search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ரூபாய் கமி‌ஷனுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள்
    X

    2 ரூபாய் கமி‌ஷனுக்கு 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள்

    கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை 2 ரூபாய், 5 ரூபாய் கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள்.
    கடத்தூர்:

    மத்திய அரசால் அச்சடிக்கப்பட்டு 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நாணயங்களை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் வாங்கிக் கொள்கிறார்கள். அரசு பஸ்களிலும் கண்டக்டர்கள் வாங்கிக் கொள்கிறார்கள்.

    ஆனால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவது கிடையாது.

    குறிப்பாக தருமபுரி மாவட்டம் கடத்தூர், பொம்மிடி, பாப்பி ரெட்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடை, ரேசன் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில்லை.

    இதேபோல மின் அலுவலகங்களில் மின்சார கட்டணம் செலுத்த நாணயங்களை கொடுத்தாலும் வாங்குவதில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்களிலும் அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகளிலும் வாங்க மறுக்கிறார்கள்.

    இதேபோல பெட்டிகடை, மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத் தும் வியாபாரிகளும் இதை வாங்க மறுக்கிறார்கள்.

    தற்போது இந்த நாணயங்களை பழைய பொருட்களை வாங்கும் வியாபாரிகள் கமி‌ஷனுக்கு வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    கடத்தூர், பாப்பி ரெட்டிப்பட்டி, பொம்மிடி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வியாபாரிகள் 10 ரூபாய் நாணயத்தை கமி‌ஷனுக்கு வாங்கி வருகிறார்கள். ஒரு சிலர் ரூ. 2 கமி‌ஷனுக்கு வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 5 ரூபாய் வரை கமி‌ஷன் கழித்து இந்த நாணயங்களை வாங்கிக் கொள்கிறார்க்ள.

    தற்போது வியாபாரிகளுக்கு இந்த புது தொழில் கைகொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்கும் வியாபாரிகள் சென்னை சென்று இதை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசிலர் தருமபுரி வந்து வங்கிகளில் மொத்தமாக 50 முதல் 500 நாணயங்கள் வரை கொடுத்து மாற்றிக் கொள்கிறார்கள்.

    Next Story
    ×