என் மலர்tooltip icon

    ஈரோடு

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
    • கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்படுகிறது

    ஈரோடு, 

    ஈரோடு வ .உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கோலார், ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 லோடு லாரிகளில் 10 டன் தக்காளிகள் வரத்தாகி வந்தன. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனையானது.

    இந்நிலையில் கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இன்று வ. உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கோலாரில் இருந்து ஒரு டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40க்கு விற்பனையானது. தொடர் முகூர்த்தம் இருப்பதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

    இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை சரிய தொடங்கும் என தெரிவித்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்ப–னையை தடுக்க
    • கடந்த 2 நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை

    ஈரோடு, ஜன. 18-

    ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத மதுவிற்ப–னையை தடுக்க கடந்த 2 நாட்களாக போலீசார் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். முதல்நாளில் நடத்தப்பட்ட சோதனையில் 42 பேர் கைது செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 800-க்கும் மேற்பட்ட மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்ய ப்பட்டது.

    இந்நிலையில் நேற்று 2-வது நாளில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகள் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 10 பேர் கைது செய்யப்பட்டு ள்ளதோடு, 60 மதுபாட்டி ல்கள் பறிமுதல் செய்யப்ப ட்டதாக போலீசார் தெரிவித்துள்ள னர்.

    • இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.
    • ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக ரூ.6.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சாலை விரிவாக்க பணிக்கான தொடக்க நிகழ்ச்சி இன்று காலை குமலன்குட்டை பகுதியில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அமைச்சர்சு. முத்துசாமி தலைமை தாங்கி சாலை விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது நெடுஞ்சாலை துறை சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குமலன்குட்டை வரை சாலை விரிவாக்க பணி மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி ரூ.6.60 கோடி மதிப்பில் நடைபெறு–கிறது. இந்தப் பணி விரைந்து முடிக்கப்படும்.

    இங்கு வரும் தண்ணீரை காரணம் முதலில் அதிகாரிகள் சொல்வது முதலில் காலியிடம் இருந்ததால் தண்ணீர் அங்கு போய் தேங்கி நின்றது. தற்போது கட்டிடம் வந்து விட்டதால் ரோட்டிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த தண்ணீரை வெளியே எடுத்து செல்வதற்காக சாக்கடை தண்ணீராக இருந்தாலும் சரி, மழை நீராக இருந்தாலும் சரி அதற்கான கழிவு நீர் கால்வாய் வசதி செய்யப்படுகிறது.

    இவை முழுமையாக செய்யப்பட்டு அருகில் ஒரு ரோடு உள்ளது .அந்த ரோடு வழியாக தண்ணீர் திருப்பி விடப்படும். அந்த ரோடு மாநகராட்சிக்கு சொந்தமாக உள்ளதால் இந்த தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான வழிவகைகளை அவர்கள் செய்வார்கள்.இதற்கான திட்டமும் தற்போது தயார் செய்யப்பட்டு வருகிறது. குமலன் குட்டை கார்னரில் ஒரு ரவுண்டானா அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இடம் தேர்வு செய்யப்பட்டு குமலன் குட்டை பகுதியில் ஒரு ரவுண்டானா உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், கவுன்சிலர் மோகன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பவானி காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு அவிநாசி கூட்டு குடிநீர் திட்ட முடிவுற்ற பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    • எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதியில் கடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல் அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. சார்பில் யுவராஜ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட த.மா.கா. விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அ.தி.மு.க.வினர் இந்த தொகுதியில் பூத் கமிட்டி அமைத்து தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். அ.தி.மு.க. தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருந்து வரும் நிலையில் அ.தி.மு.க.வினர் இடைத்தேர்தல் பணிகளை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் அல்லது முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் தெரிகிறது.

    எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கிய 6 மாத காலத்தில் 1973-ல் திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் மாயத்தேவரை நிறுத்தி வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆரின் வழியை பின்பற்றி 1989-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அணி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமியும் ஒருவர் ஆவார். எனவே எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் துணிச்சலாக ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற செய்வார் என்று கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமியின் கட்சி தலைமைக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    எனவே எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமியும் வேட்பாளரை நிறுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
    • இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று தீவிரமாக உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க.வே போட்டியிடுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள். இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று தீவிரமாக உள்ளனர்.

    இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.சார்பிலோ அல்லது காங்கிரஸ் சார்பிலோ வேட்பாளர்களாக யார் நின்றாலும் அவர்கள் வெற்றிக்காக தி.மு.க.வினர் பாடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது.
    • அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    ஈரோடு:

    பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதையொட்டி கடந்த 3 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் அதிகரித்தது.

    பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் கொட்டியபடி செல்கிறது. அதை கண்டு ரசிப்பதற்கும் தடுப்பணையில் குளித்து மகிழ்வதற்கும் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வார்கள். மேலும் விஷேசம் மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கொடிவேரி தடுப்பணைக்கு கடந்த 3 நாட்களாக அதிகளவு மக்கள் வந்தனர். இதே போல் நேற்று மாட்டு பொங்கல் தினத்தையொட்டி வழக்கத்தைவிட அதிகமான சற்றுலா பயணிகள் வந்து தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    நேற்று மட்டும் தடுப்பணையில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று காலை முதலே ஈரோடு மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டத்தை சேர்ந்த மக்களும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தொடர்ந்து நேரம் செல்ல.. செல்ல மக்களின் கூட்டம் அலை மோதியது.

    தொடர்ந்து அவர்கள் தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்த உணவு வகைகளையும் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர். மேலும் பலர் வெளி பகுதியில் விற்பனை செய்த மீன் வகைகளையும் ருசித்தனர்.

    இதையொட்டி அந்த பகுதியில் ஏராளமான கடை கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதே போல் பவானிசாகர் அணை பூங்காவுக்கு கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். இந்த நிலையில் காணும் பொங்கலையொட்டி இன்று வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர். தொடர்ந்து அவர்கள் பூங்காவில் ஊஞ்சல் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் சறுக்கு விளையாடி மகிழ்ந்தனர். மேலும் இயற்கை அழகை ரசித்தனர்.

    தொடர்ந்து அணையில் கொட்டும் தண்ணீரை கண்டு களித்தனர். இதனால் இன்று மட்டும் பூங்காவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். இதனால் அணைக்கு செல்லும் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதனால் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்கலம் பஸ் நிலையங்களில் பஸ்சுக்காக ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் சென்னிமலை அருகே உள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்துக்கு கடந்த 3 நாட்களாக மக்கள் அதிகளவில் வந்தனர். தொடர்ந்து இன்று காணும் பொங்களையொட்டி ஈரோடு, சென்னிமலை, காங்கேயம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலர் வந்திருந்தனர். அவர்கள் அங்கு இயற்கை அழகை ரசித்தனர்.

    மேலும் பவானி கூடு துறையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் பலர் வந்து புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மனை வழிபட்டு சென்றனர்.

    இதே போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காளிங்கராயன் வாய்க்காலுக்கு பொதுமக்கள் பலர் வந்து வந்து குளித்து மகிழ்ந்தனர். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    • கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
    • ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு சுற்றுலா தளங்களில் இன்று காணும் பொங்கலையொட்டி மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை ஒட்டி ஒவ்வொரு வருடமும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    காணும் பொங்கலை ஒட்டி ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பெண்கள் ஒரு நாள் முழுவதும் ஒன்று கூடி ஆடி, பாடி பொழுதை கழிப்பார்கள். பெண்கள் மட்டுமே வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி அனுமதிக்கப்படுவார்கள். ஆண்களுக்கு அனுமதி இல்லை.

    இந்நிலையில் கடந்த இரண்டு வருடமாக கொரோனா தாக்கம் காரணமாக வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இந்த வருடம் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக நேற்று மாநகராட்சி பணியாளர்கள் வ.உ.சி. பூங்காவை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இன்று மதியம் 12 மணி அளவில் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலை கொண்டாட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெண்கள் வரத் தொடங்கினர்.

    ஏராளமான கல்லூரி மாணவிகள் தங்களது தோழிகளுடனும், பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுடன் வந்திருந்தனர். மயிலாட்டம், ஒயிலாட்டம் என பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் பாண்டி பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். மியூசிக்கல் சேர் விளையாட்டையும் விளையாடி மகிழ்ந்தனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் வ.உ.சி. பூங்காவில் கூடியதால் வ.உ.சி. பூங்கா விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வ.உ.சி. பூங்கா 2 கேட்கள் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.

    • கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஆனந்த குமாரின் தாயார் உடல் நலக்குறை வால் இறந்துவிட்டார்.
    • மறு நாள் அதிகாலை 4 மணியளவில், மதுபோதை–யில் ஆனந்த குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள அய்யகவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த குமார் (34). இவரது மனைவி ஷகிலா (27). இருவரும் கட்டிடத் தொழிலாளிகள்.

    கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஆனந்த குமாரின் தாயார் உடல் நலக்குறை வால் இறந்துவிட்டார்.

    இதிலிருந்து மனவேதனையில் இருந்து வந்த ஆனந்தகுமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தனது தாயாரை நினைத்து வருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் தனது தாயாருக்கு திதி கொடுத்துவிட்டு வேலைக்கு சென்ற ஆனந்தகுமார்

    இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. மறு நாள் அதிகாலை 4 மணியளவில், மதுபோதை–யில் ஆனந்த குமார் வீட்டுக்கு வந்துள்ளார்.

    மனைவி ஷகிலா கணவரை தொட்டுப் பார்த்தபோது ஜில்லென இருந்தது. இது குறித்த அவரிடம் கேட்ட போது தான் விஷம் குடித்து விட்டதாக ஆனந்தகுமார் கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    பின்னர் உயர் சிகிச்சைக் காக கோவையில் உள்ள தனியார் மருத்துவ–மனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆனந்த குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • இன்று அதிகாலை முதல் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரை யாக சென்றனர்.
    • சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதம் இன்றி அனைவரும் நடந்து சென்றனர்.

