என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இன்று பர்கூர் மலைப்பகுதி மற்றும் காளிமலை பகுதியை சேர்ந்த பழங்குடி மக்கள் மாநில தலைவர் வரதராஜு தலைமையில் திரண்டனர். மொத்தம் 800-க்கும் மேற் பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
28 ஆண்டுகளாக குடியிருந்து வரும் எங்களுக்கு இதுவரை சாதி சான்றிதழ்கள் தரவில்லை. இதனால் எங்களால் அரசு சலுகை, மானியம் என எதுவும் பெற முடியவில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் தங்களுக்கு பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்களும் தங்களது குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மலைவாழ் மக்கள் கூறும் போது, ‘‘28 ஆண்டு காலமாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். சாதி சான்றிதழ் கேட்டு பல முறை மனுக்கள் கொடுத்து விட்டோம். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்’’ என்று கூறினர்.
கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் கடந்த 6 மாதத்துக்கு முன் பெருந்துறை அருகே உள்ள குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
அங்கு அவர் குடும்பத்துடன் தங்க வீடும் ஒதுக்கப்பட்டிருந்தது. மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு சுரேஷ் தங்கி வேலை பார்த்து வந்தார். சுரேசுக்கு குடிபழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி குடும்பத் தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் சுரேஷ் நேற்று தனது வீட்டு முன் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். 3-வது நபர் காப்பீட்டு தொகையை 30 சதவீதத்தில் இருந்து குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்திருந்தது.
அதன்படி நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.
ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கம் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குணசேகரன் கூறியதாவது.-
பெட்ரோல், டீசல் விலை தினம் தினம் உயர்த்தப்படுவதால், சரக்கு லாரிகள் நஷ்டத்தை சந்திக்கின்றன. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவற்றின் விலையை உயர்த்த வேண்டும்.
தேசிய அளவில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு, ஆண்டுக்கு ஒரே ஒரு முறை, ஒரே தொகையாக பெற வேண்டும்.
வாகனங்களுக்கான மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் ஜீலை 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. மாநில லாரி உரிமையாளர் சம்மேளனத்தில் அங்கத்தினர் என்ற முறையில் தாங்களும் பங்கேற்கிறோம்.
எனவே இன்று நடக்கும் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் நாங்கள் பங்கேற்கவில்லை. ஈரோடு மாவட்டத்தில் லாரிகள் வழக்கம் போல் ஓடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு நரிப்பள்ளம் ஓடை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் இரவில் நிறுத்தி வைக்கப்பட்டு காலையில் அந்தந்த பகுதிகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்லும்.
அதே போன்று இன்று நரிப்பள்ளம் ஓடையில் இருந்து லாரிகள் வழக்கம் போல் இயங்கின.
ஈரோடு மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக உள்ள பவானிசாகர் அணை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்மட்டம் அதிகமாக உள்ளது.
கடந்தாண்டு இதே நாளில் 39 அடியில் இருந்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக கூடி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.
இன்று (திங்கட்கிழமை) அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டது. அதே சமயம் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2316 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக வழக்கம் போல் பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்த மாதம் வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
மத்திய அரசால் அச்சடிக்கப்பட்டு 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நாணயங்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அரசு பஸ்களிலும் கண்டக்டர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.
ஆனால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவது கிடையாது.
குறிப்பாக தருமபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை, ரேசன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.
இதேபோல மின் அலுவலகங்களில் மின்சார கட்டணம் செலுத்த நாணயங்களை கொடுத்தாலும் வாங்குவதில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் வாங்க மறுக்கிறார்கள்.
இதேபோல பெட்டிகடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத் தும் வியாபாரிகளும் இதை வாங்க மறுக்கிறார்கள்.
தற்போது இந்த நாணயங்களை பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் கமிஷனுக்கு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை கமிஷனுக்கு வாங்கி வருகிறார்கள். ஒரு சிலர் ரூ. 2 கமிஷனுக்கு வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 5 ரூபாய் வரை கமிஷன் கழித்து இந்த நாணயங்களை வாங்கிக் கொள்கிறார்க்ள.
