என் மலர்
காஞ்சிபுரம்
- நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.
- தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத் தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா. இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஒரு கட்சியாக நாம் வளர்ந்திருக்கிறோம் என்றால் அது உங்களால்தான். மேலும் நம்மை நேசிக்கிற கோடிக்கணக்கான மக்களும் தான் அதற்கு ஒரு மிக முக்கிய காரணம். உங்களை நம்பிதான் நானும், நம்ம கட்சியும் இருக்கிறோம்.
நம் கட்சியில் இருக்கிற தோழர்களுக்கும், தொண் டர்களுக்கும் இந்த கட்சியின் தலைமை தொண்டனான என்னுடைய வாழ்த்துகள்.
1977-ம் ஆண்டு ஜூன் மாதம் எம்.ஜி.ஆர். ரேடியோவில் ஒரு பேட்டி கொடுத்தார். அதில் பேசும்போது பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கிற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்றைக்கு அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் என்று சொன்னார்.
அதே மாதிரி 2017-ம் ஆண்டுக்கு அப்புறம் 2021-க்கு அப்புறம் தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பார்த்த நமது தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடித்தார்கள். இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த இயக்கம்தான் தமிழக வெற்றிக் கழகம்.
இப்படியெல்லாம் நாம் பேசுவதால் சில பேர் கொந்தளிப்பார்கள். அது பற்றி நாம் கவலைப்படக்கூடாது. ஏனென்றால் கொந்தளிப்பது தான் அவர்களின் வேலையே.
எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, ஏன்? ஜெயித்த பிறகு சட்டசபையில் கூட ஏதோ ஒரு நடிகர் கட்சி வந்திருக்கிறதாம். ஏதோ ஒரு புதிய கட்சி வந்திருக்கிறது. புரட்சி தலைவர்னு ஒருத்தர் வந்திருக்கிறார் என்றெல்லாம் கேலி, கிண்டல் செய்தனர்.
அதன்படி யார் அரசியலுக்கு வந்தாலும் இப்படி கொந்தளிப்பதுதான் அவர்களுக்கு வேலையே. நாம் அரசியலுக்கு வந்த பிறகு கூட விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? எம்.ஜி.ஆருக்கு எவ்வளவு அனுபவம் இருந்தது தெரியுமா?
1952-ல் இருந்து 1972 வரைக்கும் தி.மு.க.வில் இருந்த அவருக்கு அரசியல் அனுபவம் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது என்று பேசிய அதே வாய்தான் அன்றைக்கு எம்.ஜி.ஆரை பார்த்து அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்.
கவர்ச்சியை மட்டுமே நம்பி இருப்பவர். அட்டக்கத்தி, வாய் விளம்பர வள்ளல், இவருக்கு கேள்வி மட்டும்தான் கேட்க தெரியும். பதில் சொல்ல தெரியாது. நிருபர்களை சந்திக்க மாட்டார். டெல்லியை பகைத்துக் கொள்ள மாட்டார். மேலே இருந்து அவருக்கு அவ்வளவு அழுத்தம் இருக்கிறது என்று சொன்னதும் அதே வாய் தான்.
அதனால் எம்.ஜி.ஆரை மட்டும் அல்ல, அவரது தொண்டர்களையும் விட்டு வைக்கவில்லை. பளபளப்பு, ஜொலி ஜொலிப்பை பார்த்தால் பல் இளிப்பவர்கள் என்று கிண்டல் செய்தனர். இதை மக்கள் அமைதியாக கவனித்து என்ன செய்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
அவர் ஜெயித்ததுக்கு அப்புறம் அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்ட அனுபவசாலிகள் இருப்பார்கள் என்று சொல்வாங்கல்ல, அவர்கள் அனைவருக்கும் கோட்டை என்பது பகல் கனவாகவே மாறி விட்டது.
