என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.
    • இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,

    கொடுமுடி:

    கொடுமுடி அருகே கருக்கம்பாளையத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் சுமங்கலிபூஜை நடைபெற்றது.இதனையொட்டி கிராமத்து பெண்கள் அனைவரும் கோவிலில் கூடினர். அம்மனுக்கு சிறப்பு அபிசேகம், ஆராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்தியான அம்மன் விக்கிரகத்துக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டு அம்மன் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டு பெண்கள் அனைவரும் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர்.

    அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது,

    • இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.
    • அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணைக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. மழை குறைந்ததால் நீர் வரத்தும் குறைந்தது.

    இன்று காலை மேலும் நீர் வரத்து குறைந்து பவானிசாகர் அணைக்கு 5ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் தொடர்ந்து நீடிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 5400 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே 5,400 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 

    • இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26). இவர் சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் அருகே தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
    • முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்

    சித்தோடு:

    ஈரோடு வடக்கு மாவட்ட பாட்டாளி கட்சியின் சார்பில் பவானி தேர் வீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.

    மாநில துணைத்தலைவர் எஸ். எல். பரமசிவம், எம்.பி.வெங்கடாஜலம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சி. ஆர். கோபால், எஸ்.பி. வல்லவராயன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக வடக்கு மாவட்ட தலைவர் செ ங்கோட்டையன் வரவேற்று பேசினார்.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசிய தாவது:-

    தமிழ்நாட்டில் தொடர்ந்து திராவிட கட்சிகள் தி.மு.க. அ.தி.மு.க. என அரை நூற்றாண்டுகள் 55 ஆண்டுகள் மாறி மாறி ஆட்சி செய்து வருகிறது. ஆனால் நமக்கு முன்னேற்றம் கிடைத்ததா? இல்லை முன்னேற்றம் என்றால் அவர்களுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது.

    நாளை நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படும் நிலையில் நாம் அதே குடிசை யில் வேலை வாய்ப்புகள் இன்றி உள்ளோம்.

    இந்த பவானி நகர் என்றவுடன் நினைவுக்கு வருவது உலக புகழ்பெற்ற பவானி ஜமுக்காளம் ஆகும். ஆனால் அந்த தொழில் தற்போது நலிவடைந்து வருகிறது. அந்த தொழில் செய்பவர்கள் வறுமையில் வாழ்கின்றனர். அதில் தற்போது ஒரு புது பிரச்சினை நூல் விலை உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி. போன்றவற்றினால் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பல லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு இன்றி உள்ளனர்.

    அதேபோல் அந்தியூர் பர்கூர் மலை வாழ் மக்கள் சுமார் 35 ஆயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் பல ஆண்டுகளாக எஸ்.டி. சாதி சான்றிதழ் கேட்டு வருகின்றனர். ஆனால் இந்த மாவட்டத்தில் அந்த சான்றிதழ் வழங்க ப்படவில்லை. இதனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஏன் தர மறுக்கின்றனர் என தெரிய வில்லை. கிருஷ்ணகிரியில் கொடுத்துள்ளனர்.

    கர்நாடகா மாநிலத்தில் கொடுத்துள்ளனர். இங்கு மட்டும் இதுவரை கிடைக்க வில்லை. உடனடியாக தமிழக அரசும், மத்திய அரசும் மலை வாழ் மக்களுக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

    பாட்டாளி மாடல் என்றால் தமிழ்நாட்டில் ஒரு சொட்டு சாராயம் கூட இல்லாதது தான் ஆகும். பெண்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக செல்லலாம். தரமான இலவசமான கல்வி வழங்கப்படும். இலவசமாக சுகாதாரம் கிடைக்கும், நீர் நிலைகள் பாதுகாக்கப்படும். புதிய ஏரிகள் உருவாக்க ப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்க அனைத்து விதமான நடவடி க்கையும் மேற்கொள்ளப்படும். விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கலாம். வருகின்ற 2026-ல் தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் மாவட்ட தேர்தல் பணிக்குழு தலைவர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் நன்றி கூறினார்.

