என் மலர்
ஈரோடு
- அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள த.மா.கா.வுக்கு கடந்த தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதேப்போன்று இடைத்தேர்தலிலும் த.மா.கா.வுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது.
இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அ.தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மதியம் வில்லரசம்பட்டி நால் ரோட்டில் உள்ள லட்சுமி துரைசாமி மஹாலில் நடைபெற உள்ளது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., தங்கமணி எம்.எல்.ஏ., கே.வி.ராமலிங்கம் ஆகியோர் தலைமை தங்குகிறார்கள். முன்னாள் அமைச்சர் கருப்பணன் எம்.எல்.ஏ., எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான யூகங்கள் வகுக்கப்படுகின்றன.
- எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை நடக்கிறது.
ஈரோடு:
எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதியில் மின் விநியோகம் இருக்காது.
எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், மணியம்பாளையம், வெள்ள பெத்தா ம்பாளையம், வே.புதுார், ஆனந்தம்பாளையம், மானூர், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, 24 வேலம்பாளையம்.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் உள்ள கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர்,
ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆண்டக்கோத்தம் பாளையம்,
ஆணைக்கல் பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம்,
திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.
வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் உள்ள வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம் பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிகாட்டுவலசு, சோலார், சோலார் புதூர், நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46 புதூர், 19 ரோடு பகுதி.
கங்காபுரம் துணை மின் நிலையமத்தில் உள்ள பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிர்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு,
கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையன்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் புதூர் ஆகிய பகுதியில் நாளை மின் நிறுத்தம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ரங்கசமுத்திரம் அண்ணா தெருவை சேர்ந்தவர் ஆண்டவன் (60). இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஆண்டவன் டைல்ஸ் ஒட்டும் கூலி வேலை பார்த்து வந்தார். ஆண்டவனுக்கு குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை வீட்டுக்கு சரி வர கொடுக்காமல் செலவழித்து வந்துள்ளார். இதனை உஷா கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று ஆண்டவன் வேலை விஷயமாக பெங்களூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு உஷா கணவருக்கு பலமுறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த ஆத்துப்பாலம் மீன் கடை அருகே உள்ள புங்கமரத்தில் ஆண்டவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆண்டவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சத்தியமங்கலம் அடுத்த வரதம்பாளையம், தோப்பூர் காலனி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (32). இவருக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு ராஜலட்சுமி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
வெங்கடேசனுக்கு சிறுவயது முதலே வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. இதற்காக சத்தியமங்கலத்தில் உள்ள மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத–போது வெங்கடேசன் திடீரென தூக்குபோட்டு கொண்டார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.72 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடி 492 கன அடியாக தண்ணீர் குறைந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நேற்று 1,864 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் மழை பொழிவு இல்லாததால் இன்று மீண்டும் நீர்வரத்து குறைந்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.72 அடியாக உள்ளது. அணைக்கு வினாடி 492 கன அடியாக தண்ணீர் குறைந்து வருகிறது.
தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடி, பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
- கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை, பதற்றமான வாக்கு சாவடிகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பணிகளை மேற்கொள்ளவதற்காக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தேர்தல் பிரிவுக்கென தனி அலுவலகம் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி தலைமையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசாருடன் செயல்பட தொடங்கி உள்ளது. தற்போது கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் எண்ணிக்கை, பதற்றமான வாக்கு சாவடிகள் போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் ஓ.பி.எஸ். தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் ஓ.பி.எஸ். தனது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஓ.பி.எஸ். அணியின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது. இதன்படி ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் சென்னை சென்றுள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. போட்டியிடுவதால் தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஈரோடு மாநகர மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு 64,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
- கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈெவரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
ஈரோடு:
தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரகுமார் 69,166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 50.83 சதவீதம் ஆகும்.
இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துசாமி 58,522 வாக்குகள் பெற்றார். இது 43.01 சதவீதம் ஆகும்.
2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு 64,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 43.83 சதவீதம் ஆகும். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் 57,085 வாக்குகள் பெற்றார். இது 38.87 சதவீதம் ஆகும்.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈெவரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 44.27 சதவீதம் ஆகும்.
அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றார். இது 38.41 சதவீதம் ஆகும்.