தற்போது வியாபாரிகளுக்கு இந்த புது தொழில் கைகொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள் சென்னை சென்று இதை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசிலர் தருமபுரி வந்து வங்கிகளில் மொத்தமாக 50 முதல் 500 நாணயங்கள் வரை கொடுத்து மாற்றிக் கொள்கிறார்கள்.
தர்மபுரியில் இருந்து ஊட்டிக்கு நிறைமாத கர்ப்பிணியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று அழைத்து சென்றனர். இதற்காக அவர்கள் தர்மபுரியில் இருந்து ஈரோட்டிற்கு ரெயிலில் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஊட்டிக்கு பஸ்சில் செல்வதற்காக ரெயில் நிலையத்தில் இருந்து டவுன் பஸ் ஏறி ஈரோடு பஸ் நிலையத்திற்கு சென்றனர். பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலாக இருந்ததால் அந்த பஸ்சின் டிரைவர் அதை நடுவழியில் நிறுத்தினார். இதனால் பயணிகள் அந்த பஸ்சில் இருந்து இறங்க தொடங்கினர்.
அப்போது சென்னிமலையில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மற்றொரு அரசு டவுன் பஸ் பின்னால் வந்து நின்றது. இதனால் அந்த பஸ்சின் டிரைவர் முன்னால் நின்ற பஸ்சின் டிரைவரை எச்சரிப்பதற்காக ஏர்ஹாரனை அழுத்தி கொண்டே இருந்தார். ஆனால் பயணிகள் தொடர்ந்து இறங்கி கொண்டு இருந்ததால் முன்னால் உள்ள பஸ் நின்று கொண்டே இருந்தது. இதில் ஆத்திரம் அடைந்த பஸ்சின் டிரைவர் கீழே இறங்கி வந்தார். மேலும், முன்னால் நின்ற பஸ்சில் இருந்து இறங்கும் பயணிகளை அவர் எச்சரித்தார். அப்போது கர்ப்பிணி பெண்ணும் இறங்கி வந்ததால், டிரைவர் அவரை காலால் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.
இதைபார்த்த கர்ப்பிணியின் உறவினர்களும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த டிரைவருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து திரண்டனர். உடனடியாக மற்ற டிரைவர்கள், கண்டக்டர்கள் விரைந்து சென்று உறவினர்களையும், பயணிகளையும் சமாதானம் செய்தனர். அதற்குள் கர்ப்பிணியை தாக்கியதாக கூறப்படும் டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மற்றும் பயணிகள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நிறைமாத கர்ப்பிணியின் பெற்றோர் கூறியதாவது:-
நாங்கள் ஊட்டியை சேர்ந்தவர்கள். எனது மகள் சங்கீதாவுக்கு தர்மபுரியில் திருமணம் செய்து கொடுத்து உள்ளோம். அவர் 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி ஊட்டிக்கு அழைத்து செல்வதற்காக நாங்கள் ஈரோட்டிற்கு வந்தோம். ஈரோடு பஸ் நிலையத்தில் டவுன் பஸ்சில் வந்து இறங்கும்போது பின்னால் வந்த அரசு பஸ்சின் டிரைவர் எங்களது மகளை எட்டி உதைத்தார்.
எனவே அந்த டிரைவரை கைது செய்யும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
அதற்கு போலீசார், “புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட டிரைவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்”, என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஈரோடு பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதிமன்றத்தின் மீது நம்பகத்தன்மை இல்லாததால் தங்க தமிழ்செல்வன் மட்டும் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி வழக்கை சந்திப்பார்கள். சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல் யார் என்று தெரியவரும்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எங்கள் கட்சி சந்திக்க தயாராக உள்ளது. ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அரசு அழிவை நோக்கி செல்கிறது. அந்த கட்சியை மீட்கும் பொறுப்பை பொதுமக்கள் எங்களிடம் கொடுத்துள் ளார்கள். இனிவரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டு எடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன்பின்னர் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்வதற்காக வேனில் புஞ்சைபுளியம்பட்டி வழியாக டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது பஸ் நிலையம் முன்பு அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளித்தார்கள். பின்னர் அங்கு திரண்டிருந்த கூட்டத்துக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
தற்போது வெளியான 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு சம்பந்தமான தீர்ப்பு மக்களை எவ்வளவு வேதனைப்படுத்தியிருக்கும் என்பது தெரியும். விரைவில் அனைத்து தரப்பினரும் விரும்பும் ஒரு ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதை உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 2 மாதங்களில் வரும் தீர்ப்பில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும். அதன்பின்னர் அம்மாவின் ஆட்சி மலரும் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோபி:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார்.
