என் மலர்
ஈரோடு
- தமிழக-கர்நாடக எல்லையான புழிஞ்சூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த தைல மரம் ரோட்டில் முறிந்து விழுந்தது.
- மரத்தை அகற்ற கர்நாடக நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து மைசூர் செல்லும் சாலை தமிழக-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் ஆசனூர் புழிஞ்சூர், தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தொடர்ந்து சாரல் மழை பெய்தது. நேற்று நள்ளிரவு பெய்த மழையால் தமிழக-கர்நாடகா எல்லையான புழிஞ்சூர் அருகே சாலை ஓரத்தில் இருந்த தைல மரம் ரோட்டில் முறிந்து விழுந்தது.
இரவு நேர போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் வாகனங்கள் ஏதும் செல்லவில்லை. மரத்தை அகற்ற கர்நாடக நெடுஞ்சாலை துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வழக்கம் போல் இன்று காலை 6 மணி அளவில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் சாலையில் மரம் விழுந்து இருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் அனைத்தும் இருபுறமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. பின்னர் காலை 7 மணி அளவில் சம்பவ இடத்துக்கு வந்த கர்நாடக நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர்.
பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் தமிழக- கர்நாடக இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் பணி நேரத்தில் மது குடித்து விட்டு பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது.
- மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் இருந்து வந்தார். இது குறித்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அனுப்பர்பாளையம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் ஜான் சேவியர் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1 மாதத்துக்கு முன்பு மாறுதலாகி இந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் பணி நேரத்தில் மது குடித்து விட்டு பள்ளிக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு சரியாக பாடம் எடுக்காமல் இருந்து வந்தார். இது குறித்த தகவல் மாணவர்களின் பெற்றோருக்கு தெரியவந்தது. இது குறித்து கல்வி அதிகாரிகளிடம் அவர்கள் புகார் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை ஆசிரியர் தொடர்ந்து மது குடித்து விட்டு பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் ஒன்று திரண்டு பள்ளிக்கு வந்தனர். அவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்தார். அவரை பொதுமக்கள் பள்ளிக்கு செல்ல விடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் திரும்பி சென்று விட்டார்.
இது பற்றி தெரிய வந்ததும் கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுத்தால் தான் செல்வோம் என கூறினர். தொடர்ந்து அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் ஜான் சேவியரை இடமாற்றம் செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
- தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும்.
- இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
ஈரோடு:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 98.33 அடியாக உள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும் என மொத்தம் அணையில் இருந்து 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே பவானி ஆற்றில் வெளியேற்றப்படும்.
தற்போது தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு சில நாட்களில் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி விடும். இதனால் பவானிசாகர் அணை பார்ப்பதற்கு கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது.
இதனால் அணைப்பகுதியை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவியத் தொடங்கியுள்ளனர். சிலர் அணையை சுற்றி பார்த்து ரசிப்பதுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
- ஈரோடு அருகே தனியார் நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(32). எம். சி.ஏ பட்டதாரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்திற்கு சென்று நான் மற்றொரு தனியார் நிதி நிறுவனத்தில் எனது பெயரில் 15 பவுன் நகையை அடமானம் வைத்துள்ளேன். அந்த நகையை நீங்கள் மீட்டு அதற்குண்டான பணத்தை தருமாறு அந்த நிதி நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டார்.
இதை உண்மை என்று நம்பிய அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் வங்கி கணக்கில் 2 தவணையாக ரூ. 3.50 லட்சம் போட்டு உள்ளனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் கூறிய நிதி நிறுவனத்திற்கு சென்று விவரங்கள் கேட்டபோது அப்படி ஒரு பெயரில் நகை அடமானம் வைக்கப்படவில்லை என தெரிய வந்தது. பிரேம்குமார் மோசடி செய்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.
இது குறித்து அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார் க்கு போன் செய்த போது வருகிறேன் என்று கூறி காலம் தாழ்த்தி வந்து உள்ளார். இது தொடர்பாக நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில் மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பிரேம்குமார் சென்றது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் பிரேம்குமாரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த நிதிநிறுவனத்தில் பிரேம்குமார் இதே போல் மோசடியில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. பிரேம்குமாரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் பிரேம்குமார் ஏற்கனவே ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நீதி நிறுவனத்தில் இதே போல் மோசடியில் ஈடுபட்டு பணத்தை பெற்றது தெரிய வந்தது.
