என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன.
    • ஒரே சின்னத்தை சில வேட்பாளர்கள் கோரினால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து வழங்குவர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதையடுத்து நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.

    இதில் காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் ஆகியோர் கட்சி சின்னத்திலும், மற்றவர்கள் சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டு விட்டன. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் ஏராளமான சுயேட்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சுயேட்சைகளுக்காக தேர்தல் ஆணையம் 191 சின்னங்களை வெளியிட்டுள்ளது.

    அதில் சீர்வளி சாதனம் (ஏர் கன்டிசனர்), அலமாரி, ஆட்டோ ரிக்ஷா, நடைவண்டி, பலுான், வளையல்கள், கிரிக்கெட் மட்டை, மட்டை மந்தடி வீரர் (பேட்ஸ்மேன்), மின்கல விளக்கு (பேட்டரி டார்ச்), மணியாரம் (பிட் நெக்ளஸ்), வார்ப்பட்டை (பெல்ட்), பென்ச், மிதிவண்டி காற்றடிக்கும் குழாய் (சைக்கிள் பம்ப்), இரட்டை தொலை நோக்காடி (பைனாகுலர்), பிஸ்கெட், கரும்பலகை, படகோட்டியுடன் கூடிய பாய்மர படகு, பெட்டி, ரொட்டி, ரொட்டி சுடும் கருவி, செங்கல், கைப்பெட்டி, பிரஸ், வாளி, கேக், கணக்கீட்டு பொறி (கால்குலேட்டர்), புகைப்பட கருவி (கேமரா), கொள்கலன்.

    குடைமிளகாய், தரை விரிப்பு, கேரம் பலகை, காலிபிளவர், கண்காணிப்பு கேமரா, சங்கிலி, திருகைக்கால், காலணி, சதுரங்க பலகை, புகைப்போக்கி, கிளிப், கோட், தென்னந்தோப்பு, துாரிகையுடன் கூடிய வண்ண கலவை தட்டு, கணினி, கணினி சுட்டி (மவுஸ்), கட்டில், பாரந்துாக்கி, கனசதுரம், வெட்டுகிற சாதனம், வைரம், டீசல் பம்ப், டிஷ் ஆன்ட்டெனா, சிவிகை, அழைப்பு மணி, கதவு கைப்பிடி, துளையிடும் இயந்திரம், இரு முனைப்பளுக்கருவி, மின் கம்பம், உறை, மின் இணைப்புக்கான நீட்டிப்பு பலகை, புல்லாங்குழல், கால்பந்து, கால்பந்து வீரர், செயற்கை நீரூற்று, சிறுமியர் சட்டை, வாணலி, புனல், கரும்பு, விவசாயி, வாயு சிலிண்டர், வாயு அடுப்பு.

    பரிசு பெட்டகம், இஞ்சி, கண்ணாடி டம்ளர், கிராமபோன், திராட்சை, பச்சை மிளகாய், தள்ளு வண்டி, ஆர்மோனியம், தொப்பி, ஹெட்போன், உலங்கு வானுார்தி, தலைக்கவசம், மட்டை பந்து, மணற்கடிகை, அமிழ்சுருள், இஸ்திரி பெட்டி, பலாப்பழம், கெண்டி, சமையலறை, கழிவு தொட்டி, வெண்டைக்காய், மகளிர் கைப்பை, மடிக்கணினி, தாழ்பாள், கடித பெட்டி, விளக்கேற்றி, பகடை, உணவு கலன், துரஹா ஊதும் மனிதம், தீப்பெட்டி, ஒலி வாங்கி, அரவை சாதனம், நகவெட்டி, டை, நுாடுல்ஸ் கோப்பை, கடாய், கால் சட்டை.

    நிலக்கடலைகள், பட்டாணி, விரலி, ஏழு கதிர்களுடன் கூடிய பேனாவின் முனை, பேனா தாங்கி, பென்சில் பெட்டி, பென்சிலை கூராக்கும் சாதனம், ஊசல், சிறு உரலும் உலக்கையும், பெட்ரோல் பம்ப், போன் சார்ஜர், தலையணை, அன்னாசி, கரணை, உணவு நிறைந்த தட்டு, தட்டுகள் வைக்கும் தாங்கி, பானை, பிரஷர் குக்கர், துளைப்பான், மமிப்பான் (ரேசர்), குளிர்பதன பெட்டி, மோதிரம், சாலை உருளை, எந்தரன், அறை குளிர்விப்பான் (ரூம் கூலர்), அறை வெதுப்பான் (ரூம் ஹீட்டர்), ரப்பர் முத்திரை சன்னல், முறம், ஊசி மற்றும் நுால், குடிமக்கள், குப்பை தொட்டி ஆகிய 191 சின்னங்கள் ஒதுக்கி உள்ளனர்.

