என் மலர்
ஈரோடு
- தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
- ஈரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகம் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10-ந்தேதி சென்னையில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ளேன். எனக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனது வெற்றிக்கு பாடுபட்ட அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈரோடு கிழக்கு தொகுதி பொதுமக்கள் என்னிடம் நிறைய கோரிக்கைகளை வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன். மேலும் கழிவுநீர் பிரச்சனை, சாலை வசதி உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன்.
மேலும் கழிவு நீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை வசதி போன்ற கோரிக்கைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சிக்கு எதிராக சதி நடக்கிறது என்று கூறியுள்ளார். அவர் கூறியது உண்மைதான். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர முடியாது என்பதால் அவர்கள் பல்வேறு சதிகளை செய்து தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இல்லாத பிரச்சினைகளை புதிய பிரச்சினைகளாக அவர்கள் எழுப்பி தி.மு.க. ஆட்சிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
வட இந்தியர்கள் தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்வதால் தொழில் நடத்துபவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தமிழ்நாட்டில் அவர்களுக்கு முழு பாதுகாப்பு உள்ளது. எனவே தமிழக மக்கள் பாரதிய ஜனதாவின் சதியை முறியடிப்பார்கள்.
இதுபோன்ற பொய்யான வதந்திகளை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள். தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. பாதுகாப்பாக உள்ளனர். அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஈரோட்டில் மேட்டூர் ரோடு வரை மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுவும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு கனி மார்க்கெட்டில் வியாபாரிகள் புதிய வளாகத்தில் வாடகை அதிகமாக உள்ளதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
அமைச்சர் முத்துசாமியிடம் இது பற்றி கலந்து பேசி முடிவு செய்யப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏராளமான குடியிருப்புகள் பட்டா இல்லாமல் இருப்பதாக கூறினார்கள். எனது வீட்டுக்கு கூட பட்டா இல்லை. எனவே பட்டா இல்லாதவர்களுக்கு விரைவில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோட்டில் உள்ள சட்டமன்ற அலுவலகம் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த பணி நிறைவேற்றப்பட்டதும் எம்.எல்.ஏ அலுவலகம் அங்கு செயல்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் கியாஸ் விலை உயர்வை கண்டித்து மகிளா காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
- பூச்சி செடிக்கு அடிக்கும் மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.
- இதனையடுத்து சர்புதீனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம், ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் சர்புதீன் (47). இவரது மனைவி லகிலாபுதுரன்சியா.
இந்நிலையில் சர்புதீனுக்கு கடந்த 5 மாதமாக வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. வலிப்பு நோய் காரணமாக தான் உயிரோடு இருக்க போவதில்லை என்று அடிக்கடி அவர் கூறி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மீண்டும் சர்புதீனுக்கு வலிப்பு வந்தது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள பூச்சி செடிக்கு அடிக்கும் மருந்தை (விஷம்) யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து குடித்து விட்டு சிறிது நேரம் கழித்து வாந்தி எடுத்து உள்ளார்.
இது குறித்து அவரது மனைவி கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதனையடுத்து சர்புதீனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சர்புதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
- அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே கொளநால்லி அடுத்துள்ள கருங்கரடு பகுதியை சேர்ந்தவர் சம்பூர்ணம் (59). தனது தாயார் சரஸ்வதி (82) என்பவருடன் குடிசை வீட்டில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை சம்பூர்ணம் விவசாயக் கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அவரது தாய் சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
கதவை உள் தாழிட்டு சமையல் செய்வதற்காக சரஸ்வதி விறகு அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக தீப்பொறி வீட்டின் குடிசை பகுதியில் பற்றி கொண்டது.
பின்னர் சிறிது நேரத்தில் தீ மலமலவென்ன குடிசையில் பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீட்டுக்குள் புகை மண்டலமாக காட்சியளித்தது. சரஸ்வதியால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
அப்போது ஈரோட்டில் இருந்து கொடுமுடி நோக்கி 43-ம் நம்பர் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பஸ்சை மனோகரன் என்பவர் ஓட்டி வந்தார். பின்னர் மூதாட்டி வீட்டில் தீ எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மனோகரன் உடனடியாக பஸ்சை நிறுத்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சரஸ்வதியை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தார். இதனால் மூதாட்டி சரஸ்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆவணங்கள் எரிந்து சேதமானது.
உரிய நேரத்தில் சமயோதிகமாக செயல்பட்டு மூதாட்டியை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர் மனோகரனை பொதுமக்கள் பாராட்டினர்.
இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவசாயிகள் மற்றும் மன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்திய மங்கலம் மற்றும் ஆசனூர் என 2 வனக்கோட்டங்கள் உள்ளன.
இந்த 2 வனக் கோட்டங்க ளில் சத்திய மங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம் , கடம்பூர், விளாமுண்டி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி, ஜீரகள்ளி ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன.
புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனப்பகுதி யில் கடந்த 2 மாதத்துக்கும் மேலாக மழை பொய்யா ததால் தற்போது மரம், செடி, கொடிகள் காய்ந்த நிலையில் உள்ளன.
மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள், தடுப்ப ணைகள், நீரோடைகள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் வற்றியது.
இதன் காரணமாக யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு , மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சேதப்ப டுத்து வது தொடர்கதை ஆகியு ள்ளது.
கோடை காலங்களில் வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனப்பகுதியில் ஆங்காங்கே உள்ள தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்புவது வழக்கம்.
தற்போது வனப்ப குதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியதால் வனவிலங்கு கள் வனப்பகு தியை விட்டு வெளியே வருவது அதிகரித்துள்ளது.
எனவே வன விலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனத்துறையினர் வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் மன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஆனைக்கல்பாளையம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு அருகே உள்ள சோலார் அடுத்த புறவழி ச்சாலை பகுதியான ஆனை க்கல்பாளையம், 46 புதூர் பிரிவு சாலை, முத்து கவுண்டன் பாளையம் ரிங் ரோடு, பரிசல் துறை 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அந்த வழியாக பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சமின்றி சென்று வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு புறவழிச் சாலை பகுதியில் உள்ள அனைத்து வேக த்தடைகளும் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் அகற்ற ப்பட்டது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்து வந்தது.
ஒரு சில விபத்துகளும் இந்த பகுதியில் நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர்.
மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இல்லாததால் வேகமாக சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் சாலைகளை கடக்க முடியாமல் பொது மக்கள் தவித்து வந்தனர்.
எனவே இந்த பகுதியில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் ஆனைக்கல்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் பொதுமக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் திடீ ரென சாலை மறியலில் ஈடு பட்டனர்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சரஸ்வதி எம்.எல்.ஏ., மொட க்குறிச்சி இன்ஸ்பெக்டர் தீபா மற்றும் போலீசார் சம்பவ இடத்து க்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடு பட்டனர்.
இதில் சரஸ்வதி எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் பேசி முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதை யடுத்து அதிகாரிகள் விரை வில் வேகத்தடை அமைத்து தருவதாக உறுதியளித்தனர்.
இதனை அடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் அங்கு இருந்து கலை ந்து சென்றனர்.
- கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
சென்னிமலை:
பெருந்துறை சிப்காட் பகுதியில் 100-க்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது.
இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளின் அனுமதியுடன் விவசாய நிலங்களில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு மற்ற விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அதேபோல் சிப்காட் பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட குட்டப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2 வருடங்களாக சிலர் அனுமதி யின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இத னால் அனுமதியின்றி கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
மேலும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் பெருந்து றை தாசில்தார் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் தங்க ராஜ், மாசு கட்டு ப்பாட்டு வாரிய அதிகாரி முத்துராஜ் ஆகியோர் சிப்காட் கழிவுகள் கொட்ட ப்பட்ட இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள்.
அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விவசாயி களிடம் கூறும் போது, இனி மேல் விவசாய நிலத்தில் சிப்காட் கழிவுகள் கொட்டா மல் இருப்பத ற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
- தமிழ் அழகன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
- இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தமிழ் அழகன் (31). கட்டிட தொழிலாளி. இவர் சவுமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்நிலையில் தமிழ் அழகனுக்கு மதுப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக் கிடையே சண்டை ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சவுமியா, தமிழ் அழகனை விட்டு குழந்தை களுடன் பிரிந்து அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அதிகமாக மது குடித்து வந்த தமிழ் அழகன் சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் தமிழ் அழகனை மீட்டு பெருந்து றையில் உள்ள அரசு மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தமிழ் அழகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பிரகாஷை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
- மனவேதனை அடைந்த பிரகாஷ் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
ஈரோடு:
ஈரோடு செங்கோடம் பாளையம் ராஜீவ்நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (45). தச்சு தொழிலாளி. இவருடைய மனைவி மீனா (28). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். பிரகாசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு இதய கோளாறு ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பிறகு டாக்டர்கள் மது அருந்தக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்கள்.
ஆனால் பிரகாஷ் மது குடிக்கும் பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு பிரகாஷ் மது குடித்துவிட்டு வீட்டுக்கு சென்றார்.
அப்போது பிரகாஷை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த பிரகாஷ் வீட்டின் அறையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உடனே மீனா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிரகாஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.79 அடியாக உள்ளது.
- இதேபோல் குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.72 அடியாக உள்ளது.
ஈரோடு:
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில மாதங்க ளாகவே மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. மேலும் பாசனத்தி ற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.79 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 638 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி என மொத்தம் 700 கன அடி தண்ணீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது.