1977-ம் ஆண்டு போலவே அதே பழைய ஆயுதத்தை இப்பவும் கையில் எடுக்கிறார்கள். டெக்னாலஜி வளர்ந்து வேறெங்கோ போய்க் கொண்டிருக்கிறது. உங்க டெக்னிக்கையாவது மாத்துங்க பாஸ். காமராஜரையும் விட்டு வைக்கவில்லை. அவரைப் பற்றியும் கிண்டல் கேலி செய்து கொந்தளித்தனர்.
அவர்கள் செய்யும் ஊழல் பற்றி நாம் எடுத்து சொன்னால் 50 வருடத்துக்கு முன்னாடி இருக்கிற அதே தகர டப்பாவை எடுத்து உருட்ட ஆரம்பித்து விடுவார்கள். பவள விழா பாப்பாவுக்கு வேறு என்ன தெரியும்? பழைய டப்பாவை உருட்ட தானே தெரியும். அதுக்காக நாம் அவர்கள் செய்யும் தப்பை வெளியில் சொல்லாமல் இருக்க முடி யுமா? சொல்லுவோம். சொல்லிக் கொண்டே இருப்போம்.
நம்மை தவிர அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கு தில் இருக்கிறது. மக்களின் ஒரே பிரதிநிதி நாம் மட்டும்தான்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் இந்த தீய சக்தியை பற்றி என்ன திருக்குறள் எழுதி இருப்பார். ஒரு கற்பனையா "அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு" என்று எழுதி இருப்பார்.
மும்முனை போட்டி, 4 முனை போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம்.
அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர். என்னப்பா சிரிக்கிறீங்க உண்மையை தானப்பா சொன்னேன்.
இப்படி எத்தனை சக்திகள், எத்தனை பேர் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு மாபெரும் மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும். நம்ம த.வெ.க.வால் மட்டுமே முடியும். இப்படி இருக்கிற இந்த நிலைமையில் ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா, ஏ விஜய் வீட்டை விட்டு வெளியே வா இப்படியெல்லாம் கேட்கும்போது எனக்கு என்ன தோணுகிறது என்றால் அய்யய்யோ இவங்க ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற ஒவ்வொரு விஜய்யையும் கூப்பிடுகிற மாதிரி எனக்கு தோணுது. பொறுங்க பாஸ் வருவார்கள். முறையாக வருவார்கள்.
ஓட்டு போடும் அன்றைக்கு வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டில் இருக்கிற ஒவ்வொரு விஜய்யும் ஒவ்வொரு விஜியும் பூத்து பூத்தா காலையிலேயே வந்து நிப்பாங்க பாருங்க. அன்னைக்கு தெரியும் பாருங்க. ஏண்டா இந்த விஜய்யை கூப்பிட்டோம்னு.
இப்படி பேசினால் சினிமாவா இது என்று ஆரம்பித்து விடுவார்கள். நான் சினிமாவை விட்டாலும் நீங்கள் சினிமாவை விட மாட்டேங்கிறீங்களே.
கருத்து கணிப்பில் நிறைய பேர் உண்மையான கருத்து கணிப்பை சொல்கிறார்கள். அதை நான் தப்பு சொல்லலை. சிலருடைய கடுப்பில் விட்ட கணிப்பாகவும் இருக்கிறது. அதற்கும் நான் தப்பு சொல்லவில்லை. கடுப்பில் விட்ட கணிப்பாளர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், ஒவ்வொரு ஊர் ஊரா, தெரு தெருவா, வீடு வீடா போய் கருத்து கணிப்பு எடுத்து பாருங்கள். ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
ஒருவேளை அது உங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால் ரப்பர் வச்சி எல்லாவற்றையும் அழித்து விட்டு மறுபடியும் முதலில் இருந்து எடுக்க பாருங்கள். அதே ரிசல்ட்தான் வரும்.