மேலும் இவர் மீது நாமக்கல்லில் பொருளாதார குற்றப்பிரிவில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இது குறித்து ஈரோடு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேம்குமாரை கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்கு மாருக்கு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது.
- இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.
சத்தியமங்கலம்:
பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-
ஆந்திரமாநிலம் கதிரி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் கதிரி லாப்பாக்சி 1812 என்ற புதிய நிலக்கடலை கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த ரகத்தினை பயிரிட அடி உரமாக தொழு உரமும், 12.5 டன் தழை மற்றும் 30 கிலோ சாம்பல் சத்தினை இடவேண்டும். வரிசைக்கு வரிசை 30 செ.மீ செடிக்கு செடி 10 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும். விதைத்த 20 நாட்களுக்கு பிறகு 12.5 - 50 - 30 தழை மணி சாம்பல் சத்தினை இடவேண்டும். ஹெக்டருக்கு 12.5 கிலோ நுண்ணூட்ட கலவையை தொழுஉரம் அல்லது மணலில் கலந்து இடலாம்.
பயிர் நட்ட 35-45 நாட்களுக்குள் களை யெடுத்து ஜிப்சம் 400 கிலோ எக்டருக்கு என்ற அளவில் இட்டு மண் அணைக்கவேண்டும். இதனால் மண்ணின் தன்மை இலகுவாகி காய்பிடிப்பு திறன் அதிகமாகிறது.
மேலும் இந்த ரகமானது அதிக எண்ணை சத்து கொண்ட தாகவும், அதிக விளைச்சல் கொண்ட தாகவும் ஹெக்டருக்கு 4000 முதல் 5000 கிலோ வரை மகசூல் கிடைக்க கூடிய ரமாக உள்ளது. இத்தகைய ரகத்தினை பவானிசாகர் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் புளியம்பட்டி துணை வேளாண்மை விரிவாக்கமையத்திலும் நடப்பு பருவத்திற்கு போதுமான அளவு விதைகள் இருப்பில் உள்ளது.
இந்த விதைகள் 50 சதவீதம் மானியத்தில் விவசா–யிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரகத்தினை விவசா–யிகள் அனைவரும் மானியவிலையில் வாங்கி விதைத்து பயன் பெருமாறு பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா கேட்டுகொண்டுள்ளர்.
- பவானிசாகர் அருகே உடற்பயிற்சி நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய மாணவர் மீது லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தியேலே இறந்தார்.
- இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவர் பு.புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி புரிந்து வருகிறார்.
இவரது மகன் கரண் (20). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கரண் உடற்பயிற்சி நிலையத்துக்கு சென்று விட்டு மேட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக தொட்டம்பாளையம் ரோட்டில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக கோவையில் இருந்து பஞ்சாப் செல்வதற்காக எந்திர பாகங்கள் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த லாரி எதிர்பாராதவிதமாக கரண் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த அடிப்பட்டு கீழே விழுந்து சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.
- எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வி.வி.சி.ஆர் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் ராமன் குட்டி நாயர். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் இளைய மகன் மனோஜ் என்கிற மனோஜ் குமார்(42). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று மனோஜ்குமார் வீட்டில் மாடியில் பொங்கல் வைப்பதற்காக அடுப்பை பற்ற வைத்து போது எதிர்பாராத விதமாக அவரது உடையில் தீப்பிடித்தது.
வேதனை தாங்காமல் மனோஜ் குமார் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு கீழே இருந்த அவரது தந்தை, ராமன்குட்டி அண்ணன் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்து சிகிச்சைகாக மனோஜ் குமாரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மனோஜ்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு அருகே வாங்கி கடனை செலுத்தமுடியாததால் வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பெரிய சேமூர், ராம் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (37). இவரது மனைவி கனகசுந்தரி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சரவணன் தனிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் சரவணனுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு குடல் இறக்கம் ஏற்பட்டு மருத்துவச் செலவுக்காக கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில் சரவணனுக்கு சரிவர வேலை இல்லாததால் கடனை செலுத்த முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.
மேலும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். தனக்கு வாழ பிடிக்கவில்லை என்று மனைவியிடம் கூறி வந்துள்ளார். சரவணை அவரது மனைவியை சமாதானப்படுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்ய முடிவெடுத்த சரவணன் வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு கொண்டார். அப்போது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அவரது மகள் வீட்டிற்கு வந்த போது தந்தை தூக்கு போட்டு கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து அக்கம்பக்கத்தில் தகவல் தெரிவித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
- சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை அந்தியூர் அடுத்த அத்தாணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, புஷ்பநாதன், கேர் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
அந்தியூர்:
கோபி சரக கூட்டுறவு சங்கம், அந்தியூர் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ேரசன் கடை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை அந்தியூர் அடுத்த அத்தாணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, புஷ்பநாதன், கேர் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.
