search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Medical"

    • மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மதுரை

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் யாதவா மகளிர் கலைக்கல்லூரி மற்றும் இந்திய பல் மருத்துவ சங்க மதுரை கிளை மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து சிறப்பு பல் மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை மதுரை சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, மத்திய சிறை கண்காணிப்பாளர் பரசுராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச் சிறையில் நடைபெற்ற பல் மருத்துவமுகாமில் 250 கைதிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    • சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை அந்தியூர் அடுத்த அத்தாணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, புஷ்பநாதன், கேர் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    கோபி சரக கூட்டுறவு சங்கம், அந்தியூர் வட்டாரத்தில் உள்ள கூட்டுறவு நிறுவன பணியாளர்கள் மற்றும் ேரசன் கடை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் இன்று காலை அந்தியூர் அடுத்த அத்தாணி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கோபி சரக துணைப்பதிவாளர் கந்தராஜா, புஷ்பநாதன், கேர் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்த முகாமில் ஈரோடு மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ராஜ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

    இம்முகாமில் பொதுமருத்துவம், சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, கண், பல் பரிசோனைகள் மேற்கொள்ளப்ட்டது.

    இந்த சிறப்பு முகாமில் கூட்டுறவு சங்க சி.எஸ்.ஆர்.பிரபு, கூட்டுறவு சார் பதிவாளர்கள் சங்கச் செயலாளர்கள், கூட்டுறவு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ரேசன் கடை பணியாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன் பெற்றனர்.

    ×