என் மலர்tooltip icon

    ஈரோடு

    • இன்று காலை ஒரு முதியவர் மது போதை யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.
    • தொடர்ந்து பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் அவர் எழுந்து செல்ல மறுத்துார்

    அந்தியூர்

    அந்தியூர் பஸ் நிலை யத்தில் இருந்து ஆப்பகூடல், கோபி செட்டிபாளையம் மற்றும் பல்வேறு பகுதி களுக்கு பஸ்கள் தினமும் சென்று வருகின்றன.

    இதே போல் தவிட்டுபாளையம் அத்தாணி ரோட்டிலும் பஸ்கள் உள்பட பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த பகுதி பரபரப்பாக காணப்படும்.

    மது போதை

    இந்த நிலையில் தவிட்டு ப்பாளையம் மார்க்கெட் பஸ் நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் ரோட்டில் இன்று காலை ஒரு முதியவர் மது போதை யில் நடந்து வந்து கொண்டு இருந்தார்.

    அவருக்கு போதை அதிகமானதால் தொடர்ந்து அவர் நடக்க முடியாமல் ரோட்டின் நடுவே படுத்து கொண்டார்.

    இதனால் அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் ரோட்டில் ஒருவர் படுத்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து தட்டுதடுமாறி சென்றனர்.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு இடை யூறாக இருந்தது. கவனி க்காமல் வந்த ஒரு சில வாகன ஓட்டிகள் அருகே வந்ததும் திடீெரன பிரேக் போட்டு நிறுத்தினர்.

    பரபரப்பு

    மேலும் சாலையில் படுத்தவருக்கு ஏதேனும் உடல்நலக் குறைவினால் கீழே விழுந்து விட்டாரா என்று நினைத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அவர் அருகே சென்று பார்த்தார்கள். அப்போது அவர் அதிகமான மது போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவரால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.

    தொடர்ந்து பொது மக்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் அவர் எழுந்து செல்ல மறுத்து தகராறு செய்து ரோட்டிலேயே படுத்து கொண்டார். இதனையடுத்து பொது மக்கள் 108 ஆம்புலன்சு வர சொல்லுங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம் என்று கூறினர்.

    இதை கேட்டு மது போதையில் இருந்தவர் சிறிது நேரத்துக்கு பிறகு அவரே தட்டு தடுமாறி எழுந்து தள்ளாடிய நிலை யில் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். இதனால் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கு முதல் முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட இயக்கத்தின் தந்தை பெரியார், கணிதமேதை ராமானுஜம் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய பகுதியாக உள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி ஈரோடு நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடக் கூடிய தொகுதி என்பதால் விவசாயம் இல்லை. அதேநேரம் ஜவுளித்தொழிலின் மையமாகத் திகழ்கிறது. துணிகளுக்கு சாயமிடுதல், பிளீச்சிங் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக 500-க்கும் மேற்பட்ட சாய ஆலைகள் மற்றும் சலவை ஆலைகள் செயல்படுகின்றன.

    இங்கு கனி மார்க்கெட்டில் (ஜவுளிசந்தை) திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடக்கும் சந்தையில் மட்டும் சுமார் ரூ.2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஜவுளி வாங்க வியாபாரிகள் வந்து குவிவார்கள்.

    இங்கு நடைபெறும் ஜவுளி சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். சாதாரண நாட்களில் ரூ.2 முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகமும், பண்டிகை காலங்களில் ரூ.5 கோடி வரை வர்த்தகமும் நடைபெறும்.

    2008-ம் ஆண்டு முந்தைய தேர்தல் வரை ஒருங்கிணைந்த ஈரோடு தொகுதியாக இருந்தது. 2008-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பின்போது ஈரோடு தொகுதி 2 ஆக பிரிக்கப்பட்டு ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு தொகுதிகளாக உருவானது.

    தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் ஈரோடு தொகுதியாக இருந்தபோது தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 5 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொது உடமை கட்சி 1 முறையும் வெற்றி பெற்று உள்ளது.

    தொகுதி சீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த 2 தேர்தல்களிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெற்று உள்ளது. 2011-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமாரும், 2016-ல் அ.தி.மு.க.வின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசும் வெற்றி பெற்றனர்.