அப்போது அவர் நிரூபர்களிடம் கூறியதாவது:-
நான் ஏற்கனவே கூறியது போல சட்டசபையில் வாக்கெடுப்பு நடக்கும் போது ஸ்லீப்பர் செல்கள் யார் என்று தெரியும். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்களாகத்தான் இருந்து வருகிறார்கள்.
வழக்கை தாமதப்படுத்துவார்கள் என கூறி தங்க தமிழ் செல்வன் மட்டும் தான் வழக்கை வாபஸ் பெறுகிறார். மற்ற எம்.எல்.ஏ.க்கள் சட்டப்படி போராடுவார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. அழிவை நோக்கி செல்கிறது. அதை மீட்டெடுக்கும் பொறுப்பை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு மக்கள் கொடுத்துள்ளனர்.

எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். அதே போன்று சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் கட்சி சார்பில் தேர்தலை சந்திப்போம். அதில் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். கட்சியை காப்பாற்றுவோம்.
இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #MLAsDisqualified
ஈரோடு வனக்கோட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர் வனப்பகுதியில் முதல் முறையாக புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இதனால் வன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு பயிற்சி அளிக்கும் முகாம் அந்தியூர் வனத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அப்போது ‘அந்தியூர், சென்னம்பட்டி, பர்கூர் ஆகிய வனப்பகுதியில் புலிகள் கணக்கெடுக்கும் பணி 15-ந்தேதி (நேற்று) தொடங்கி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை என 3 நாட்கள் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. மாவட்ட வனத்துறை அதிகாரி விஸ்வநாதன் மற்றும் கூடுதல் வன அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்னம்பட்டி, முரளி பகுதியில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல்வேறு ஊன் உண்ணிகள் தாவர உண்ணிகள் என 2 வகையாக பிரிக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பேது தனது குட்டியுடன் சிறுத்தைபுலி அங்குள்ள ஒரு வனக்குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றதை நேரில் பார்த்து பதிவு செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பதிவான புலியின் கால் தடங்களை சேகரித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘வரைபடங்கள் மற்றும் குறிப்புகள் பதிவு செய்தல் பற்றிய கையேடுகள் வைத்து புலி கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டோம். மொத்தம் 4 அளவுகளில் பதிவாகி இருந்த புலியின் கால்தடங்களை சேகரித் தோம். முதல் நாள் 4 புலிகளின் கால்தடங்கள் பதிவு செய்தோம். மேலும் வனப்பகுதியில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலமும் வன விலங்குகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். புலிகள் இருப்பிடம் பற்றிய தகவல் ஜி.பி.ஆர்.எஸ் மூலம் கண்காணிக்கப்படும்’ என்று வனத்துறையினர் தெரிவித்தார்கள்.
இந்த கணக்கெடுக்கும் பணியில் அந்தியூர் வனச்சரகர் பாலகிருஷ்ணன். பர்கூர் வனச்சரகர் மணிகண்டன், சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையன் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனத்தினர் 100 பேர் ஈடுபட்டனர்.
சென்னை நாவலூர் நட்சத்திரா அபார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 71). இவரது மனைவி புஷ்பா (57), மகன் ரிச்சர்டு (30).
கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் ரிச்சர்டுக்கும் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த மரிய ஏஞ்சல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. கடந்த சில நாட்களாக ஏஞ்சல் மட்டும் சரவணம்பட்டியில் இருந்தார்.