அது என்ன லாஜிக், எல்லார் வீட்டிலும் த.வெ.க. இருக்கும் என்று கேட்டால் ஒரு சின்ன டெஸ்ட் ஒன்று பண்ணி பாருங்களேன். நம்ம சி.எம். ஸ்டாலின் சார் இருக்காங்கள்ல, 2 வருடத்துக்கு முன்னாடி இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு மேடையில் பேசும்போது சொன்னார். அவங்களுடைய கட்சிகாரங்க, ஒரு சில மந்திரிகள் செய்கிற அட்ரா சிட்டியை பார்த்து ராத்திரியில் எனக்கு தூக்கமே வர மாட்டேங்கிறது என்று பேசினார். அப்படி இருக்கிற அவர் என்றைக்காவது ஒரு நாள் அசந்து தூங்குவார். அப்போது அவரிடம் போய் சார், எந்த சின்னத்துக்கு சார் ஓட்டு போடுவீங்க அப்படின்னு கேட்டு பாருங்க... விசில் சின்னத்துக்கு தான்.... தூக்கத்தில் இப்படி எழுப்பி கேட்டால் உண்மையை போட்டு உடைத்து விடுவார். அப்படி இருக்கிற இந்த நிலைமையிலும் த.வெ.க. சிட்டியில்தான் இருக்கிறது. டவுனில்தான் இருக்கிறது.
கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்களுக்கு இப்படி சில டெஸ்ட் பண்ணி பார்த்தால் தெரியும். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் சின்னம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது என்று அர்த்தம். என்னுடைய அம்மா, அக்கா, தங்கைகள், அண்ணன், தம்பிகள், த.வெ.க.வுக்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.
ரத்த சொந்தமாக நினைக்கிற நம்ம வகையறாக்களை எந்த கட்சியாலும், எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்கவே முடியாது. இதுதான் களநிலவரம். தீயசக்தியை வீழ்த்துவதற்கு தூய சக்தியான நம்மால் மட்டுமே முடியும்.
இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க.தான் மக்களின் ஒரே ஆப்சன். டப்பா என்ஜின், ஓட்டை என்ஜின், எவ்வளவு என்ஜின் வந்தாலும் டாப் என்ஜின் நம்ம த.வெ.க.தான் என்று மக்கள் ஏற்கனவே முடிவு செய்து விட்டார்கள்.
நமது தோழர்கள் அதை மனதில் நன்றாக ஏற்றிக் கொண்டு இன்னும் இன்னும் ஷார்ப்பா வேலை பாருங்கள். நம்முடைய வேட்பாளர்களுடன் ஒற்றுமையாக இருந்து வேலை செய்யுங்கள். நம்முடைய விசில் சின்னத்துக்கு ஓட்டு போட வைப்பது மட்டும் தான் உங்கள் வேலை. மாற்றத்தை யெல்லாம் மக்களுடன் சேர்ந்து நான் பார்த்துக் கொள்கிறேன். மக்கள் விசிலை ஊதுகிற ஊதலில் இந்த தீயசக்தியும், இந்த ஊழல் சக்தியும் தெறித்து ஓட வேண்டும். அன்றைக்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் த.வெ.க. ஆளும் கட்சியாக எழும். உங்களுடன் நான் இருக்கிறேன். நம்மளுடன் நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேணும். நம்பிக்கையாக இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
- தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.
தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:
* தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க.
* எத்தனை எஞ்சின் இருந்தாலும் டாப் எஞ்சின் த.வெ.க. தான் என மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
* த.வெ.க. தொண்டர்களை எந்த விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
* த.வெ.க. தொண்டர்கள் தான் எனக்கு மிகப்பெரிய பலம்.
* தொண்டர்களை மட்டும் நம்பி தான் தமிழக வெற்றிக்கழகமும், நானும் இருக்கிறேன்.
* தமிழ்நாட்டில் த.வெ.க. விசில் சின்னம் போகாத ஊரே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது.
- என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:
* தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் த.வெ.க. இருக்கிறது.
* திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகத்தால் மட்டுமே முடியும்.
* என்னுடைய அக்கா, அம்மா என அனைவரும் த.வெ.க.விற்கு ஓட்டு போடுவதை யாராலும் தடுக்க முடியாது.
