என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
உத்திரமேரூர் அருகே மாற்றுத்திறனாளிகள் நூதன போராட்டம்
உத்திரமேரூர் வட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடந்தது.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் வட்ட மாற்றுத்திறனாளிகள் சார்பில் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நேற்று முன்தினம் நடந்தது. மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் ஏராளமான மாற்றுதிறனாளிகள் கலந்து கொண்டனர். உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தனியார் துறையில் 5 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை உத்திரமேரூர் போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் தனியார் திருமண மண்டபத்தில் வைத்திருந்து இரவு விடுவித்தனர். இதை தொடர்ந்து நேற்று காலை உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளிகள் கருப்பு துணியால் கண்களை கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Next Story