    முன்னதாக பா.ம.க. தலைவராக பதவி ஏற்று கொண்ட அன்புமணி ராமதாஸ் முதன் முறையாக பவானி நகருக்கு வந்ததை யடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க ப்பட்டது. பெண்கள் மலர் தூவி வரவேற்றனர்.

    இந்த பொதுக்கூட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் யோகபிரபு, துணைத் தலைவர் சர்வேயர் வேலு, துணை செயலாளர் முருகானந்தம், ஜம்பை பேரூர் செயலாளர் சம்பத், பேரூர் தலைவர் கார்த்தி, உழவர் பேரியக்க நிர்வாகி சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர் குமார், முன்னாள் கவுன்சிலர் தாண்டவன், மாணவர் சங்க பொறுப்பாளர் பிரேம் ஆனந்த், ஜம்பை பேரூர் பொறுப்பாளர் சக்திவேல், அம்மாபேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் பிரபு, ஈரோடு வடக்கு மாவட்ட பா.ம.க. இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஜெகதீசன், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய கவுன்சி லர் வனிதா ஜெகதீசன், டாஸ்மாக் பாட்டாளி தொழிற் சங்க மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் சுதாகர், மாநில துணை செய லாளர் சேகர், மாணவர் சங்க பொறுப்பா ளர் பிரேம் ஆனந்த், மாநில இளைஞர் சங்க முன்னாள் துணை செயலாளரும், மாவட்ட இளைஞர் சங்க தலைவருமான முனுசாமி, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் முன்னாள் சேர்மன் முத்து லட்சுமி முனுசாமி, மத்திய மாவட்ட முன்னாள் செய லாளர் துர்க்கா கோவிந்த ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன், அந்தியூர் தெற்கு செயலாளர் பிரகாஷ், கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கோவிந்தசாமி, மத்திய மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் பழனிவேல், காஞ்சிகோவில் பேரூர் செயலாளர் அய்யனார், பள்ளா பாளையம் பேரூர் செயலாளர் முத்துசாமி, அம்மாபேட்டை முன்னாள் சேர்மன் குமரவேல், மாவட்ட துணை செயலாளர் ஆண்டவர், உழவர் பேரியக்க மாவட்ட தலைவர் செந்தில்குமா ர், மாவட்ட துணை செயலாளர் நடராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சி லர் பிரகாஷ், ஒன்றிய தலைவர் ராஜூ, முன்னாள் ஒன்றிய செயலாளர் கோபால், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் செயலாளர் சரவணன், முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன் என்ற தண்டாயுத பாணி, பாட்டாளி சமூக ஊடக பேரவை குமரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கென்று கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும்.
    • தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி அரசை செயல்படுத்த வைக்கிறோம்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். ஆனால் 75 ஆண்டுகள் ஆகியும் மக்களுக்கு இன்னமும் விடுதலை கிடைக்கவில்லை. இந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 55 ஆண்டு காலம் திராவிட ஆட்சி நடந்துள்ளது. முதல்-அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். சுதந்திர தினத்தையொட்டி நாளை பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிடுவார்.

    அதில் தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும். அதற்குரிய செயல் திட்டமும் வெளியிட வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்கிறேன் என்று அறிவிப்பு வரவேண்டும். போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை வெளியிட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என நானும் நம்புகிறேன்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பூரண மது விலக்கு கொண்டுவரப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் 15 மாதம் ஆகியும் இது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. காவிரி ஆற்றில் கடந்த 28 நாட்களாக 151 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது. கர்நாடக மாநிலம் நமது தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். ஆனால் 28 நாட்களில் 151 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலந்துள்ளது.

    இதை தடுக்க காவிரியில் குறைந்தது 50 தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் 70 டி.எம்.சி. தண்ணீரை நாம் சேர்த்து வைக்க முடியும். இந்தியாவில் இலவசம் வேண்டுமா வேண்டாமா என்ற சர்ச்சை உள்ளது. இது குறித்து பா.ம.க. அந்நிலைப்பாடு தேவையான இலவசம் வேண்டும் என்பதே ஆகும். தேவையான இலவசம் என்றால் கல்வி, சுகாதாரம், வேளாண் இடுப்பொருள் சம்பந்தமான இலவசங்கள் வேண்டும். வாக்குக்கான இலவசம் வேண்டாம்.