* தீய சக்தி தி.மு.க.வை வீழ்த்த தூய சக்தியாக தமிழக வெற்றிக்கழகத்தால் மட்டுமே முடியும்.
* 2026 சட்டசபை தேர்தலில் மக்களின் ஒரே ஆப்ஷன் த.வெ.க. மட்டும் தான்.
* தமிழகத்தில் த.வெ.க. தலைமையில் ஒரு அணியும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு அணியும் போட்டி.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. தலைமையில் ஒரு அணி போட்டி என்று அ.தி.மு.கவை த.வெ.க. தலைவர் கிண்டலாக கூறினார்.
- தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.
- மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அப்போது த.வெ.க. தலைவர் கூறியதாவது:
* தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் மிகப்பெரிய கட்சியாக வளர்ந்திருப்பதற்கு காரணம் தொண்டர்கள் தான்.
* தமிழக வெற்றிக்கழகத்தின் வளர்ச்சிக்கு தலைமை தொண்டனாக எனது வாழ்த்துகள்.
* 1977 ஜூன் மாதம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ரேடியோவில் பேட்டி ஒன்று கொடுத்தார். அதில், பேரறிஞர் அண்ணா இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்கின்ற நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தேன். அந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சிதான் அ.தி.மு.க. என்று கூறினார்.
* 2017-க்கு பிறகு, 2021-க்கு பிறகு தமிழ்நாட்டு நிலையை யோசித்த தமிழக மக்கள் காமராஜர் இருந்த இடத்தில், அண்ணா இருந்த இடத்தில், எம்.ஜி.ஆர். இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டதை நினைத்து கண்ணீர் வடித்தனர்.
* இன்றைக்கு இந்த கண்ணீரை துடைக்க ஆரம்பித்த கட்சி தான் தமிழக வெற்றிக்கழகம்.
* 1977-ம் ஆண்டு போல பழைய நஞ்சு போன தீஞ்சு போன ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
* பவளவிழா பாப்பாவிற்கு என்ன தெரியும் பழைய டப்பாவை தான் உருட்ட தெரியும்.
* அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் தி.மு.க. முதற்றே உலகு.
* மக்களின் ஒரே பிரதிநிதியாக இருப்பது தமிழக வெற்றிக்கழகம் மட்டும் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக்கழகத்தின் 3-ம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
3-ம் ஆண்டு விழாவையொட்டி தலைமை அலுவலகத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
த.வெ.க.. கொள்கை தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் உள்ளிட்ட தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. த.வெ.க. கொள்கை பாடல் ஒலிக்கப்பட்டது. இதையடுத்து த.வெ.க. கொடியை விஜய் ஏற்றி வைத்தார்.
- 5 டன் எடை கொண்ட கரும்பால் சுமார் 21 அடி உயரமும், 10 அடி அகலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தத்ரூபமாக தேரை தயார் செய்து உள்ளார்.
- தேரின் மேற்பகுதி, சக்கரம் என அனைத்தும் செங்கரும்பால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம்:
பொங்கல் பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த குண்டுக்குளம் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான செந்தில்குமார் என்பவர் விவசாயிகளின் உண்னதத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் திருநாளன்று விவசாயிகள் உற்பத்தி பொருளாக விளங்கும் செங்கரும்பின் மூலம் பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளைகள் என பல்வேறு வகையில் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது அவர் விவசாயிகள் பயிரிட்டு வரும் செங்கரும்பினை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக 5 டன் செங்கரும்பினால் ஆன பிரம்மாண்டமான திருத்தேரை தயார் செய்து உள்ளார்.
