என் மலர்
நீங்கள் தேடியது "குடிசை வீட்டில்"
- விறகு அடுப்பில் இருந்த தீ அருகே உள்ள ஓலை குடிசையில் பற்றியது.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.4444444444444444
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கே.என்.பாளையம் டேம் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (64). இவர் தென்னங்கீற்று வேய்ந்த தகர சீட்டு போட்ட குடிசை வீட்டில் மனைவி சிவகாமியுடன் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு பொன்னுசாமியின் மனைவி சிவகாமி குளிப்ப தற்காக குடியிருக்கும் வீட்டின் அருகே விறகு அடுப்பில் சுடுநீர் வைத்து உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக விறகு அடுப்பில் இருந்த தீ அருகே உள்ள ஓலை குடிசையில் பற்றியது. உடனே தீயை அணைக்க முயன்ற பொன்னுசாமி இந்த தீ விபத்து குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், ரொக்க பணம் ரூ.2 ஆயிரம் தீயில் கருகியது.
மேலும் குடிசை அருகே இருந்த கன்று குட்டிக்கு லேசான தீ காயம் ஏற்பட்டது.இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