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் இதுவரை 28 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக நாங்கள் அழுத்தம் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். அரசு இது தொடர்பான அரசாணை வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு அப்படியே இருந்து விட்டது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பவானி ஜமுக்காளம் உலகப் புகழ்பெற்றது. நூல் விலை உயர்வு காரணமாக 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இழந்துவிட்டனர்.

    தற்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. நூலுக்கு போடப்பட்டுள்ளது. அதை விற்கவும் ஜி.எஸ்.டி. தனியாக போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக போதை பழக்கம் கூடி வருகிறது. பள்ளி கல்லூரி அருகே சர்வ சாதாரணமாக கஞ்சா பொட்டலங்கள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இதை போலீஸ் நினைத்தால் அடியோடு தடுத்து விடலாம். தற்போது கஞ்சாவை விற்பவர்கள் மட்டுமே கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அதன் பின்னணியில் இருப்பவர்கள் கைது செய்யப்படுவதில்லை.

    மத்திய-மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதற்கென்று கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி அரசை செயல்படுத்த வைக்கிறோம். ஆக்கபூர்வமான அரசியலை நடத்தி வருகிறோம். வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று 16 ஆண்டுகளாக பா.ம.க. கூறிவந்தது. அதை ஏற்று அரசு கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்ற முறை ஏற்புடையதல்ல. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கல்விக் கொள்கை உள்ளது. நீட் நுழைவு தேர்வால் அதிக தற்கொலைகள் நடக்கிறது. இதற்கு பெற்றோர்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளனர். தங்களது பிள்ளைகளை கட்டாயப்படுத்தி டாக்டருக்கு தான் படிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார்கள். இதனை மாற்றிக் கொள்ள வேண்டும். பா.ம.க. 2.0 என்ற செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. தலைமையில் புதிய கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம். அதற்கான வெற்றி வியூகத்தை 2024-ல் நாங்கள் அமைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 எட்டி உள்ளது.

    சத்தியமங்கலம்:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 3 நாட்களுக்கு வீடுகள் வணிக நிறுவனங்களில் தேசிய கொடியை ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இதனை ஏற்று பொதுமக்கள் வீடுகளிலும், நிறுவனங்கள், கடைகள் முன்பும் தேசிய கொடியை ஏற்றி உள்ளனர். இது போக முக்கிய சுற்றுலாத் தலங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை தமிழ்நாட்டில் 2-வது பெரிய மண் அணை என பெயர் பெற்றுள்ளது.

    இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்டங்களை சேர்ந்த 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை நீர்மட்டம் 102 எட்டி உள்ளது. தற்போது கடல் போல் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் விடுமுறை நாட்களான நேற்றும் இன்றும் பவானிசாகர் அணையை பார்க்க ஏராளமான மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பவானிசாகர் அணையின் மேல் மதகுகள் வழியாக வெளியேறும் உபரிநீர் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தில் வெளியேறும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்த காட்சியை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பவானிசாகர் அணைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதே போல் ஈரோட்டில் முக்கிய இடங்கள், அரசு அலுவலகங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

    • ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.
    • கொரோனா பாதிப்புடன் 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பாதிப்பை விட குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 878 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 55 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 33 ஆயிரத்து 800 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையையும், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை வருகின்றனர்.

    ஈரோடு:

    இந்தியாவின் 75-வது சுதந்திர தினவிழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள முக்கியமான சோதனை சாவடிகளான கருங்கல்பாளையம் சோதனை சாவடி, பவானி லட்சுமி நகர் சோதனை சாவடி, நொய்யல் ஆறு சோதனை சாவடி, பண்ணாரி சோதனை சாவடி, காரப்பள்ளம் சோதனை சாவடி என மொத்தம் மாவட்டம் முழுவதும் 14 சோதனை சாவடிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டு 24 மணி நேரமும் வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    வாகனங்களை நிறுத்தி உடைமைகளை சோதனை செய்த பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.நெடுஞ்சாலைகளிலும் போலீசார் ரோந்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதேபோல் இன்று முதல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகளை தீவிர பரிசோதனை செய்து வருகின்றனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் வைத்து சோதனை செய்து வருகின்றனர்.