    2011 தேர்தலில் தி.மு.க. வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சு.முத்துசாமி, தே.மு.தி.க. வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரிடம் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் அப்போதைய எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து களம் கண்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க.வின் கே.எஸ்.தென்னரசு 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

    கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம்தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

    இந்த தேர்தலில் நோட்டாவுக்கு 1546 வாக்குகளும் அ.ம.மு.க. வேட்பாளர் முத்துகுமரனுக்கு 1204 வாக்குகளும் கிடைத்தது.

    திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் தற்போது இந்த தொகுதிக்கு முதல் முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இது தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு நடைபெறும் 4-வது தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் கடந்த முறை 8 ஆயிரத்து 904 ஓட்டு வித்தியாசத்தில் திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுவதால் இந்த தொகுதியை பிடிக்க தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    தி.மு.க. ஆட்சி அமைந்து நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் யாரை நிறுத்தினாலும் அவர்கள் வெற்றிக்காக பாடுபடுவோம் என்று அமைச்சர் முத்துசாமி அறிவித்தார். அதே போல் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த அ.தி.மு.க. கூட்டணியும் எப்படியும் வெற்றி பெற்று ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. கோட்டை என்று நிரூபிக்க சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியை கைப்பற்றுவது யார்? என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

    • தி.மு.க. கூட்டணி கட்சி வலுவாக உள்ளது.
    • தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும்.

    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருவதாக கூறி வருகிறார்கள். எந்த அளவுக்கு பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வருகிறது என்பதை நிரூபிக்க அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணி கட்சி வலுவாக உள்ளது. தி.மு.க. கூட்டணி கட்சிக்கு மரியாதை கொடுக்கும் கட்சி. அதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு அளிப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தி.மு.க. கூட்டணியில் யார் வேட்பாளராக நிறுத்தப்பட்டாலும் அவர்களது வெற்றிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பாடுபடும். அ.தி.மு.க.வில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. ஒரு முடிவு இல்லாமல் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டு உள்ளது.

    சூரம்பட்டி:

    கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றதால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். வெற்றி பெற்ற திருமகன் ஈ.வெ.ரா. எம்.எல்.ஏ. கடந்த 1 1/2 ஆண்டுகளாக பொதுமக்கள் பாராட்டும் வகையில் அவர்களது கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் பாராட்டும் வகையில் பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் திடீரென்று கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். அவர் இறந்து 15 நாட்களுக்குள் இடைதேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் உள்ள அரசியல் கட்சியினர் எதிர்பார்க்கவில்லை.

    வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அரசியலில் ஆர்வம் உள்ள பொதுமக்களிடையேயும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் விரைவில் வேட்பாளர்களை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

    காங்கிரசுக்கு விட்டுக்கொடுத்தாலும் வேட்பாளர் யார்? என்பதை தி.மு.க. உற்று கவனிக்கிறது. மறைந்த திருமகனின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுவதை தி.மு.க. விரும்புகிறது.

    அனுதாபம் மற்றும் அந்த தொகுதியின் செல்வாக்கு காரணமாக இளங்கோவன் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தி.மு.க.-காங்கிரஸ் கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள்.

    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏற்கனவே கடந்த 1984-ம் ஆண்டு சத்தியமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதேபோல கோபி எம்.பி. தொகுதியில் 2004-ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணைய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

    இதன் பிறகு ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறுவார் என்ற கருத்து காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டு உள்ளது.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் ஈரோடு கிழக்கு தொகுதி தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுமா? அப்படி காங்கிரசுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டால் யார் வேட்பாளராக போட்டியிடுவார்கள் என்று கேட்டபோது, இது பற்றி கட்சி தலைமை தான் முடிவு எடுக்கும் என்று மழுப்பலாக கூறினார்.

    காங்கிரசில் வேட்பாளரை முடிவு செய்வதை இளங்கோவனிடமே விட்டுள்ளனர். அவரை போட்டியிடுமாறு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தி வருகிறார்கள்.

    இளங்கோவனோ அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே போட்டியிட விரும்பாத நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மக்கள் நேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திருமகன் ஈ.வெ.ரா. திடீரென மரணம் அடைந்தார்.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு சட்டமன்ற தொகுதி கடந்த 2008-ம் ஆண்டு மறுசீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆனார்.

    அதனை தொடர்ந்து கடந்த 2016-ம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசும், 2021-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா.வும் வென்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர். இந்நிலையில் கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் திருமகன் ஈ.வெ.ரா. திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 440 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளன. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக பெண் வாக்காளர்கள் உள்ளனர்.

