என் மலர்tooltip icon

    ஈரோடு

    • 5-வது மின்னணு எந்திரத்தில் 78-வது இடத்தில் நோட்டா இடம் பெறும்.
    • பணிகள் அனைத்தும் முடிவடைந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு வருகிற 27-ந் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது.

    இதற்காக 238 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    இதற்காக ஒரு வாக்குசாவடி மையத்தில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரு கட்டுப்பாட்டு எந்திரம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்கும் வசதி உள்ள வி.வி. பேட் எந்திரமும் அமைக்கப்படும். இதில் 5-வது மின்னணு எந்திரத்தில் 78-வது இடத்தில் நோட்டா இடம் பெறும்.

    தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை தவிர மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கு சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்பட்டது.

    இதில் ஒரு சில சின்னத்தை பெற கடுமையான போட்டி நிலவியதால் தேர்தல் அதிகாரிகள் குலுக்கல் முறையில் அந்த சின்னத்தை வேட்பாளர்களுக்கு ஒதுக்கினர். இதையடுத்து வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் இறங்கிவிட்டனர்.

    இந்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஒட்டுவதற்காக வேட்பாளர்களின் பெயர் சின்னம் மற்றும் வாக்கு சாவடிகளுக்கு முன்பு ஒட்டப்படும் வேட்பாளர்களின் போட்டோ, முகவரி மற்றும் சின்னத்துடன் ஒட்டும் போஸ்டர்கள் அச்சடிக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் அரசு அச்சகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு எந்திரத்தில் அனைத்து கட்சி முகவர்களின் முன்னிலையில் வேட்பாளர் பெயர் சின்னம் பொருத்தப்படும். இந்த பணிகள் இந்த வார கடைசியில் நடைபெறும் என்று தெரிகிறது.

    பின்னர் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஓட்டுப் பதிவுக்கு முந்தைய நாளான 26-ந் தேதி மாலை முதல் வாக்கு சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

    • தங்கராஜ் தனது மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
    • நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    பெருந்துறை:

    சென்னிமலையை அடு த்துள்ள எக்கட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61).

    இவர் சம்பவத்தன்று தனது மனைவி தனலட்சுமியுடன் (வயது 55) பெருந்துறையை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு சின்னாத்தாள் கோவிலில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் ரோடு நெடுஞ்சாலை ரோட்டை கடந்த போது கோவையில் இருந்து சேலம் நோக்கி சென்ற ஒரு கார் திடீரென இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பலத்த அடிபட்ட 2 பேரையும் அக்கம்பக்க த்தினர் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தனலட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தங்கராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
    • இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சென்னிவலசு சிவாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (34). இவர் பெருந்துறையில் டீ கடை வைத்துள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி (23). இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் முருகேசன் ஒரு பெண்ணுடன் போனில் பேசியது தொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து சம்பவத்தன்று காலை முருகேசன் வீட்டின் உள்ள அறையில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முருகேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே முருகேசன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பவானி அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பின்னர் விதை இருப்பு பராமரிப்பதில் சில அறிவுரைகளை வழங்கினார்.

    ஈரோடு:

    பவானியில் உள்ள அரசு விதை சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரோடு விதை ஆய்வு துணை இயக்குநர் சுமதி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது முளைப்பு திறன் பரிசோதனை முடிவு அறிக்கை, விதை இருப்பு பதிவேடுகளை ஆய்வு செய்து விதை சுத்திகரிப்பு செய்யும் எந்திரங்களை பார்வையிட்டார்.

    பின்னர் விதை இருப்பு பராமரிப்பதில் சில அறிவுரைகளை வழங்கினார்.

    மேலும் பவானி வேளாண்மை விரிவாக்க மையத்திலும் ஆய்வு செய்து கோப்புகளை பார்வையிட்டு விதை இருப்பு, விதையின் ஈரப்பதம் சரியான அளவில் இருக்கும் படி பார்த்து கொள்ளவும் மற்றும் பூச்சிகள் தாக்காமல் விதை களை பாதுகாக்கவும் அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது விதை ஆய்வாளர் ஆசைத்தம்பி உடனிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது.
    • தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 18-ந் தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன.