ரிச்சர்டு தனது தந்தை- தாயுடன் சென்னையில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சரவணம்பட்டியில் குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடப்பதாக இருந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக வின்சென்ட், புஷ்பா, ரிச்சர்டு ஆகிய 3 பேரும் காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.
காரை ரிச்சர்டு ஓட்டி வந்தார். காரின் முன் பகுதியில் வின்சென்ட்டும், பின் சீட்டில் புஷ்பாவும் அமர்ந்திருந்தனர்.
இன்று காலை அவர்கள் வந்த கார் சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே வந்தது. பெருந்துறை அடுத்த சோளிபாளையம் பிரிவு அருகே வந்தபோது ரோட்டின் இடது பக்கமாக ஒரு லாரி நின்றது.
திடீரென நிலைதடுமாறி ஓடிய கார் அந்த லாரியின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் காரின் பாதி பாகம் லாரியின் பின் பகுதிக்குள் புகுந்து சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் காரின் முன் சீட்டில் இருந்த வின்சென்ட், பின் சீட்டில் இருந்த புஷ்பா ஆகிய 2 பேரும் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
ரிச்சர்டு பலத்த காயம் அடைந்தார். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடி வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இது பற்றி பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காரின் பாகத்தை வெட்டி எடுத்து இடிபாடுக்குள் சிக்கி இருந்த வின்சென்ட், புஷ்பா ஆகியோரின் உடல்களை மீட்டனர். காயம் அடைந்த ரிச்சர்டும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தனது கண் முன்னே தந்தையையும், தாயையும் இழந்த ரிச்சர்டு கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து பெருந்துறை பகுதியில் இன்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் நேற்று இரண்டு நீதிபதிகள் மறுபட்ட தீர்ப்புகளை வழங்கி உள்ளனர். இந்த தீர்ப்பு பொது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக இது போன்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிப்பதற்கு பதில் 3 பேர் கொண்ட நீதிபதிகள் பெஞ்ச் விசாரிப்பதே சரியானதாக இருக்கும்.

நடிகர் ரஜினி புதிய கட்சி தொடங்க போவதாக அறிவித்து உள்ளார். ஆனால் திடீரென காலா படத்தில் நடித்து முடித்தார். இப்போது மற்றொரு புது படத்தில் நடிக்க சென்று விட்டார். இன்னும் 2 மாதம் கழித்து தான் வருவார்.
அதே போன்று நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்கினார். அவ்வப்போது அறிக்கை, டுவிட்டர் மூலம் கருத்துகளை கூறி வந்தார். தற்போது பிக்பாஸ்-2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சென்று விட்டார். இவ்வாறு சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளனர். மக்களை இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள். எனவே தமிழ்நாட்டு மக்கள் நடிகர்கள் ரஜினியையும், கமல்ஹாசனையையும் ஏற்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Eswaran #18MLAsCase
பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பா.ஜனதாவின் 4 ஆண்டு சாதனை மிகவும் மகத்தானது. பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்கள், பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து உள்ளது. தமிழ்நாட்டில் இதற்கான பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் கர்நாடகாவினர் பிரதிநிதிகள் குழு அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்த பிறகு தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் ஏன் வாயை திறக்கவில்லை?
காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கூறிதான் குமாரசாமி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இவருக்கு தான் இங்குள்ளவர்கள் வாழ்த்துக்களை கூறி உள்ளனர்.

ஆனால் இதற்கும் பாரதிய ஜனதாதான் காரணம் என்று கூறுகிறார்கள். இப்படி எதற்கெடுத்தாலும் பாரதிய ஜனதாவை குற்றம் சுமத்துவது எந்த வகையில் நியாயம்? நீதிபதிகள் தீர்ப்பு கூறியதற்கு பா.ஜனதாவை குறை சொல்வது ஏன்?
நடிகர் எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என என்னிடம் கேட்பது தவறு. அவர் எங்கள் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. அவர் ஏன் கைது செய்யப்படவில்லை என்பதை மாநில அரசிடம் கேளுங்கள்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார். #BJP #VanathiSrinivasan






