மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை

முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து பெயிண்டர் தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு அண்ணமார் பெட்ரோல் பங்க் பெரியார் தெருவை சேர்ந்தவர் முனேஷ் (28). பெயிண்டர். இவரது மனைவி தரணி (22). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் முனேஷ் சிறு வயது முதல் இருந்தே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அடிக்கடி மூச்சு விடவும் சிரமப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9-ந் தேதி வீட்டுக்கு வந்த முனேஷ் தற்கொலை செய்ய முடிவெடுத்து மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்துள்ளார்.

இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு திவீர சிகிச்சை பிரிவில் இருந்த முனேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com