5 டன் எடை கொண்ட கரும்பால் சுமார் 21 அடி உயரமும், 10 அடி அகலத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தத்ரூபமாக தேரை தயார் செய்து உள்ளார். தேரின் மேற்பகுதி, சக்கரம் என அனைத்தும் செங்கரும்பால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து செந்தில்குமார் கூறும்போது, உழவர்களின் உற்பத்தி பொருளை மேம்படுத்தவும், முன்னோர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பழமையான வீட்டை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக கோவில் தேர் அமைத்தது மட்டுமல்லாமல் விவசாயிகள் பயிரிடும் செங்கரும்பை அனைவரும் வாங்கி பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே இதனை மேற்கொண்டதாக தெரிவித்து உள்ளார். இந்த செங்கரும்பு திருத்தேர் பார்ப்பவரை ஒரு நிமிடம் மெய் மறக்க செய்யும் வகையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை 10 நாட்கள் அப்பகுதி மக்கள் நேரில் பார்வையிட பார்வைக்காகவும் வைக்கப்பட்டு உள்ளது.
- தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது.
- வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு முந்தைய விபரங்கள் பெறப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் திருப்பி வழங்கிய படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை(19-ந்தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-
தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.
மேலும் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 57 ஆயிரத்து 658 வாக்காளர்கள் இறந்தவர்கள், 10 ஆயிரத்து 719 வாக்காளர்கள் இரட்டைபதிவு, 1 லட்சத்து 46 ஆயிரத்து 621 வாக்காளர்கள் இடம் பெயர்ந்தவர்கள், 58 ஆயிரத்து 675 வாக்காளர்கள் கண்டறிய முடியாதவர்கள் மற்றும் மற்றவை 601 வாக்காளர்கள் என மொத்த 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள்.
வாக்காளர்களின் மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
- தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் 'தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார்.
அவரை தொடர்ந்து, அவரது மனைவி டாக்டர் சவுமியா அன்புமணி, 'தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை இன்று முதல் தொடங்கி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைக்காமல் இருக்கும் 10 முக்கிய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும், தமிழ்நாட்டில் பெண்களின் நிலையை உயர்த்திடுவதற்கும் விழிப்புணர்வு பிரசார பயணமாக சவுமியா அன்புமணியின் சுற்றுப்பயணம் இருக்கும் என பா.ம.க. சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், சவுமியா அன்புமணி தலைமை தாங்கி காஞ்சீபுரம் மாவட்டம் காமராஜர் சாலையில் உள்ள சித்தீஸ்வரர் மஹாலில் இன்று காலை தனது முதல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
அங்கு மேடையில்சவுமியா அன்புமணி பேசியதாவது:-
அழகு பெண்களே.. சிங்கப் பெண்களே.. உங்கள் அனைவருக்கும் வணக்கம். காஞ்சிபுரம் மண்ணில் தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணத்தை தொடங்கி இருக்கிறோம்.
காஞ்சிபுரத்திற்கு நான் எத்தனை முறை வந்திருப்பேன் என்கிற கணக்கே இல்லை. காஞ்சி காமாச்சி அம்மனை எத்தனை முறை தரிசித்திருக்கிறேன். அத்திவரதர் வைபவம்.
இப்படிப்பட்ட பெருமைகளையும், அருமைகளையும் கொண்ட காஞ்சி மாநகரத்தில் "சிங்கப்பெண்ணே.. எழுந்து வா.." என்று மகளிர் உரிமை மட்டு பயணத்தை தொடங்கியிருக்கிறோம்.
நிம்மதியான, கடன் சுமையின்றி வாழும் வாழ்க்கை தான் நம்முடைய உரிமை. அது கொடுப்பது அரசின் கடமை.
பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை இலவசம், மருத்துவம் இலவசம், விவசாயிகளுக்கு அனைத்தும் இலவசமாக தருவது பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே.
பெண்களுக்கு பொருளாதார முன்னேற்றம் வேண்டும்.
இங்கு மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக சிறைச் சென்றவர்கள்.