    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
    • வாக்களிக்க வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. மேலும் தேர்தலுக்கான ஏற்பாடுகளும் உடனடியாக தொடங்கப்பட்டது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 140 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 23 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர்.

    இவர்கள் வாக்களிக்க வசதியாக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் தேர்தல் பணியாற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
    • தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந்தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் ஜனவரி 31-ந் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7-ந் தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனு மீதான பரிசீலனை 8-ந் தேதி நடைபெறும். வேட்பு மனு வாபஸ் பெற 10-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதனைத்தொடர்ந்து 27-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்று மாலைக்குள் முடிவு அறிவிக்கப்படும்.

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரியாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும், தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரும் நியமிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் கட்சித் தலைவர்களின் புகைப்படம், சிலைகள், பெயர், விளம்பர பலகைகள் போன்றவை மறைக்கும் பணி தொடங்கிவிட்டன.

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த மாநகராட்சி அலுவலகம் எம்.ஜி.ஆர். மாளிகை என்ற பெயர் போர்டு துணியால் மூடப்பட்டது. மாநகராட்சி வளாகத்தில் இருந்த பல்வேறு கல்வெட்டுகளும் அகற்றப்பட்டும், பேப்பர் கொண்டும் மூடப்பட்டன. அலுவலக வளாகம், கூட்டரங்கம் போன்றவற்றில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈ.வெ.ரா. போன்றோர் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

    இது தவிர அரசின் திட்ட விழிப்புணர்வு பேனர்கள் டெண்டர்கள் உள்ளிட்ட விளம்பர நோட்டீஸ்கள் அகற்றப்பட்டன. கட்டட சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்கள் தலைவர்களின் வாழ்த்து பேனர்கள் அகற்றப்படும் அழித்தும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் தலைவர்கள் படங்கள் மாற்றப்பட்டன. கல்வெட்டுகள் துணியால் மூடி மறைக்கப்பட்டன. தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், அலுவலர்கள் சேர்ந்து கிழக்கு தொகுதிக்குட்பட்ட மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈ.வி.என்.சாலை, காந்திஜி சாலை, காளை மாட்டு சிலை, காவிரி சாலை, ஆர்.கே.வி. சாலை, நேதாஜி சாலை, கருங்கல்பாளையம் காவிரி சாலை போன்ற இடங்களில் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி மரங்கள், பேனர்களை அகற்ற தொடங்கி உள்ளனர்.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் சிலைகள் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன. இதேபோல் ஈரோடு ஜி.எச்.ரவுண்டானா பகுதியில் உள்ள காமராஜர், ஈ.வி.கே.சம்பத் சிலைகளும் துணியால் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சி வளாகம் உட்பட அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் கட்சி சார்ந்த தலைவர்கள், பெயர், படங்கள் அகற்றவும் மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலக கட்டிடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு அந்த எந்திரங்கள் சரி பார்த்து பழுது இருந்தால் நீக்கம் செய்து தயார் நிலைப்படுத்தப்படும். இந்த தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், அச்சமின்றி நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
    • 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததையடுத்து காலியாக இருக்கும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளன.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வதற்காக தேர்தல் பணிக்குழுவை பாஜக அமைத்துள்ளது. இடைத்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கவனிக்கவும் 14 பேர் கொண்ட பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். 

    • தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான ஈவெரா திருமகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில் இன்று தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

    தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நகராட்சி ஆணையர் சிவக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

    • பழனிக் கவுண்டன்பாளையம் பகுதியில் காளிங்கராயன் வாய்க்கால் கரையில் ஒரு கும்பல் சேவல்களை சண்டையிட வைத்து சூதாடி கொண்டிருந்தனர்
    • 7 சேவல்களை வைத்து பணம் கட்டி சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    ஈரோடு, 

    மலையம்பாளையம் போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மன்சூர் அலி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது மலையம் பாளையம் அடுத்த பழனிக் கவுண்டன்பாளையம் பகுதியில் காளிங்கராயன் வாய்க்கால் கரையில் ஒரு கும்பல் சேவல்களை சண்டையிட வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணை–யில் அவர்கள் நாமக்கல் மாவட்ட த்தைச் சேர்ந்த சஞ்சய் (23), மணிக ண்டன்(25), தேவராஜ் (19), சபரி (19), திலீப் (27), தாமோ தரன்(25), சசிகுமார்(40), கிஷோர் (26), செந்தில்குமார் (40),