    தேர்தலில் பொதுமக்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 4 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை அமைக்கப்பட்டு அவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் பணியாற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் வருகை தந்து தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

    தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் தங்கி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27ந்தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • ஈரோடு மாவட்டத்தில் அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.
    • ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

    ஈரோடு:

    அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் அமோகமாக வரவேற்கிறார்கள். இதை பார்க்கும்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறுவது உறுதி. ஈரோடு மாவட்டத்தில் அத்தனை திட்டங்களையும் கொண்டு வந்தது அ.தி.மு.க. ஆட்சியில் தான்.

    கடந்த 21 மாத ஆட்சியில் தி.மு.க. அரசு சொல்லக்கூடிய வகையில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணத்தை மட்டும் நம்பி இந்த தேர்தலில் நிற்கிறார். பால் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். பெண்களுக்கு உரிமை தொகை இதுவரை தரவில்லை. இதேபோல் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சொத்து வரி, பால் விலை உயர்வு இதையெல்லாம் கருத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். விதிகளை மீறி தி.மு.க. செயல்படுகிறது. தேர்தல் ஆணையம் முறையாக நடவடிக்கை எடுத்தால் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

    இந்த தேர்தல் வெற்றி என்பது வருகிற பாராளுமன்ற தேர்தல் மட்டுமன்றி அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

    அடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோகமாக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்பார். அதற்கு இந்த இடைத்தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்ற அடித்தளமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.டி.வி. தினகரன் நேற்று கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார்.
    • நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட டி.டி.வி. தினகரன் இரவு ஈரோட்டிலேயே தங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கல் செய்து பிரசாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்காததால் வாபஸ் பெறப்போவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்தார். இதையடுத்து வேட்பாளரும் வாபஸ் பெற்றார்.

    இதற்கிடையே டி.டி.வி. தினகரன் நேற்று கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள ஈரோடு வந்தார். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட அவர் இரவு ஈரோட்டிலேயே தங்கினார்.

    இன்று காலை டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசப்பட்டதாகவும், இதில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.
    • இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், பெரியார் நகர் போன்ற இடங்களில் பிரசாரம் செய்து ஜி.கே.வாசன் ஆதரவு திரட்டுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று மாலை பிரசாரம் செய்கிறார்.

    இன்று மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அவர் வீரப்பன் சத்திரம், பெரியார் நகர் பகுதிக்கு உட்பட்ட வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர்லைன் காலனி, குமலன் குட்டை, கலெக்டர் அலுவலகம், சம்பத்நகர், பெரியவலசு நால்ரோடு, கல்யாண விநாயகர் கோவில், இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ். காம்பவுண்ட், பெரியார் நகர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

    • 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும் என்றார் எடப்ப்பாடி பழனிசாமி.

    ஈரோடு:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் தான் வாக்களிக்கிறார்கள். மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும்.

    தி.மு.க. எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை. பணத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த அளவு விதிமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

    எங்களைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு அருகதை இல்லை. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.

    8 வழிச்சாலை திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது மவுனம் சாதிக்கின்றன. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் தானே?

    தி.மு.க. வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை அதற்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்கிறார்களா? தி.மு.க.வுடன் அங்கம் வகிக்கிற கூட்டணி கட்சிகள் அனைத்தும் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தி.மு.க.விற்கு ஒத்தூதி கொண்டிருக்கின்றன என குற்றம்சாட்டினார்.

    • கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
    • சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    உணவுக்கு கூட வழியில்லாத நிலையில் இறந்து போன கணவன் மற்றும் தாயார் சடலங்களை ஒரு வாரம் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்த சம்பவம், ஈரோடு அருகே நிகழ்ந்திருக்கிறது.

    கோபிசெட்டிபாளையம் வண்டிப்பேட்டை குமணன் வீதியை சேர்ந்த சாந்தி-மோகனசுந்தரம் தம்பதிக்கு, மன வளர்ச்சி குன்றிய சரவணக்குமார் என்ற மகனும், சசிரேகா என்ற மகளும் உள்ளனர். சசிரேகா இருந்த வரை கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தார். அவர் திருமணமாகி சென்ற பிறகு சாந்தி, தனது வயதான தாயார், கணவர் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மகனுடன் வசித்து வந்தார்.