    ஈரோடு, 

    தைப்பூச விழா அடுத்த மாதம் பிப்ரவரி 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு ஆயிரகணக்கான மக்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளிலிருந்து கடந்த சில நாட்களாக பழனிக்கு நூற்றுக்கண க்கான மக்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர்.

    இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி, தாரமங்கலம், ஓமலூர், மகுடஞ்சாவடி, சங்ககிரி மற்றும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் வெப்படை போன்ற பகுதிகளில் இருந்து இன்று அதிகாலை முதல் பழனிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர்.

    சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதம் இன்றி அனைவரும் நடந்து சென்றனர்.

    இன்று வழக்கத்தை விட பனி கடுமையாக இருந்தது. எனினும் பனியை பொறுப்படுத்தாமல் மக்கள் பாதயாத்திரையாக சென்ற வண்ணம் இருந்தனர்.

    இதனால் இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி முதல் பன்னீர்செல்வம் பார்க் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    பாதயாத்திரை சென்ற மக்கள் காளிங்கராயன் வாய்க்காலில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் பாதயாத்திரை செல்லும் மக்களுக்கு வழி நெடுகிலும் ஆங்காங்கே அன்னதானமும், குடிநீர் பாட்டிலும் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன. 

    • உழவர் சந்தை களில் தினமும் விவசாயிகள் பலர் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள்
    • ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவை யான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

    ஈரோடு, 

    ஈரோடு, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம் உள்பட மாவட்டத்தில் 6 இடங்களில் உழவர் சந்தை கள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    காய்கறிகள்

    மேலும் உழவர் சந்தை களில் தினமும் விவசாயிகள் பலர் காய்கறிகளை கொண்டு வந்து குறைந்த விலையில் விற்பனை செய்கிறார்கள். மேலும் இங்கு பயிறு வகைகள், பருப்பு வகைகள், சிறுதானி யங்கள், காளான் மற்றும் பழ வகைகளும் குறைந்த விலையில் கிடக்கிறது.

    இதே போல் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவை யான காய்கறிகளை வாங்கி செல்கிறார்கள்.

    மார்க்கெட்

    இதே போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு விவ சாயிகள் மற்றும் வியா பாரிகள் காய்கறி மற்றும் பழ வகைகள் கொண்டு வந்து விற்பனை செய்ய ப்படுகிறது. இதனால் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வந்து காய்கறி மற்றும் பழ வகைகளை மொத்தமாகவும் சில்லரையாகவும் வாங்கி செல்கிறார்கள்.

    இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வரு கிறது. மேலும் பழனி உள்பட முருகன் கோவில்க–ளுக்கு அதிகளவில் பக்தர்கள் மாலை அணிந்து சென்று வருகிறார்கள். இதனால் மார்க்கெட்டு மற்றும் உழவர் சந்தைகளில் காற்கறி மற்றும் பழங்கள் விற்பனை அதி கரித்தது. இதையொட்டி பெரும்பா–லான பொது மக்கள் அதிகளவில் மார்க் கெட்டுக்கு வந்து காய்கறி களை வாங்கி சென்றனர்.

    பல மடங்கு அதிகரிப்பு

    இதனால் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் மற்றும் காய்கறி மார்க்கெட்டு களில் வழக்கத்தை விட அதிகளவில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆயிர க்கணக்கானோர் வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள்.

    இதையொட்டி கடந்த 2 நாட்களில் மட்டும் காய்கறி கள் மற்றும் பழ வகைகள் விற்பனை பல மடங்கு அதிககரித்தது.

    பொங்கல் பண்டிகையை யொட்டி ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தையில் கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 50 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.

    உழவர் சந்தை மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறி விலை நிலவரம் கிலோவில் வருமாறு:-

    தக்காளி- ரூ.28, கத்திரி- ரூ.60, வெண்டைக்காய்- ரூ.60, சரக்காய் ஒன்று- ரூ.12, முருங்கய் காய்- ரூ.130, கேரட்-ரூ.42, பீட்ரூட்-ரூ.40.

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னழுத்தம் செய்யப்படுகிறது.

    அந்தியூர்,

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர்,தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், மைக்கேல் பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம்,

    தோப்பூர், கொண்டையம்பாளையம் , வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கரா–பாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளி திருப்பூர் மற்றும் பர்கூர்

    ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்னழுத்தம் செய்யப்படுகிறது.

    அந்தியூர், 

    அந்தியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வரும் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தியூர்,தவிட்டுப்பாளையம், புதுப்பாளையம், மைக்கேல் பாளையம், நகலூர், முனியப்பன் பாளையம், தோப்பூர், கொண்டையம்பாளையம் , வெள்ளையம் பாளையம், பிரம்மதேசம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, 

    பச்சாபாளையம், பெருமாபாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளி திருப்பூர் மற்றும் பர்கூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் இருக்காது என பவானி மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.

    ×