    வேட்பு மனுக்கள் நாளை வாபஸ் பெறப்பட்டு மதியம் 3 மணிக்கு மேல் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அப்பட்டியலில் வேட்பாளர் பெயர், அவர் சார்ந்த கட்சி பெயர் அல்லது சுயேட்சை என்ற விபரமும், அவருக்கான சின்னமும் வழங்கப்படும்.

    ஒரே சின்னத்தை சில வேட்பாளர்கள் கோரினால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு செய்து வழங்குவர்.

    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந்தேதி நடக்கிறது.
    • மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 7-ந் தேதி வேட்புமனுக்கள் வழங்க இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாளில் இறுதி நேரத்தில் (பிற்பகல் 3 மணிக்கு) 26 பேர் வேட்புமனுக்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர் மனு, கூடுதல் மனு என்று மொத்தம் 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

    இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இடைத்தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை ஆய்வு செய்தனர்.

    இந்த நிகழ்வில் வேட்பாளர்கள் சிலரும், வேட்பாளர்களின் முகவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். அவர்களின் முன்னிலையில் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் படிவம் முறையாக நிரப்பப்படாதவை, உரிய கையொப்பங்கள் இல்லாதவை, முன்மொழிவுகள் இல்லாதவை என்று பல மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    அரசியல் கட்சியின் அங்கீகார வேட்பாளரின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் மாற்று வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

    இதன் மூலம் தற்போதைய நிலவரப்படி 83 பேர் போட்டியில் உள்ளனர். இதில் அ.ம.மு.க. வேட்பாளர் தனது மனுவை வாபஸ் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவர் வாபஸ் பெறுவது உறுதியாகி இருக்கிறது.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் கூறியதாவது:-

    இடைத்தேர்தலுக்காக 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டு இருந்தன. இதில் 80 மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 3 மனுக்களில் தேர்தல் பதிவு அதிகாரியின் கடிதம் நகல் வைக்கப்பட்டு இருந்தது. எனவே அந்த மனுக்கள் பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. பின்னர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று, அந்த மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் 10-ந் தேதி (நாளை) பிற்பகல் 3 மணி வரை தங்கள் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். வேட்புமனு திரும்ப பெறுவதற்காக காலக்கெடு முடிந்ததும், சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள வேட்பாளர் மற்றும் சின்னம் வைக்கும் பகுதியில் 16 பெயர்கள் மட்டுமே வைக்க முடியும். ஆனால் இந்த தேர்தலில் 80-க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் உள்ளனர். இதில் ஒரு சிலர் வாபஸ் வாங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே சிலர் தங்கள் மனுவை திரும்ப பெற்றாலும் 3 அல்லது 4 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது தேர்தல் அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. 80 பேருக்கு மேல் போட்டியில் இருப்பார்களா?, பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாபஸ் பெறுவார்களா? என்பது நாளை தெரியும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. (ஓ.பன்னீர்செல்வம் அணி) சார்பில் செந்தில்முருகன் என்பவர் கடந்த 3-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்கிடையே அரசியல் களத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள் காரணமாக தங்கள் வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி முக்கிய நிர்வாகிகள் அறிவித்தனர். அவர் தனது மனுவை இன்று (வியாழக்கிழமை) வாபஸ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனையின்போது, வேட்பாளர் செந்தில்முருகனின் படிவம் உரிய முறையில் நிரப்பப்படாததால் நிராகரிக்கப்பட்டது. அவர் 2 மனுக்கள் தாக்கல் செய்து இருந்தார். 2 மனுக்களும் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வாபஸ் பெறும் நிலை வரும் என்று எதிர்பார்த்தே, வேட்பாளர் தனது மனுவை தாக்கல் செய்தாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    • சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • தமிழகத்திற்கு வேலைக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    இது ஈ.வே.ரா.வின் மண் என்றும், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை, திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. இந்த கட்சிகள் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    பண பலமும் பதவி பலமும் இருக்கக் கூடிய இந்த அரசியல் களத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று என்னை இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக குடிநீரே இப்போது நஞ்சாக மாறியிருக்கிறது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் மாநகரம் இப்போது கேன்சர் சிட்டியாக மாறி வருகிறது. இதையெல்லாம் முதலில் மாற்ற வேண்டும். அதேபோல் எங்களுக்கு அதிகாரம் வந்தால், மக்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் இழுத்து மூடுவோம்.

