என் மலர்
நீங்கள் தேடியது "வெள்ளை நாகப்பாம்பு"
- பூலாங்காட்டில் பழப்பூசையன்கோவில் வாசல் பகுதியில் வெள்ளை நாகப்பாம்பு படுத்திருந்தது.
- அப்போது அந்த பாம்பு படமெடுத்து ஆடி சீறியபடி இருந்தது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையம் பூலாங்காட்டில் பழப்பூசையன் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மூலவர் பழப்பூசையன் சுயம்புவாக தோன்றியதாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் அமா வாசை, கிருத்திகை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு, அன்னதானம் ஆகியவை நடைபெறும். கோவில் வளாகத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை. இதனால் வயதான பெண்கள், சிறுமிகள் கூட கோவிலுக்குள் சென்று வழிபடுவதில்லை.
இதனால் பெண்கள் கோவிலுக்கு வெளியில் நின்றுதான் பழப்பூசை யனை வழிபாடு செய்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று திருவிழா சிறப்பாக நடைபெற்று அன்னதானம் நடைபெறும்.
கோவில் தோட்டத்தின் நடுவில் அமைந்துள்ளதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படும்.
கோவில் பூசாரி பொன்ன ம்பலம் என்பவர் வழக்கமாக பூஜை செய்யபோகும் நாட்களில் மூலவரான பழப்பூசையன் கோவில் அருகே சுமார் 4 அரை அடி நீளமுள்ள வெள்ளைநாகம் அடிக்கடி தென்படுவதாகவும், பூஜை செய்ய வரும் போது பாம்பு காட்டுக்குள் ஊர்ந்து சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிலர் அந்த வெள்ளை நாகத்தை அடிக்கடி பார்த்துள்ளதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் செவ்வாய் கிழமையான நேற்று கோவில் பூசாரி பொன்னம்பலம் வழக்கம்போல கோவிலுக்கு பூஜை செய்ய சென்றார்.
அப்போது கோவில் வாசல் பகுதியில் வெள்ளை நாகப்பாம்பு படுத்திருந்தது. இதை கண்ட பூசாரி அந்த பாம்பை விரட்டி உள்ளார்.
அப்போது அந்த பாம்பு படமெடுத்து ஆடி சீறியபடி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி அருகே இருந்த அக்கம்பக்க த்தினரை அழைத்து வந்தார். அவர்கள் வந்து பார்த்த போது அங்கு பாம்பை காணவில்லை. இதையடுத்து அவர்கள் பாம்பை அக்கம் பக்கம் தேடினர்.
அப்போது மூலவர் அமைந்துள்ள கோவிலுக்கு முன்பாக உள்ள சிமெண்ட் சீட்டு கொட்டகை கூரை மீது சுமார் 5 அடி நீளத்தில் பளபளவென தோற்ற மளித்த வெள்ளை நாகம் ஊர்ந்து போனது.
இதைக்கண்டு பரவசமான பொதுமக்கள் தங்களது செல்போனில் ஊர்ந்து சென்ற வெள்ளை நாகத்தை படம் பிடித்துள்ளனர். ஆட்கள் நடமாட்டத்தை யடுத்து பாம்பு சிமெண்ட் கூரை சந்தில் வெளியேறி மறைந்து விட்டது.
இதனால் பாம்பு பட மெடுத்து ஆடி காட்சியளித்தது அப்பகுதி மக்களை பக்தி பரவசத்தில் மூழ்கச்செய்துள்ளது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






