என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
- இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.78 அடியாக உள்ளது.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ–தால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை–யின் நீர்மட்டம் 101.78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 852 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இதுவரை 1,500 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையி–லிருந்து 1,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
- செல்போனில் கூகுள் பே இருப்பதை அறிந்து கொண்ட கும்பல் பணம் அனுப்புமாறு கேட்டு ஆயுதங்களை காட்டி இருவரையும் மிரட்டி உள்ளனர்.
- உயிருக்கு பயந்து இருவரும் ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்ப நண்பர்களுக்கு போன் செய்து கூகுள் பேவுக்கு ரூ.40 ஆயிரம் பெற்று பின்னர் கும்பலுக்கு தந்தனர்.
ஈரோடு:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சுதீர் (29). வேலை தேடி நண்பர் திலிப்பை பார்க்க ஈரோடு வந்தார். வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர் தோட்டம் பகுதியில் திலிப்புடன் தங்கி இருந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று திலீப், சுதீர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென 7 பேர் கொண்ட கும்பல் திலீப் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. அந்த கும்பல் சுதீர், திலிப் இருவரையும் தாக்கினர். திலிப்பிடம் இருந்து ரூ. 5,200 பறித்துக்கொண்டனர். பின்னர் அந்த கும்பல் இருவரது செல்போனையும் பறித்தனர். செல்போனில் கூகுள் பே இருப்பதை அறிந்து கொண்ட அந்த கும்பல் பணம் அனுப்புமாறு கேட்டு ஆயுதங்களை காட்டி இருவரையும் மிரட்டி உள்ளனர்.
உயிருக்கு பயந்து இருவரும் ஒடிசா மாநிலத்தில் உள்ள தங்கள் குடும்ப நண்பர்களுக்கு போன் செய்து கூகுள் பேவுக்கு ரூ.40 ஆயிரம் பெற்று பின்னர் கும்பலுக்கு தந்தனர். இதனைத் தொடர்ந்து ஆம்னி வேனில் இருவரையும் ஏற்றிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கடத்திச் சென்று இறக்கி விட்டு சென்று விட்டனர். பின்னர் இருவரும் பொதுமக்கள் உதவியுடன் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு வந்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் வீரப்பன்சத்திரம், பெரியவலசு ராதாகிருஷ்ணன் வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34), திருச்செங்கோடு, சூரியம்பாளையம், காட்டுவலசை சேர்ந்த பூபதி (21), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிபின் குமார்(22) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சோமசுந்தரம், லிங்கேஷ், பிரவீன், பிகாசு ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
- பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
- இரவில் கழிப்பறைக்கு சென்ற யுகேஷ் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது.
ஈரோடு:
ஈரோடு, சடையம் பாளையம், பகவதியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் யுகேஷ் (28). இவருக்கும் கோபியை அடுத்துள்ள பொலவபாளையம் பகுதியை சேர்ந்த கலைவாணி (23) என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
திருமணத்துக்கு முன்னரே 2 முறை ஏற்பட்ட வாகன விபத்தில், யுகேஷுக்கு காலிலும், முதுகு தண்டுவடத்திலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக யுகேஷ், தனது மனைவியுடன் பொலவபாளையத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.
இரவில் கழிப்பறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என தெரிகிறது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் யுகேஷ் கிடந்துள்ளார்.
இதையடுத்து, நம்பியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே யுகேஷ் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து வரப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சித்தோடு பகுதியில் உள்ள சேலம்- கோவை பைபாசில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட சென்றார்.
- நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் லாரிகளை குறிவைத்து பொருட்களை திருடுவதை இந்த கும்பல் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியசேமூர் ஈ.பி.பி. நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (61). லாரி ஆபீஸ் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் இருந்து லாரியில் பல்வேறு வெளிமாநிலங்களுக்கு மசாலா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
அதன்படி சம்பவத்தன்று பழனிச்சாமி நிறுவன லாரி ஒன்று மசாலா பொருட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பி சென்றது. சித்தோடு பகுதியில் உள்ள சேலம்- கோவை பைபாசில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் சாப்பிட சென்றார்.