    தமிழகத்திற்குள் நுழைந்துள்ள வடமாநிலத்தவர்கள் தமிழர்களை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறை மீதே கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் இங்கே வந்து ஏதோ தொழில் செய்கிறார்கள் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் தொழிலை மீறி தவறான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது. இதை நிச்சயம் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அண்ணன் (சீமான்) சொல்வது சரிதான்.

    ஒரு பேனாவைக் கொண்டு கடலுக்கு நடுவில் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? கலைஞரின் நினைவாக, மக்களுக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை அமைத்து கொடுங்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐயா கலைஞரை மக்களும் சந்தோஷமாக நினைப்பார்கள். அல்லது, ஐயாவின் நினைவாக பள்ளிக்கூடம் அமைத்துகொடுக்கலாம். இதையெல்லாம் மீறி பேனாவைத்தான் வைப்பேன், அதையும் கடலில்தான் வைப்பேன் என்று சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தில் அண்ணன் சொல்வது சரிதான். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லாதபோது, பேனா வைக்க எங்கிருந்து பணம் வரும்? என்று அண்ணன் கேட்பது நியாயம்தானே? பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
    • இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே 4 முறை கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று 5-வது முறையாக வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் குறித்து ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் 12-ந்தேதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த கூட்டம் நாளை நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்துவருகிறது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்பு இன்று திடீரென அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள், மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன.
    • இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கூறி வந்துள்ளர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தை அடுத்துள்ள சதுமுகை பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (65). இவரது மனைவி சீதாலட்சுமி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக சீதாலட்சுமிக்கு நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளன. இதனால் விரக்தியடைந்த சீதாலட்சுமி தான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என கடந்த சில நாட்களாக கூறி வந்துள்ளர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அதிகாலையில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து மாயமானார். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை ஆய்வு செய்ததில் சீதாலட்சுமி வீட்டில் இருந்து வெளியேறி, கொடிவேரியை நோக்கி நடந்து செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொடிவேரி-அரக்கன் கோட்டை பகுதியில் தேடியும் சீதாலட்சுமி கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அரக்கன் கோட்டை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து டி.ஜி.புதூர் நால்ரோட்டுக்கும், ஏழூருக்கும் இடையில் கந்தப்ப கவுண்டர் என்பவரது நெல் வயல் அருகில் வாய்க்காலில் சாய்ந்திருந்த கருவேல மரத்தில் சீதா லட்சுமியின் உடல் சிக்கி இருப்பது தெரியவந்தது.

    இது குறித்த தகவலின் பேரில் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சீதாலட்சுமியின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராமசாமி நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் பு.புளியம்பட்டி கே.வி.கே. தெருவை சேர்ந்தவர் ராமசாமி (62). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது அவர் நிலைதடுமாறி கட்டிடத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் அவரது மனைவி நாகமணி சம்பவ இடத்து வந்தார்.

    இதை தொடர்ந்து அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ராமசாமியை மீட்டு ஆம்புலன்சு மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விறகு அடுப்பில் இருந்த தீ அருகே உள்ள ஓலை குடிசையில் பற்றியது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.4444444444444444

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் டேம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (64). இவர் தென்னங்கீற்று வேய்ந்த தகர சீட்டு போட்ட குடிசை வீட்டில் மனைவி சிவகாமியுடன் குடியிருந்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பொன்னுசாமியின் மனைவி சிவகாமி குளிப்ப தற்காக குடியிருக்கும் வீட்டின் அருகே விறகு அடுப்பில் சுடுநீர் வைத்து உள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விறகு அடுப்பில் இருந்த தீ அருகே உள்ள ஓலை குடிசையில் பற்றியது. உடனே தீயை அணைக்க முயன்ற பொன்னுசாமி இந்த தீ விபத்து குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், ரொக்க பணம் ரூ.2 ஆயிரம் தீயில் கருகியது.