    பல நாட்கள் பட்டினியாகவும், அக்கம் பக்கம் இருப்பவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டும் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன் சாந்தியின் கணவர் மோகனசுந்தரமும், அவரை தொடர்ந்து தாயார் கனகாம்பாளும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய கூட பணமில்லாத நிலையில், இரு சடலங்களை வீட்டிற்குள்ளேயே வைத்து விட்டு இருந்துள்ளார். சாந்தி வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசவே அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து கோபி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், இருசடலங்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து பின்னர் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • திடீரென பஸ் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.
    • இதில் பஸ் சேதமடைந்து முன் பக்க கண்ணாடி உடைந்து நொருங்கியது.

    பெருந்துறை:

    கோவையில் இருந்து நேற்று இரவு ஒரு தனியார் ஆம்னி பஸ் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றது. இதில் 36 பேர் பயணம் செய்தனர்.

    அந்த ஆம்னி பஸ் நள்ளிரவு 12 மணி அளவில் பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பவானி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது.

    அப்போது திடீரென பஸ் நிலை தடுமாறி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் சேதமடைந்து முன் பக்க கண்ணாடி உடை ந்து நொருங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் அலறினர்.

    இதில் பஸ்சில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த பரமேஸ்வரன் (37), திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ மாணிக்கம் (52), திரு வண்ணாமலையை சேர்ந்த தீபன் (28), கோவையை சேர்ந்த குமரேசன் (51), கிருஷ்ணகிரியை சேர்ந்த உதயகுமார் (37), கோவையை சேர்ந்த ஸ்ரீ வீரகாஷினி (23), நந்தினி (36), சுகனேஸ்வரி (44), சந்திப் (10), ராஜலட்சுமி (74), சாய் கிருஷ்ணா (23), கிருஷ்ணகிரியை சேர்ந்த ராஜேஷ் (35) என 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்த வர்கள் மீட்கப்பட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பனி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் செடியி லேயே கருகுகிறது.
    • தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், ரோஜா, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூ வகைகளை விவசாயிகள் பல ஏக்கரில் பயிரிட்டுள்ளனர்.

    பூக்கள் பறிக்கப்பட்டு சத்தியமங்கலம் விவசாயி களால் நடத்த ப்படும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் பூக்களை வாங்கி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில ங்களுக்கும், கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பு கின்றனர்.

    இங்கு பண்டிகை காலம், திருமண முகூர்த்த நாட்கள் மற்றும் முக்கிய நாட்களில் பூக்களின் விற்பனை அதிகமாக இருக்கும். பூக்கள் வரத்துக்கு ஏற்ப விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனை செய்யப்படும்.

    இந்நிலையில் விசேஷ நாட்களின்போது பூக்களுக்கு கிராக்கி அதிகம். தற்போது பனி அதிகமாக பொழிந்து வருவதால் சம்பங்கி, மல்லிகை உள்ளிட்ட பூக்கள் செடியி லேயே கருகுகிறது. இதனால் விளைச்சல் குறைந்து பூக்கள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    மேலும் தமிழ்நாடு, கேரளாவில் முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக இருந்தது. குறிப்பாக தை மாதத்தில் கடைசி முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

    சத்தி பூ மார்க்கெட்டில் இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.1,300-க்கு விற்ற மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.3 ஆயிரத்திற்கும், ரூ.1,200-க்கு விற்ற முல்லைப்பூ ரூ.2,900-க்கு விற்பனையானது. சம்பங்கி பூ ரூ.120-க்கு விலை உயர்ந்து விற்பனையானது.

    இதோபோல் கனகாம்பரம் ரூ.500, காக்கடா பூ ரூ.600-1175, செண்டுமல்லி ரூ.18-54, கோழிக்கொண்டைப்பூ ரூ.10-110, அரளி ரூ.100, ஜாதி முல்லை ரூ.750-1000, துளசி ரூ.40, செவ்வந்திப்பூ ரூ.100-க்கு விற்பனை யானது.

    ×