இம்முகாமில் பொதுமருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கண், பல் பரிசோனைகள் மேற்கொள்ளப்ட்டது.
இந்த சிறப்பு முகாமில் கூட்டுறவு சங்க சி.எஸ்.ஆர்.பிரபு, கூட்டுறவு சார் பதிவாளர்கள் சங்கச் செயலாளர்கள், கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ரேசன் கடை பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.
- ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூர் மற்றும் ஒன்றிய உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பாக அந்தியூர் தவிட்டுப்பாளையம் அம்பேத்கர் வீதி, வேலாயுதம் வீதி, அண்ணா சாலை, சிங்கார வீதி, தேர் வீதி, செல்லப்ப கவுண்டன் வலசு ஆகிய இடங்களில் புதிய ரசிகர் மன்ற பெயர் பலகை திறப்பு விழா மாவட்ட தலைவர் சன் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
ஒன்றிய பரிந்துரையாளர் ம.ரமேஷ் குமார் வரவேற்றார்.
மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சசிகுமார் மாவட்ட பொருளாளர் பகிர் மாவட்ட துணை பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ் துணைத் தலைவர் சாக்கு பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நகர பொறுப்பாளர்கள் பிரகாஷ், திவாகர் ஈரோடு ஒன்றிய தலைவர் முத்தமிழ் பிரபாகர், பவானி நகரத் தலைவர் கதிரவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் மன்ற நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரமேஷ் குமார், நாகராஜ், பார்த்திபன், மாதேஷ், கார்த்திகேயன், தினேஷ் பாபு மணிகண்டன், மாதேஷ், சுமை ரமேஷ், வேல்முருகன், சரவணன், கோபால், விவேக் தியாகு, சரவணன், லோகநாதன்மற்றும் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்முடிவில் அந்தியூர் நகர பொறுப்பாளர் ஜெயக்குமார் கூறினார்
- அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
- இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.
கோபி:
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ்குமார் என்பவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.
அப்போது அ.தி.மு.க.வில் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக அப்போது அ.தி.மு.க. கோபி நகர செயலாளராக இருந்த சையதுபுடான்சா என்பவர் கோபிசெட்டிபாளையம் ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் இன்று காலை ஆஜர் ஆனார்.
இந்த வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.
- டேங்கர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி விட்டு பெருந்துறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- கோவை-சேலம் பைபாஸ் சாலையில் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தினர்.
பெருந்துறை:
கேரள மாநிலம் கொச்சினிலிருந்து மும்பைக்கு எளிதில் தீ பற்றக்கூடிய ப்ரோப்லின் கியாஸ் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. இதை அக்ரம்கான் (45) என்பவர் ஓட்டி வந்தார்.
டேங்கர் லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் வந்த போது டேங்கர் லாரியின் பின்பகுதியில் கியாஸ் அழுத்தம் அளவீடு செய்யும் மீட்டர் உடைந்து அதன் வாழ்வு வழியாக கியாஸ் வெளியேறியது. இதை பார்த்த மற்ற டிரைவர்கள் டேங்கர் லாரி டிரைவர் அக்ரம்கானிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் டேங்கர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி விட்டு பெருந்துறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர் மசுதா பேகம், தீயணைப்பு நிலைய அலுவலர் நவீன்தரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் கோவை-சேலம் பைபாஸ் சாலையில் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தினர். தொடர்ந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட லாரியை போக்குவரத்து இல்லாத பொன்முடி பிரிவு சாலையில் நிறுத்தினர். டேங்கர் லாரி அருகே யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டது.
கியாஸ் கசிவு குறித்து டேங்கர் லாரி டிரைவர் மும்பையில் உள்ள கம்பெனிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு இருந்து தனஞ்சை என்ற என்ஜினீயர் விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அங்கிருந்து பெருந்துறைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் 1 மணி நேரத்தில் கியாஸ் கசிவை முற்றிலும் சரி செய்தார். இதையடுத்து டேங்கர் லாரி மீண்டும் புறப்பட்டு சென்றது.