    மேலும் குடிசை அருகே இருந்த கன்று குட்டிக்கு லேசான தீ காயம் ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் அம்மாபாளையம் தொடக்க பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • இந்த முகாமில் 122 குழந்தைகள் மற்றும் 92 பெரியவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

     சென்னிமலை:

    சென்னிமலை வட்டார வள மையம் சார்பாக முன் தொடக்க நிலை, தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் சென்னிமலை அடுத்துள்ள அம்மாபாளையம் தொடக்க பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இதில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவ, மாணவி களுக்கு உள்ளடங்கிய கல்வி வசதி செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாற்றுத்திறன் கொண்ட 1 வயது குழந்தை களும், 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி களும் பயன்பெறும் வகை யில் மருத்துவ மதிப்பீட்டு முகாம் ஏற்பாடு செய்ய ப்பட்டு பலர் பயன்பெற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கோபிநாதன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், பேரூ ராட்சி கவுன்சிலர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர்.

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் கோதைச்செல்வி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

    இந்த முகாமில் 122 குழந்தைகள் மற்றும் 92 பெரியவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பூலாங்காட்டில் பழப்பூசையன்கோவில் வாசல் பகுதியில் வெள்ளை நாகப்பாம்பு படுத்திருந்தது.
    • அப்போது அந்த பாம்பு படமெடுத்து ஆடி சீறியபடி இருந்தது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையம் பூலாங்காட்டில் பழப்பூசையன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மூலவர் பழப்பூசையன் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது.

    இக்கோவிலில் அமா வாசை, கிருத்திகை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெறும். கோவில் வளாகத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை. இதனால் வயதான பெண்கள், சிறுமிகள் கூட கோவிலுக்குள் சென்று வழிபடுவதில்லை.

    இதனால் பெண்கள் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் பழப்பூசை யனை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று திருவிழா சிறப்பாக நடைபெற்று அன்னதானம் நடைபெறும்.

    கோவில் தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படும்.

    கோவில் பூசாரி பொன்ன ம்பலம் என்பவர் வழக்கமாக பூஜை செய்யபோகும் நாட்களில் மூலவரான பழப்பூசையன் கோவில் அருகே சுமார் 4 அரை அடி நீளமுள்ள வெள்ளைநாகம் அடிக்கடி தென்படுவதாகவும், பூஜை செய்ய வரும் போது பாம்பு காட்டுக்குள் ஊர்ந்து சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அந்த வெள்ளை நாகத்தை அடிக்கடி பார்த்துள்ளதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் செவ்வாய் கிழமையான நேற்று கோவில் பூசாரி பொன்னம்பலம் வழக்கம்போல கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார்.

    அப்போது கோவில் வாசல் பகுதியில் வெள்ளை நாகப்பாம்பு படுத்திருந்தது. இதை கண்ட பூசாரி அந்த பாம்பை விரட்டி உள்ளார்.

    அப்போது அந்த பாம்பு படமெடுத்து ஆடி சீறியபடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி அருகே இருந்த அக்கம்பக்க த்தினரை அழைத்து வந்தார். அவர்கள் வந்து பார்த்த போது அங்கு பாம்பை காணவில்லை. இதையடுத்து அவர்கள் பாம்பை அக்கம் பக்கம் தேடினர்.

    அப்போது மூலவர் அமைந்துள்ள கோவிலுக்கு முன்பாக உள்ள சிமெண்ட் சீட்டு கொட்டகை கூரை மீது சுமார் 5 அடி நீளத்தில் பளபளவென தோற்ற மளித்த வெள்ளை நாகம் ஊர்ந்து போனது.

    இதைக்கண்டு பரவசமான பொதுமக்கள் தங்களது செல்போனில் ஊர்ந்து சென்ற வெள்ளை நாகத்தை படம் பிடித்துள்ளனர். ஆட்கள் நடமாட்டத்தை யடுத்து பாம்பு சிமெண்ட் கூரை சந்தில் வெளியேறி மறைந்து விட்டது.

