என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க.-அ.தி.மு.க. பெற்ற ஓட்டு சதவீதம்
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க.-அ.தி.மு.க. பெற்ற ஓட்டு சதவீதம்

    • 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு 64,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈெவரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஈரோடு:

    தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரகுமார் 69,166 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 50.83 சதவீதம் ஆகும்.

    இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துசாமி 58,522 வாக்குகள் பெற்றார். இது 43.01 சதவீதம் ஆகும்.

    2016-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு போட்டியிட்டு 64,879 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 43.83 சதவீதம் ஆகும். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சந்திரகுமார் 57,085 வாக்குகள் பெற்றார். இது 38.87 சதவீதம் ஆகும்.

    கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசில் போட்டியிட்ட திருமகன் ஈெவரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இது 44.27 சதவீதம் ஆகும்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58,396 வாக்குகள் பெற்றார். இது 38.41 சதவீதம் ஆகும்.

    இதுவரை நடந்த 3 தேர்தல்களிலும் அ.தி.மு.க.வின் ஓட்டு சதவீதம் இந்த தொகுதியில் குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×