாரித்தனர். அதில் அவர் சைக்கிளில் டீ விற்பனை செய்து வந்தவர் என்பது மட்டும் தெரிந்தது. அவரது பெயர், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவர் மாரடைப்பில் இறந்தாரா? அல்லது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பரங்கிமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த பரங்கிமலை ஏழுகிணறு முதல் தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி (வயது 57). இவர், அதே பகுதியில் உறவினர் இறந்துவிட்டதால் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்றுவிட்டார்.
அதன்பிறகு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அறையில் சிதறி கிடந்தது.
பின்னர் பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 20 பவுன் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்று இருப்பது தெரிந்தது. ஜெயந்தி, சாவு வீட்டுக்கு சென்றிருப்பதை அறிந்த மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடியது தெரிந்தது.
இதுபற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள், அங்கு பதிவான கொள்ளையனின் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றனர்.

காஞ்சீபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:
சென்னை ஆவடி குமரன் நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58). இவருடைய உறவினர்கள் சேகர் (55), விஜயலட்சுமி (38), வைஷ்ணவி (29). இவர்கள் சித்தூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்காக காரில் சென்று விட்டு மீண்டும் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர். காஞ்சீபுரத்தை அடுத்த தாமல் என்ற இடத்தில் இவர்கள் வந்தபோது கார் சாலையின் இடது புறம் உள்ள ஒரு கல்லின் மீது ஏறி இறங்கியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னால் பயங்கரமாக மோதியது.
இதில் காரை ஓட்டி வந்த மனோகரன் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் ஏனாத்தூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இவர்களில் சேகர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

உத்திரமேரூர் வட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடந்தது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் வட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து இரவு விடுவித்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியால் கண்களை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னை விமான நிலையத்தில் இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் இடைத்தரகர்கள் என 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த இடைத்தரகர் ரஷீத், கோர்ட்டில் சரண் அடைந்தார். மேலும் ஆள்மாற்றாட்டம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய இடைத்தரகரான தரூண் மோகன் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளில் இருந்து வந்தாலோ, இங்கிருந்து தப்பி சென்றாலோ கைது செய்ய வேண்டும் என விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளிடம் தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு லுக் அவுட் நோட்டீஸ் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் வந்த இடைத்தரகர் தரூண் மோகனை கைது செய்தனர். இது பற்றி தேனி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை வந்து கைதான இடைத்தரகர் தரூண் மோகனை அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.