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியை சேர்ந்த கிருஷ்ணகுமார்(35), நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த விஜய்(30), சுப்ரமணி (29), பிரகாஷ் (24), சபி (32), மணிவேல்(28), மனோஜ் குமார்(33), ரமேஷ் (34), சுவதிராஜா (42) ஆகியோர் என்பதும் இவர்கள்

    7 சேவல்களை வைத்து பணம் கட்டி சண்டையிட வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து மலையம்பாளையம் போலீசார் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சேவல்கள், ரூ.5000 ரொக்க பணம், மற்றும் 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். 

    • ஆப்பக்கூடல் சாலை, அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றது.
    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    அந்தியூர்

    அந்தியூர் பகுதியில் பஸ் நிலையம், தேர் வீதி, அத்தாணி சாலை, ஆப்பக்கூடல் சாலை, அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் குதிரைகள் சுற்றி திரிகின்றது.

    அச்சம்

    இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். மேலும் வாகன ஓட்டி களும் சாலையில் நடந்து செல்பவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்க ளும் ஒருவித அச்சத்தோடு சென்று வருகிறார்கள.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை யொட்டி அந்தியூர் வார ச்சந்தை, தேர் நிலையம் பகுதிக்கு பொது மக்கள் அதிக அளவில் வந்திரு ந்தார்கள். மேலும் அந்த பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டும் இருந்தன. இதனால் அந்த பகுதியில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    பெண் குழந்தை காயம்

    இந்த நிலையில் அந்தியூர் பஸ் நிலையம் பகுதிக்கு திடீரென குதிரைகள் வந்தது. அந்த குதிரைகள் பொதுமக்களின் கூட்டத்தை பார்த்து மிரண்டு நின்று கொண்டு இருந்தவர்கள் மீது மோதி கீழே தள்ளி சென்றது. இதனால் அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் அலறி அடித்து கொண்டு சென்றனர். இதையடுத்து ஒரு பெண் மற்றும் குழந்தை கீழே விழுந்தனர். இதில் அந்த பெண்ணுக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

    தொடர்ந்து அந்த குதிரை அரசு ஆஸ்பத்திரி கார்னர் பகுதிக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தில் சென்றவரை கீழே தள்ளியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    அபராதம்

    இதையொட்டி அந்தியூர் பகுதி மக்கள் ரோட்டில் சுற்றி திரியும் குதிரைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி செயல் அலு வலர் செல்வகுமாரிடம் கேட்ட போது, குதிரையின் உரிமையாளர்கள் குதிரை களை பிடித்து சாலையில் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதை மீறி சாலையில் சுற்றும் குதிரைகளை பிடித்து வேறு இடங்களுக்கு கொண்டு விடப்படும். மேலும் குதிரையின் உரிமையாள ர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • ஆங்காங்கே சிறு சிறு பணிகள் மட்டுமே உள்ளது.6 பம்பிங் ஸ்டேஷனும் தயார் நிலையில் உள்ளது

    ஈரோடு அடுத்த காளிங்கராயன் பாளையத்தில் அத்திக்கடவு -அவினாசி திட்ட நீரேற்று நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அத்திக்கடவு-அவினாசி திட்டம் மிக விரைவுபடுத்தி பணிகள் நடைபெற்று வருகிறது.ஜனவரி கடைசியில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அதன்பிறகு 10 நாட்கள் சோதனை ஓட்டம் நடைபெறும்.பிப்ரவரி 15 ல் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போது அனைத்து பணிகளும் நிறைவு பெற்றது.

    ஆங்காங்கே சிறு சிறு பணிகள் மட்டுமே உள்ளது.6 பம்பிங் ஸ்டேஷனும் தயார் நிலையில் உள்ளது.1045 குளத்தில் 750 குளங்களுக்கு தண்ணீர் செல்ல அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு–ள்ளது.200 குளத்திற்கான பணிகள் இந்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படும்.

    சோதனையோட்டத்திற்குள் மீதமுள்ள அனைத்து பணிகள் நிறைவு பெறும். தற்போது 99 சதவீத பணிகள் நிறைவடைந்து ள்ளது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை திறந்து வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×