search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "has gone up in the"

    • ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது.
    • பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு:

    ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு தாளவாடி, சேலம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், மங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளில் இருந்து தினமும் 100 முதல் 120 டன் காய்கறிகள் வரத்தாகி வந்தது.

    இங்கு மொத்த விலை மற்றும் சில்லரை விலை விற்பனையில் காய்கறிகள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவில் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக காய்கறி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்து விட்டது.

    இதன் எதிரொலியாக காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து உள்ளது. ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டுக்கு இன்று வெறும் 75 டன்கள் மட்டுமே காய்கறிகள் வரத்தாகி இருந்தது. வரத்து குறைவு எதிரொலியாகவும், தற்போது தொடர் முகூர்த்தம் வருவதாலும் காய்கறிகள் தேவை அதிகரித்து விலையும் உயர்ந்து விட்டது.

    கடந்த வாரத்தை விட இன்று சில காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. உதாரணமாக தக்காளி விலை இன்று ஒரு கிலோ ஒரு 35-க்கு விற்பனை ஆகிறது. கடந்த வாரம் ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோவுக்கு ரூ.15 உயர்ந்து விட்டது. பொதுவாக மார்க்கெட்டிற்கு 7000 பெட்டி தக்காளிகள் வரத்தாகி வந்த நிலையில் இன்று 3 ஆயிரம் தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது.

    இதேபோல் கடந்த வாரம் ஒரு கிலோ பீன்ஸ் ரூ. 80-க்கு விற்ற நிலையில் இன்று ரூ.100-க்கு விற்பனையானது. இதுபோல் கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 70- க்கு விற்ற நிலையில் இன்று ரூ.130-க்கு விற்பனையானது. கடந்த வாரம் ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ. 25-க்கு விற்ற நிலையில் இன்று ரூ. 40-க்கு விற்பனையானது.

    இதேப்போல் பச்சை பட்டாணி கிலோ ரூ.250-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த வாரம் பச்சை மிளகாய் கிலோ ரூ.70-க்கு விற்பனையான நிலையில் இன்று கிலோ ரூ 100-க்கு விற்பனையானது.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிலோவில் வருமாறு:

    சுரக்காய்-15, இஞ்சி-220, கேரட்-70, பீட்ரூட்-50, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, காலிபிளவர்-35, மாங்காய்-20, சின்ன வெங்காயம்-70-80, பெரிய வெங்காயம்-30, கத்திரிக்காய்-60, புடலங்காய்-30, பீர்க்க ங்காய்-60, முள்ளங்கி-40, பாவக்காய்-60, கருப்பு அவரை-110, பட்ட அவரை80, குடை மிளகாய்-70, கொத்தவரங்காய்-30.

    • கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கு விற்பனையானது.
    • கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்படுகிறது

    ஈரோடு, 

    ஈரோடு வ .உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கோலார், ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 லோடு லாரிகளில் 10 டன் தக்காளிகள் வரத்தாகி வந்தன. இதனால் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு விற்பனையானது.

    இந்நிலையில் கடும் பனிப்பொழிவு தாக்கம், காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இன்று வ. உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கோலாரில் இருந்து ஒரு டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது.

    இன்று ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40க்கு விற்பனையானது. தொடர் முகூர்த்தம் இருப்பதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. எனினும் தேவைக்கு ஏற்ப தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது.

    இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல விலை சரிய தொடங்கும் என தெரிவித்தனர்.

    • ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன.
    • இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் தாளவாடி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஒட்டன் சத்திரம், பெங்களூரு, கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து 8 ஆயிரம் தக்காளி பெட்டிகள் விற்பனைக்கு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல் கேரளா, கர்நாடக மாநிலங்களிலும் மழை தீவிரமாக பெய்து வருகிறது.

    இதன் காரணமாக தக்காளி விளைச்சல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தக்காளி வரத்தும் சரிய தொடங்கியுள்ளது. இதனால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

    இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெ ட்டிற்கு ஆந்திராவில் இருந்து மட்டும் 5 ஆயிரம் தக்காளி பெட்டிகள் வந்தன. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.10 முதல் 15 வரை விற்பனையாகி வந்தது. இந்த வாரம் வரத்து குறைந்ததன் எதிரொலியாக ஒரு கிலோ தக்காளி ரூ.30 முதல் ரூ. 35 வரை விற்பனையாகி வருகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலைமை நீடிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×