இதேபோல் 41.75 அடி உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 41.72 அடியாக உள்ளது. 30.84 அடி உள்ள பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 26.90 அடியாக உள்ளது.
33.46 அடி உள்ள வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 32.19 அடியாக உள்ளது.
- வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
- ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
ஈரோடு:
ஈரோட்டில் பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி, ஈரோடு மாநகர் பகுதி, மொடக்குறிச்சி உள்பட பல்வேறு பகுதிகளில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி உள்ளனர்.
குறிப்பாக பெருந்துறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தனியார் கம்பெனிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தவர்களின் முக்கியமான பண்டிகையான ஹோலி பண்டிகை இன்று உற்சா கமாக கொண்டா டப்பட்டு வருகிறது.
இதற்காக ஈரோட்டில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.
மேலும் ஈரோட்டில் இருக்கும் வடமாநிலத்தவர்கள் நேற்று இரவு முதலே ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் இந்திரா நகர், கருங்கல் பாளையம், கே.எஸ்.நகர், திருநகர் காலனி, வளையகார வீதி, வி.வி.சி.ஆர். நகர், அக்ரஹார வீதி போன்ற பகுதியில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி னர்.
ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை முகத்தில் பூசி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். மேலும் இனிப்புகளை வழங்கியும் ஹோலியை கொண்டாடினர்.
- கனி மார்க்கெட்டில் நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது.
- தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம்.
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி)மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 230 தினசரி கடைகளும், 760 வார சந்தை கடைகளும் உள்ளன.
கனி மார்க்கெட்டில் நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது. திங்கட்கிழமை இரவில் தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை வரச்சந்தை நடைபெறும். இதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஜவுளி சந்தைக்கு வந்து துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருவது வழக்கம். சாதாரண நாட்களில் ரூ.3 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். அதே நேரத்தில் பண்டிகை காலங்களில் ரூ.6 கோடி வரை வர்த்தகம் நடைபெறும். மற்ற இடங்களை விட இங்கு ஜவுளிகளின் விலை குறைவாக இருப்பதால் ஜவுளி சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக கடந்த ஒன்றரை மாதமாக ஜவுளி சந்தை வியாபாரம் மந்தமாக இருந்தது. குறிப்பாக வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் அறவே நடைபெறவில்லை. இதனால் ரூ.150 கோடி மதிப்பிலான துணிகள் குடோனில் தேங்கி இருந்தன.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவடைந்ததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டது. இதனையடுத்து வழக்கம் போல் நேற்று இரவு ஜவுளி சந்தை கூடியது.
இந்த முறை கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வருகை தந்தனர். இதனால் ஜவுளி சந்தை களை கட்டியது. மொத்த வியாபாரம் விறுவிறுப்பாக நடை பெற்றது.
இதேபோல் தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். தற்போது கோவில்களில் தொடர்ந்து விசேஷம் வருவதால் மஞ்சள், சிகப்பு கலர் துண்டு, வேட்டிகள், சேலைகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
சில்லரை வியாபாரம் இன்று மட்டும் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தது கோடை காலம் தொடங்கிவிடும் என்பதால் கோடை விற்பனையும் சூடுபிடிக்க தொடங்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன.
- கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இதில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள கரும்பு, வாழை, மக்காச்சோளம், தென்னை போன்றவற்றை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வன சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற காட்டு யானை அந்த பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்ததுடன் தோட்டக்காவலுக்கு இருந்த தர்மபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகளான மல்லப்பா, திகினாரை, ஜோரைகாடு பகுதியை சேர்ந்த மாதேவா ஆகியோரை மிதித்து கொன்றது.
இதனையடுத்து கருப்பனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து 3 கும்கி யானைகள் தாளவாடி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. பின்னர் அவைகளின் உதவியுடன் அட்டகாசம் செய்து வந்த கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக கருப்பன் இருக்கும் இடத்தை கண்டறிந்த வனத்துறையினர் கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இருந்தா லும் வனத்துறைக்கு போக்கு காட்டிய கருப்பன் வனப்பகு திக்குள் தப்பி சென்றது. இதனால் கருப்பன் யானை யை பிடிக்கும் முயற்சியை தற்கா லிகமாக வனத்துறை யினர் நிறுத்தி வைத்தனர். கடந்த சில நாட்களாக கருப்பன் யானை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதனால் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் யானை மல்லன்குழி கிராமத்தை சேர்ந்த தேவா என்பவர் தோட்டத்துக்குள் புகுந்தது. இதைக்கண்டதும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு கருப்பன் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
இரவு முழுவதும் போக்கு கட்டிய கருப்பன் யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. மீண்டும் கருப்பன் யானை ஊருக்குள் வந்ததால் நிம்மதியை இழந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். இனி எப்போது கருப்பன் மீண்டும் ஊருக்குள் வருமோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர். எனவே மீண்டும் கருப்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.






