என் மலர்
நீங்கள் தேடியது "open a locked house"
- நேற்று முன்தினம் மாலை வெளியூரில் இருக்கும் உறவினரின்
- மகள் சீருக்கு போக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றுள்ளார்.
பெருந்துறை
பெருந்துறை, ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவரது மகன் அன்பழகன் (25). இவர் இதே பகுதியில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் குடியிருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வெளியூரில் இருக்கும் உறவினரின் மகள் சீருக்கு போக வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தாருடன் புறப்பட்டு சென்றுள்ளார்.
விழா முடிந்து நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து இருந்தது. பின்னால் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தனது படுக்கை அறை கதவும் திறந்துள்ளது.
உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் இருந்த ஒரு பவுன் தங்கச் செயின் ஒன்று, 2 பவுன் தங்கச் செயின் ஒன்று, தங்க பிரேஸ்லெட் ஒன்று, கம்மல் மற்றும் இதர தங்க பொருட்கள் மொத்தம் 8 பவுன் காணாமல் போய் இருந்தது.
உடனடியாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.






