என் மலர்
ஈரோடு
- இன்று தொடர்ந்து 9-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது.
- அணைக்கு வினாடிக்கு 15,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு, ஆக. 13-
பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.
இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனை த்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.
தொடர்ந்து பவானிசாகர் அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பவானி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தொடர்ந்து 9-வது நாளாக பவானிசாகர் அணை 102 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 15,300 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் 15,100 கன அடி நீர் அப்படியே பவானி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டு வருகிறது.
- மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
- இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளை யம் ராஜகோபால் தோட்டம், கலைஞர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவரது மனைவி சங்கீதா (30).
பார்த்திபன் தெரிந்தவர்க ளிடம் கடன் வாங்கி உள்ளார். கடன் வாங்கிய வர்களிடம் பணம் கொடுக்க முடியாமல் தவித்தும் வந்து உள்ளார்.
இதனால் சமீபகாலமாக அவர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். கடந்த 4 வருடத்திற்கு முன்பு பார்த்திபன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த பார்த்திபன் தற்கொலை செய்து முடிவு எடுத்து கடந்த 8-ந் தேதி பூச்சி கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார்.
இதனை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பார்த்திபன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.
- ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து அத்தாணி ரோட்டில் ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரியில் இருந்து ஆயில் கசிந்து சாலையில் கொட்டி கொண்டே சென்றது.
அப்போது அந்த வழியாக கார், இரு சக்கர வாகனங்கள் வந்தது. ஆயில் கசிந்ததால் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தடுமாற்றம் அடைந்து ஆயிலின் பசை தன்மையால் சாலையில் விழுந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறை க்கும் தகவல் தெரி விக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலையில் ஆயில் கசிந்த பகுதிகளில் டயர்களை போட்டு அந்த பகுதியில் வாகனங்கள் வராமல் தடுக்கப்பட்டு மணல் போட்டு சரி செய்தனர்.
இதனால் வாகனங்களில் வந்தவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்த னர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்கு வரத்து பாதிப்பும் பர பரப்பும் அந்தப் பகுதியில் நிலவியது.
- முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.
- இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பெரியார் தெருவை சேர்ந்தவர் முனேஷ் (28). பெயிண்டர். இவரது மனைவி தரணி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் முனேஷ் சிறு வயது முதல் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி மூச்சு விடவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டுக்கு வந்த முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவீர சிகிச்சை பிரிவில் இருந்த முனேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.
- இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.
ஈரோடு:
பவானிசாகர் வட்டார த்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் தொப்ப ம்பாளையம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட அம்மாபாளைம் கிராமத்தில் காளான் வளர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி செயல் விளக்கத்துடன் நடை பெற்றது.
இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சரோஜா தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தார். வேளாண்மை பொறியியல்துறை உதவி செயற்பொறி யாளர் சண்முக சுந்தரம் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றியும் எடுத்து கூறினார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் பிருந்தா காளான் வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் சத்துகள் பற்றி எடுத்துறைத்தார். இயற்கை விவசாயி லோகநாதன் காளான் வளர்ப்பு விதைகள், வளர்ப்பு பைகள் தயாரிக்கும் முறைகள் பற்றி செயல்விளக்கத்துடன் பயிற்சியளித்தார்.
கால்நடை மருத்துவர் முருகானந்தம் கால்நடை பராமரிப்பு பற்றி எடுத்து க்கூறினார். வீர லட்சுமிகாந்த் மற்றும் தமிழ்செல்வன், வேளாண் வணிகத்துறை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரதீப்குமார், மற்றும் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் அன்ப ரசன் ஆகியோர் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் பற்றி பேசினர்.
முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்புராஜ் நன்றி கூறினார். மேலும் உதவி வேளாண்மை அலுவலர் வள்ளி பயிற்சி க்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தார். இப்பயிற்சி யில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பயிற்சியின் முடிவில் காளான் வளர்ப்பிற்கான வழிமுறைகள் நேரடி செயல்விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது.
- நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுவது மத்திய அரசு 2014 -ல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான்.
- ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நகர்ப்புற உள்ளாட்சித் துறை அலுவலர்களுடன் அமைச்சர் நேரு தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது.
பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது. உள்ளாட்சித் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து அறிக்கை பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
2-ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அத்திட்டத்தின் கீழ் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அது கிடைக்கப்பெற்றதும் பணிகள் துவங்கும். தமிழக முதல்-அமைச்சர் நகர்ப்புற உள்ளாட்சி மேம்பாட்டிற்கு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
அதன் கீழ் பல்வேறு குடிநீர், சாலை வசதி கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்த திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சிகளில் அது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாய்வில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கை வைத்துள்ளனர். அவைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் குப்பை வரி வசூலிக்கப்படுவது மத்திய அரசு 2014 -ல் கொண்டு வந்த சட்டத்தின் அடிப்படையில்தான். ஈரோட்டில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப்புகள் போடுவதில் சில இடங்களில் குறைபாடு இருந்தது. ஆனால் நகரில் குடிநீர் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலக்கட்டத்தில் நகராட்சி கடைகள் வாடகை கட்டாததற்கு விலக்கு அளிக்கப்படாது. கடைகளின் வாடகையை நம்பிதான் நகராட்சிகள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ஈரோடு மாநகராட்சி சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள், விற்பனை வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 964 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் 127 வண்டிகளை வழங்கினார்.
- கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
- அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை.
பவானி:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பா.ம.க. தலைவராக பொறுப்பேற்று கொண்ட பிறகு அன்புமணி ராமதாஸ் முதல் முறையாக ஈரோடு மாவட்டத்துக்கு இன்று (சனிக்கிழமை) வருகிறார். தொடர்ந்து அவர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதைதொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் பவானி வி.என்.சி. கார்னர் தேர்வீதி பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு சிற்ப்புறை ஆற்றுகிறார்.
மேலும் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., வன்னியர் சங்க மாநில செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். இதில் ஈரோடு, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.
முன்னதாக இன்று மாலை அன்புமணி ராமதாசுக்கு மத்திய மாவட்ட பா.ம.க. சார்பில் லட்சுமி நகர் பைபாஸ் அருகே வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து கட்சி கொடி ஏற்றி வைத்து பேசுகிறார்.
அங்கு இருந்து பவானி செல்லும் அவருக்கு கூடுதுறை பாலம் அருகே வடக்கு மாவட்ட பா.ம.க. சார்பில் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் பவானியில் நடக்கும் பொது க்கூட்டத்தில் பேசுகிறார்.
இதை தொடர்ந்து இன்று இரவு ஈரோடு வில்லசம்பட்டியில் தங்குகிறார். இதையடுத்து நாளை காலை ஈரோட்டில் இருந்து நசியனூர், காஞ்சிகோவில், கவுந்தப்பாடி, கோபி செட்டிபாளையம் பகுதிகளுக்கு அவர் சென்று பா.ம.க. கொடி ஏற்றி வைத்து தொண்டர்கள் மத்தியில் பேசுகிறார்.
தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் அங்கு இருந்து செல்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
- பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
- போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், ஆசனூர் ஆகிய பகுதிகள் தமிழக கர்நாடக எல்லை பகுதியில் அமைந்து உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து சிலர் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அருகில் உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
போலீஸ் சோதனையை மீறியும் ரேசன் அரிசி கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் ஒரு கும்பல் ரேசன் அரிசியை கடத்தியது. இந்த ஆட்டோவை ஆசனூர் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை விடுவிக்க ரேசன் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெண் ஆசனூர் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் என்பரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது போலீஸ் ஏட்டு ஜெகநாதன் அந்த பெண்ணிடம் ரேசன் அரிசி கடத்திய ஆட்டோவை விடுவிக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
இதை ரேசன் அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த பெண் தனது செல்போனில் பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியானது. போலீசார் மத்தியில் இது பரபரப்பாக பேசப்பட்டது.
இது பற்றி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சத்தியமங்கலம் டி.எஸ்.பி. சந்திரசேகர், தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் ரேசன் அரிசி கடத்தல் கும்பலிடம் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு ஜெகநாதன் லஞ்சம் கேட்டது உறுதியானது. இது குறித்து அவர்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிக்கையாக கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், ஆசனூர் தனிப்பிரிவு ஏட்டு ஜெகநாதனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
- ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஈரோடு:
மொடக்குறிச்சி அடுத்த பூந்துறை பெரியசேமூர் பகுதியை சேர்ந்த மக்கள் சிலர் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது. சரியான பராமரிப்பு இன்றி உள்ளதால் எங்கள் கிரா மத்தில் குடியிருப்புகளிலும், கால்நடை வளர்ப்புகளிலும் ஈக்கள் தொந்தரவு அதிகமாகி உள்ளது.
இதனால் சுகாதாரக் கேடு நோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈக்கள் தொல்லை யால் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். உடனடியாக அந்த கோழி பண்ணையை மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ள னர்.
- இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
- இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 55 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை
1 லட்சத்து 34 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை யிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
ஈரோடு:
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி இன்று அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை யிலேயே நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து மகா தீபாராதணை காண்பிக்க ப்பட்டது. ஈரோடு கருங்க ல்பாளையம் சோளீ ஸ்வரர்கோவில் வில்வே ஸ்வரர், புஷ்பநாயகி அம்ம னுக்கு புனித நீர் ஊற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
இதேபோல், சின்ன மாரி யம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கொங்காலம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆடி 4-ம் வெள்ளியை யொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் மிகவும் புகழ்பெற்ற சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பொதுமக்களுக்கு அருள் பாலித்தார்.
பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
இதேபோல் சத்திய மங்கலம் தண்டு மாரியம்மன் கோவிலிலும் இன்று ஆடி வெள்ளியை யொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதேபோல் தாளவாடியில் உள்ள மாரியம்மன் கோவில், பவானியில் கருமாரியம்மன் கோவில், புகழ்பெற்ற செல்லியாண்டி அம்மன் கோவிலிலும் பக்தர் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதேபோல் கோபியில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவிலில் இன்று அதிகாலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. நூற்று க்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசை நின்று அம்மனை வழிபட்டனர்.
இதேபோல் சாரதா மாரியம்மன் கோவில் அந்தியூரில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் என மாவட்டம் முழுவதும் அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது
- தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 55 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை
1 லட்சத்து 34 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