சாப்பிட்டுவிட்டு டிரைவர் திரும்பி வந்தபோது லாரியின் பின்புற தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் இருந்த 630 கிலோ மசாலா பாக்கெட் திருட்டு போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் இருக்கும். இதுகுறித்து சித்தோடு போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சித்தோடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் மதுரை நாகமலை பகுதியைச் சேர்ந்த பிரசாத் (37), முத்துக்குமார் (49), உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த பாரதி (31), மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரூபன் (24) ஆகியோரை பிடித்து விசாரித்த போது லாரியில் மாசலா பொருட்களை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
இந்த கும்பல் நெடுஞ்சாலைகளில் மெதுவாக செல்லும் லாரிகளை குறிவைத்து பொருட்களை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் பிரசாந்த் மீது 18 வழக்குகளும், பாரதி மீது 3 வழக்குகளும் உள்ளன. பின்னர் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு:
பொங்கல் பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு, பானை, மஞ்சள், வாழைத்தார், பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
ஈரோடு மாநகரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள கரும்பு வியாபாரமும் இன்று அமோகமாக நடந்தது. ஒரு ஜோடி கரும்பு ரூ.70 முதல் ரூ.100 வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் பனங்கிழங்கு விற்பனையும் நடந்தது.
இதேபோல் கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், அந்தியூர், பவானி, சித்தோடு, சென்னிமலை, கொடுமுடி, சிவகிரி, பெருந்துறை, பர்கூர், தாளவாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் விற்பனை களை கட்டியது.
ஈரோடு வ.உ.சி. பெரிய மார்க்கெட்டில் இன்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல் பெரியார் நகர் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு உசிலம்பட்டி, திண்டுக்கல், சத்தியமங்கலம், ஓமலூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகிறது. ஈரோடு பூ மார்க்கெட்டிற்கு 5 டன்கள் பூக்கள் விற்பனைக்கு வரும். தற்போது பொங்கலை முன்னிட்டு 10 டன் பூக்கள் விற்பனைக்கு வந்து உள்ளது.
தற்போது பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது. எனினும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.
கடந்த வாரம் ரூ.800-க்கு விற்ற முல்லை பூ இந்த வாரம் தேவை அதிகரிப்பால் ஒரு கிலோ ரூ.3 ஆயிரமாக விற்கப்படுகிறது. இதேபோல் ஜாதி பூ ஒரு கிலோ ரூ.1600, சம்மங்கி பூ ஒரு கிலோ ரூ.100, அரளிப்பூ ரூ.400, செவ்வரளி ரூ.400, செவ்வந்தி ரூ.120 விற்கப்பட்டது.
இன்று சத்தியமங்கலம்பூ மார்க்ெகட்டுக்கு குறைந்த அளவிலேயே மல்லிகைப்பூக்கள் கொண்டு வரப்பட்டது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் மல்லிகைப்பூக்கள்தேவை அதிகரித்து உள்ளது. பூக்கள் வரத்து குறைந்து. தேவை அதிகரித்து உள்ளதால் இன்று நடந்த பூ மார்க்கெட்டில் ஒரு கிேலா மல்லிகைப்பூ ரூ.6200-க்கு விற்பனை ஆனது.
- ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார்.
- இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்து உள்ள சின்ன மடத்து பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பூவேந்தன் (வயது 28). இவர் பெருந்துறை பகுதியில் இருசக்கர வாகன டீலர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் மோட்டார் சைக்கிளில் சரளை சென்று விட்டு பெருந்துறை வந்து கொண்டி ருந்தார். பெருந்துறை பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது அவருக்கு போன் வந்தது. இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் அவரிடம் வந்து உன்னிடம் பணம் இருந்தால் கொடு என்று கேட்டுள்ளார். இதற்கு பூவேந்தன் என்னிடம் பணம் இல்லை என்று கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் அவரை கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் அந்த வாலிபர் ஏற்கனவே என் மேல கொலை வழக்கு உள்ளது. பணம் கொடுக்க வில்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டி யதாகவும் கூறப்படுகிறது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பூவேந்தன் சத்தம் போட்டார். இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து விசாரித்தனர்.
இது குறித்து பூவேந்தன் பெருந்துறை போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெ க்டர் வெங்கடாஜலம் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை பிடித்து விசா ரணை நடத்தினார்.
இதில் அவர் விஜய மங்கலம் சேரன் நகரை சேர்ந்த மணிகண்டன் (26) என தெரிய வந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மணிகண்டன் சிறையில் அடைக்க ப்பட்டார்.
- சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- விசாரணையில் அவர் கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்தது தெரிந்தது.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி செங்குந்தபுரம் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பகவதியம்மாள் தலைமையில் போலீசார் அங்கு ரோந்து சென்றார்கள்.
அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுெகாண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் செங்குந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 42) என்பதும், கஞ்சா விற்க நின்றுகொண்டு இருந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ.700-யும் பறிமுதல் செய்தனர்.
- ரங்குப்பயன் காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
- அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பு.புளியம்பட்டி:
புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஓலப்பாளைம் கிராமத்தை சேர்ந்தவர் ரங்குப்பயன் என்கிற ரங்கசாமி (வயது 50). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில் ரங்குப்பயன் சம்பவத்தன்று இரவு காவிலிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் ரங்குப்பயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- சைக்கிளில் சென்று கொண்டிருந்த சின்னச்சாமி மீது நான்கு சக்கர வாகனம் ஒன்று மோதியது.
- விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
பவானி:
பவானி தொட்டிபாளையம் கிராமம் ஓதுவார் தோட்டத்தில் வசிப்பவர் சின்னசாமி (60). விவசாய கூலி தொழிலாளி. சம்பவத்தன்று சின்னசாமி தனது சைக்கிளில் தொட்டி பாளையம் பகுதியில் இருந்து ஊராட்சி கோட்டைக்கு சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவ்வழியாக வந்த நான்கு சக்கர வாகனம் ஒன்று சைக்கிளில் சென்று கொண்டிருந்த சின்னச்சாமி மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சின்னசாமி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று இறந்த சின்னச்சாமி உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ேமலும் இது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
- கடந்த ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 44 உள்ளது.
இதில் கோபி, ஈரோடு அரசு மருத்துவமனையில் மினி ஐ.சி.யு என்று அழைக்கப்படும் அதிநவீன வசதிகள் கொண்ட குழந்தைகளுக்கு என்று தனியாக 2 108 ஆம்புலன்ஸ்கள் உயர் ரக மருத்துவ குழுவினருடன் தயாராக உள்ளது.
இதேப்போல் மூன்று 108 வாகனங்கள் செயற்கை சுவாச வசதியுடன் ஈரோடு, பெருந்துறை, கோபி மருத்துவமனையில் தயாராக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நோயாளிகளை காப்பாற்றுவதற்காக இந்த வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 48,665 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 57,472 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவிகள் பெற்றுள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய 8,587 பேர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ உதவி பெற்றனர்.
ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு 10,839 பேர் சாலை விபத்தில் சிக்கி மருத்துவ உதவி பெற்றுள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு 10,430 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் பயன்படுத்தி உள்ளனர்.
2022-ம் ஆண்டு 16,800 பேர் பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸை பயன்படுத்தி உள்ளனர்.
கடந்த 2021-ம் ஆண்டு 108 ஆம்புலன்சில் 41 பிரசவம் நடந்துள்ளது. 2022-ம் ஆண்டு 57 பிரசவங்கள் 108 ஆம்புலன்சில் நடந்துள்ளது. மாவட்ட முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை 24 மணி நேரமும் நடைபெற்று வருகிறது.
கிராமம், மலை பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 14 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்து விடும். இதே நகர பகுதியில் 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தால் 8 நிமிடத்திற்குள் வந்துவிடுகிறது.
- பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளி சார்பாக சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- பேரணியில் மாணவ-மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சாலை பாதுகாப்பு வாரம் விழிப்புணர்வு பேரணி பர்கூரில் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில் மாணவ- மாணவிகள் சாலை பாதுகாப்பு விதிகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விழிப்புணர்வு பேரணியின் முடிவில் பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பார்த்தீபன், மாணவ- மாணவிகளுக்கு சாலை விதிகளை விளக்கினார்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குமரேசன் நன்றி கூறினார். விழிப்புணர்வு பேரணியில் ஆசிரிய ஆசிரியைகள், பர்கூர் சிறப்பு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை இன்று காலை நடந்தது.
- விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலையில் உள்ள முருகன் கோவிலில் மார்கழி மாத விழா குழுவினர் சார்பில் 12-ம் ஆண்டு தனுர் மாத (மார்கழி) மாத சிறப்பு பூஜைகள் கடந்த மார்கழி 1-ந் தேதி தொடங்கியது.
அன்று முதல் தினமும் காலையில் 5 மணிக்கு கோமாதா பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கி, சென்னிமலை முருகப்பெருமான் மூலவர், உற்சமூர்த்திக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
பின்னர் மார்கழி மாதத்தின் நிறைவு விழா சிறப்பு பூஜை இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜையாக கோமாதா பூஜை நடைபெற்றது. அப்போது பசுவுக்கு தீபாராதனை செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து விநாயகர் வழிபாடு, கலச பூஜை, யாக பூஜைகள் நடந்தேறி, மூலவர், உற்சவருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, மேட்டுப்பாளையம் வன பத்திரகாளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தக்குடங்களுடன் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு, மஹா தீபாரதனை பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மார்கழி மாதம் இன்று நிறைவு பூஜை மற்றும் போகிப்பண்டிகை என்பதால் சென்னிமலை முருகன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சிறப்பு பூஜையில் முன்னாள் அமைச்சர் தோப்பு. வெங்கடாச்சலம் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.