உங்களுக்கு ஒரு பிச்சனை என்றால் இவர்கள் தான் கொடி பிடித்து நிற்பார்கள். இவர்கள் தான் உங்களுடைய ரியல் ஹீரோ. திரையில் தேடாதீர்கள். அவர்கள் உங்களுக்காக ஓடோடி வரமாட்டார்கள். அவர்களுக்குதான் உங்களுடைய ஆதரவுகளை மனதார தரவேண்டும்.
பெண்களுக்கு ரூ.1000 கொடுத்தால் சரியாகிவிடுமா? யாருடைய பணம் அது. டாஸ்மாக்கில் கொடுத்த பணம் தான் பெண்களுக்கு வந்து சேருகிறது. அது மீண்டும் எங்கு செல்லும் டாஸ்மாகிற்கு தான் செல்லும். 1000 ரூ கொடுத்தவுடன் மனசுமாறி ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.
பெண்களாகிய நீங்கள் ஒரு நாளுக்கு 1000 ரூ சம்பாதிக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்புகளை அரசாங்கம் உருவாக்கி கொடுக்க வேண்டும்.
யாராவது ரூ.500, ரூ.1000 என பிச்சைப்போட்டால் வாங்கிக்கொள்வதா ? அது அசிங்கம் இல்லையா? ஓட்டு வாங்க உல்களை ஏமாற்றக் கொடுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
- எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
காஞ்சிபுரம்:
அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட கார்னிங் இண்டர்நேஷனல் நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கைக் கணினிகளில் பயன்படுத்தப்படும் வலுவூட்டப்பட்ட 'கார்னிங் கொரில்லா கண்ணாடி உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனம் ஆகும். ஆப்டிமஸ் இன்பிராகாம் நிறுவனம், இந்தியாவில் செல்போன் உபரி பொருள்கள் மற்றும் மடிக்கணினி உற்பத்தியில் அனுபவம் வாய்ந்த நிறுவனம் ஆகும்.
பாரத் இன்னோவேட்டிவ் கண்ணாடி டெக்னாலஜீஸ் நிறுவனம், கார்னிங் இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் மற்றும் ஆப்டிமஸ் இன்பிராகாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனமாகும்.
இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டம் சிப்காட் பிள்ளைப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1003 கோடி முதலீட்டில் 840 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் நவீன தொழில் நுட்பத்துடன் முன்-கவர் கண்ணாடி உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்படும் பொருட்கள் நாட்டிலேயே முதன் முறையாக உயர் தொழில் நுட்பத்தில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்கும்.
இந்த திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்டு அதே ஆண்டு ஜூன் மாதம் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி வைத்த 17 மாதங்களில் இத்திட்டத்தின் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழ்நாட்டில் நிலவும் வணிகம் புரிதலுக்கான சூழலமைப்பு சிறப்பு உள்ளதற்கு இது சிறந்த சான்றாகும்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* திராவிட மாடல் அரசு வேகமாக செயல்பட்டு முதலீடுகளை கொண்டு வந்து கொண்டிருக்கிறது.
* ஆயிரத்துக்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு 80 சதவீதம் நிறைவேற்றப்பட்டது.
* எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் 41 சதவீதம் பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம்.
* எலெக்ட்ரானிக்ஸ் துறையின் தலைநகரம் தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
* செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு துறைகளிலும் தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.
* தொலைநோக்கு சிந்தனையுடன் கொள்கைகளை உருவாக்கி தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
* முதலீட்டாளர்களுக்கு எப்போதும் முழு ஒத்துழைப்பை தந்து தி.மு.க. அரசு உறுதுணையாக இருக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன் பரசன், டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குனர் அலர்மேல்மங்கை, கார்னிங் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் ஆன்ட்ரூ பெக், கரர்னிங் நிறுவனத் தின் சர்வதேச துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் கோகன் டோரான், ஆப்டிமஸ் இன் பிராகாம், நிறுவனத்தின் தலைவர் அசோக்குமார் குப்தா, கார்னிங் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர், சுதிர் பிள்ளை, கார்னிங் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஜோய் லீ, கார்னிங் கொரில்லா கண்ணாடி ஆசியா நிறுவனத்தின் சர்வதேச தலைவர் ஜூம் எஸ்.கிம், பிக்டெக் நிறுவனத்தின் திட்டத் தலைவர் டாக்டர் ரவி கட்டாரே மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் தி.மு.க.வினர் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
- சென்னை கடற்கரையில் நிலைக்கொண்டுள்ளது.
- செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து தமிழகம்- புதுச்சேரி கடற்கரைகளில் இருந்து 25 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது.
மேலும் நாளையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (புதன்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார்.
அத்துடன் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
- தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்ற தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், தி.மு.க. மீது அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தார்.
மேலும் அவர் பேசுகையில், காஞ்சிபுரம் என்றாலே பட்டு என்று உலகத்திற்கே தெரியும். ஆனால் இன்றைய நெசவாளர் நிலை வறுமை, கந்துவட்டி கொடுமையாக உள்ளது.
* இந்த அரசால் டெல்டா மாவட்ட விவசாயிகள் எப்படி பாதிக்கப்பட்டார்களே அதேபோல் நெசவாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* விவசாயமும் விவசாயிகளும் அழிந்தால் நாமெல்லாம் அழிந்து போக வேண்டியது தான்.
* உயர்மட்டத்திலிருந்து அடிமட்டம் வரை ஒரு கட்சி சிண்டிகேட் அமைத்து கொள்ளை அடிப்பதை பார்த்திருக்கிறீரா?

* தி.மு.க அரசின் பிரச்சனை என்னவென்றால் மக்களைப் பற்றி சிந்திப்பதற்கே நேரமில்லை.
* குறி வைத்தால் தவறாது, தவறும் என்றால் குறியே வைக்கமாட்டேன் எம்.ஜி.ஆர். வசனம் யாருக்கு என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
* இந்த விஜய் சும்மா எதையும் சொல்ல மாட்டான்... ஒன்னு சொன்னா அதை செய்யாம விடமாட்டான்...
* பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாதே பாப்பா. நீ நல்லவர் போல நடிப்பதை பார்த்து நாடே... என்று கூறி விட்டு சிரித்தார்.
* பாப்பானு ஆசையா, பாசமா, சாஃப்ட்டா தான் சொன்னோம். ஆனா அதையே விமர்சனமா எடுத்துக்கிடா எப்படி. நாங்க இன்னும் அடிக்கவே ஆரம்பிக்கவே இல்லையே. அதுக்குள்ள அலறுனா எப்படி?
* வெளியில் செல்ல அனுமதி கிடைத்தவுடன் நிச்சயம் வெளியில் வருவோம் என்றார்.
- ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.
- எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.
காஞ்சிபுரம்:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியதாவது:-
* அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர் தான் நம்மை தற்குறி என அழைக்க வேண்டாம் என பேசினார்.
* திமுக எம்எல்ஏ எழிலனின் ஆதரவு குரல் போன்ற குரல் அனைத்து வீடுகளிலும் எதிரொலிக்கும்.
* கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதில் எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை.
* நடிகர் கட்சி... நடிகர் கட்சி என்று சொனன் ஒருத்தர் எம்.ஜி.ஆர். கூடவே போய் சேர்ந்துவிட்டார்.
* ஏண்டா விஜய்யை தொட்டோம், ஏண்டா விஜய் கூட இருக்கும் மக்களை தொட்டோம் என Feel பண்ண போறாங்க.
* எங்களுக்கு ஓட்டுபோட இருக்கும் மக்களை தற்குறி என்கிறீர்களே அவர்களிடம் தானே நீங்கள் ஓட்டு கேட்டீர்கள்.
* தற்குறி என நீங்கள் கூறுபவர்கள் தான் உங்களின் தலையெழுத்தை மாற்றி எழுத போகிறார்கள்.
* த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் தற்குறி அல்ல தமிழ்நாடு அரசியலின் ஆச்சரியக்குறி என்றார்.