    ரெயில்வே நுழைவாயில் பகுதியில் ஈரோடு ரெயில்வே போலீசார் ஒவ்வொரு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

    மேலும் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையையும், போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை வருகின்றனர். மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு ரெயில் பெட்டிகளையும் சோதனை செய்து வருகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாஆய்வு செய்தார்.
    • வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஈரோட்டுக்கு வந்தார்.

    இன்று காலை அவர் காளை மாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி மூலம் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். வணிக வளாகத்திற்குள் சென்று பணி குறித்து கேட்டு அறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சோலாரில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட வரும் பஸ் நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நகர் நல அலுவலர் பிரகாஷ், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
    • மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    ஈரோடு, ஆக. 13-

    ஈரோடு மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு வாரத்தை யொட்டி போதைப் பொருள் தடுப்பு, போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையொட்டி ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் போதைப் பொருள்தடுப்பு மற்றும் போதைப் பொருட்களை உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில் அமைச்சர் சு.முத்து சாமி கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்க ளின் மனநலம் மற்றும் கற்றல் குறைபாடுகள் குறித்த கருத்தரங்கம் நடை பெற்றது.

    இப்பயிற்சியில் 240 ஆசிரியர்கள் நேரடியாக வும், 380-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காணொலி காட்சி வழியாகவும் பங்கேற்றனர்.

    மேலும் மாவட்ட கலெக்டரின் அறிவுரையின்படி, ஈரோடு மற்றும் திகிணாரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    பனக ஹள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்பு ணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    தொடர்ந்து தாளவாடி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி யில் போதைப்பு பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியும், கோபி செட்டி பாளையம் அடுத்த கரட்டடி பாளையம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் மாணவர்களுக்கான உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    மேலும் போதை பொருள் தடுப்பு குறித்து டாக்டர்கள், செவிலியர்கள் பேசினர்.

    அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு உடல் நலம் மற்றும் மன நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

    • அந்தியூர் பகுதியில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் புதுக்காடு செல்லும் சாலையில் ஒரு கடையும், தவுட்டுப்பாளையம் அத்தாணி செல்லும் சாலையில் 2 கடைகளும், பள்ளியபாளையத்தில் ஒரு கடை, மூலக்கடை பகுதியில் ஒரு கடையும் என 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த கடைகளில் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 5 லட்சத்துக்கும் மேல் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் ஒரு பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ.15 வரை அதிக விலைக்கு வைத்து விற்பனை செய்யப்படுவதாகவும், அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் ரூ.10 முதல் ரூ.15 வரை அதிகம் வாங்குவதால் இதைப்பற்றி யாரிடம் கூறுவது என்று தெரியாமல் வேதனையோடு மது போதையில் அவர்களின் நண்பர்கள் இடத்தில் கூறி ஆறுதல் அடைந்து வருகின்றார்கள்.

    அந்தியூர் பகுதியில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை துறை சார்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு அரசு நிர்ணயித்த விலையிலேயே மது பாட்டில்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மது பிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது.
    • தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    சங்கமேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேதநாயகி அம்மன் சன்னதி முன்பாக தாமரை வடிவில் யாக குண்டம் அமைத்து உலக நன்மை வேண்டி லலிதா சகஸ்ஸர நாம யாகம் நடந்தது. சங்கமேஸ்வரர் கோவில் பாலாஜி சிவம் சிவாச்சாரியார் தலைமை யில் குழுவினர் மூலம் யாகம் நடை பெற்றது.

    இதனைத் தொடர்ந்து வேதநாயகி அம்மன் கோவிலில் உள்ள மூலவர் வேதநாயகி அம்மனுக்கு பெண்கள் 1008 பால்குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால்குட அபி ஷேகம் நடைபெற்றது.

    இதில் பவானி, காளிங்க ராயன் பாளையம், குமார பாளையம் உள்பட பலேவறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதனைத் தொடர்ந்து மாலை வேதநாயகி சன்னதி முன்பாக 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பவானி சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆடி கடைசி வெள்ளி விழா குழுவினர் செய்திருந்தனர்

    ×