    இதனால் பாம்பு பட மெடுத்து ஆடி காட்சியளித்தது அப்பகுதி மக்களை பக்தி பரவசத்தில் மூழ்கச்செய்துள்ளது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.
    • தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

    அம்மாப்பேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே சிங்கம்பேட்டை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படித்த முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும், கேரள மாநில முன்னாள் கவர்னருமான பி.சதாசிவம் பள்ளிக்கு திடீரென வந்திருந்தார்.

    அவரை கண்டதும் இன்ப அதிர்ச்சி அடைந்த ஆசிரி யர்கள் வரவேற்பு அளித்து பள்ளிக்கு அழைத்து சென்றனர். பள்ளிக்குள் சென்ற சதாசிவம் தான் படித்த வகுப்பறைகளை பார்வையிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து நெகிழ்ந்தார்.

    தான் படித்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்து ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து தான் படித்த வகுப்பறையில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். பின்னர் நன்றாக படித்து தன்னை போல் ஒரு உயரிய பதவிக்கு வர வேண்டும் என மாணவர்களுக்கு அறி வுரை வழங்கினார்.

    பின்னர் அவர் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களிடம் பள்ளியின் தற்போதைய வளர்ச்சி குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் பள்ளியின் நலன் கருதி பள்ளிக்கு தேவையான வசதிகள். அதனை இந்த பள்ளியில் படித்து உயர்ந்த நிலையில் உள்ள உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைவரிடமும் கலந்து ஆலோசித்து பள்ளிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை எவ்வாறு செய்ய லாம் என்பது குறித்தும் ஆசிரியர்களுடன் கலந்துரை யாடினார்.

    பின்னர் பள்ளி வளாக த்திற்குள் சென்று பள்ளி ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்ட காய்கறி செடிகள் தோட்டத்தை பார்வையிட்டார்.

    அதே போல் பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மின் கம்பங்களால் மாணவர்க ளுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் ஆசிரியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகே ந்திரன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை இரவு நடக்கிறது.
    • இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் தைப்பூச விழா கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பின்னர் பல்லாக்கு சேவை, மயில் வாகன காட்சி, யானை வாகன காட்சி, பஞ்சமூர்த்தி புற ப்பாடு, திருத்தேரோட்டம், குதிரை வாகன காட்சி, பரி வேட்டை ஆகிய விழாக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று இரவு தெப்போற்சவம், பூச வாகன காட்சி திருவீதி உலா நடக்கிறது. தைப்பூச விழாவின் மிக முக்கிய நிகழ்வான மகாதரிசனம் நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) இரவு நடக்கிறது.

    முன்னதாக காலை 10 மணிக்கு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடடர்ந்து மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.

    அப்போது டன் கணக்கில் மலர்களால் அபிஷேகம் செய்யப்படும். இரவு 8 மணிக்கு நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும் வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா நடக்கும்.

    இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விடிய, விடிய சாமி தரிசனம் செய்வார்கள். இரவு 9 மணிக்கு நாதஸ்வர தவிலிசை கச்சேரியுடன் நான்கு ராஜா வீதிகளிலும் சாமி வலம் வந்து அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவி லுக்குள் சென்றடையும்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் 15 நாள் தேர் திருவிழா நிறைவுக்கு வருகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அன்னகொடி, செயல் அலுவலர் சரவணன்,மற்றும் பணியாளர்கள், அர்ச்ச கர்கள் செய்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    நாளை மாலை 4 மணிக்கு மேல் சென்னிமலை டவுன் பகுதிக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டது.

    ஈரோடு, பெருந்துறை மார்கமாக செல்லும் பஸ் களுக்கு பிராட்டியம்மன் கோவில் அருகில் தற்காலிக பஸ் நிறுத்தமும், அரச்சலூர், கரூர் மார்க்கமாக செல்லும் பஸ்களுக்கு அரச்சலூர் ரோட்டிலும், ஊத்துக்குளி மார்க்க பஸ்களுக்கு மேலப்பாளையத்திலும் தற்காலிக பஸ் நிறுத்தமும் அமைக்கப்படுகிறது.

    • வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
    • 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்துள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது.

    ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2,759 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 24 ரூபாய் 24 காசுக்கும், அதிகபட்ச விலையாக 29 ரூபாய் 1 காசுக்கும், சராசரி விலையாக 28 ரூபாய் 1 காசுக்கும் ஏலம் போனது.

    மொத்தம் 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.34 ஆயிரத்து 717 ரூபாய்க்கு விற்பனையானது.

    ×