ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு 354 பேர் சிகிச்சை

இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஈரோட்டில் கொரோனா பாதிப்புக்கு 354 பேர் சிகிச்சை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் தினசரி பாதிப்பு திடீரென சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 46 பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் நேற்று 55 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை

1 லட்சத்து 34 ஆயிரத்து 833 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த 62 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 745 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 354 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com