இதுவரை நடந்த 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் இந்த தொகுதியில் குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் 3 பறக்கும் படை மற்றும் 3 கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்காக பெல் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பொறியாளர்கள் கொண்ட குழு வந்துள்ளது.
இன்று 2-வது நாளாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் மூன்று நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் முழு அளவில் விவிபேட் எந்திரம் (வாக்களித்ததை உறுதி செய்யும் எந்திரம்) பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் 3 பறக்கும் படை மற்றும் 3 கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. இதேபோல் வருமான வரி அதிகாரிகள் கொண்ட குழுவும் அமைக்கப்பட உள்ளது.
இந்த குழு இன்று மாலை முதல் தங்களது பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இதேப்போல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிக அளவில் உள்ளன. சிறிய ஜவுளிக்கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் வரை 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு சர்வ சாதாரணமாக கோடிக்கணக்கில் பண வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தொழிலதிபர்கள், வியாபாரிகள் என்ன செய்வதென்று திகைத்து வருகின்றனர்.
- கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், தி.மு.க. இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.
- டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை ரத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கே மீண்டும் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இல்லையென்றால் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈ.வெ.ரா.வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இளங்கோவன் போட்டியிட விரும்பாதபட்சத்தில் தனது ஆதரவாளர் யாருக்காவது சீட் கேட்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து இளங்கோவனை போட்டியிட அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட போவதாகவும் தகவல் பரவி வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே கமல்ஹாசன் காங்கிரஸ், தி.மு.க. இடையே நெருக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இணைவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 24-ந்தேதி டெல்லியில் நடைபெற்ற ஒற்றுமை ரத யாத்திரையில் ராகுல்காந்தியுடன் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அதேபோல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றபோது அவரை வாழ்த்தி கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஈரோடு
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
மேலும் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.
இந்த நிலையில் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.76 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று 627 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 1864 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வருகிறது.
தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 1,250 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.
- நேற்று முன்தினம் மாலை வெளியூரில் இருக்கும் உறவினரின்
- மகள் சீருக்கு போக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றுள்ளார்.
பெருந்துறை
பெருந்துறை, ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகன் அன்பழகன் (25). இவர் இதே பகுதியில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் குடியிருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வெளியூரில் இருக்கும் உறவினரின் மகள் சீருக்கு போக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றுள்ளார்.
விழா முடிந்து நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்தது. பின்னால் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தனது படுக்கை அறை கதவும் திறந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் ஒன்று, 2 பவுன் தங்கச் செயின் ஒன்று, தங்க பிரேஸ்லெட் ஒன்று, கம்மல் மற்றும் இதர தங்க பொருட்கள் மொத்தம் 8 பவுன் காணாமல் போய் இருந்தது.
உடனடியாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- பள்ளபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் அருகில் வரும் பொழுது ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் கேட்டு உள்ளார்.
- தனது பின்னால் மாட்டி இருந்த பேக்கை பார்த்த போது பேக்கில் ஜிப் திறந்து இருந்தது.
பெருந்துறை
அந்தியூர் மாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் உத்தர சாமி. இவரது மகன் சுகாஷ் (18). இவர் சொந்த வேலையாக நேற்று காலை காஞ்சிகோவில் வந்துவிட்டு, பள்ளபாளையத்தில் இருந்து எல்லிஸ் பேட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பள்ளபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் அருகில் வரும் பொழுது ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் கேட்டு உள்ளார். அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு எல்லிஸ் பேட்டை பஸ் நிறுத்தம் அருகே இறக்கிவிட்டு தனது பின்னால் மாட்டி இருந்த பேக்கை பார்த்த போது பேக்கில் ஜிப் திறந்து இருந்தது.
பேக்கில் வைத்திருந்த பர்சை காணவில்லை. உடனடியாக அவர் அந்தப் பகுதியில் தேடிப் பார்க்க தான் லிப்ட் கேட்டு ஏற்றி வந்த நபர் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தார்.
அவரை பிடித்து விசாரித்த போது பர்சை திருடியதை ஒப்புக்கொண்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை காஞ்சி கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரை விசாரிக்கையில் அவர் சித்தோடு, சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் தர்ஷன் வயது 20 என தெரிய வந்தது.
அவரிடம் இருந்து பர்ஸ் மற்றும் 1,300 ரூபாயை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக காஞ்சிக்கோயில் சப்இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.






