என் மலர்tooltip icon

    ஈரோடு

    • சென்னிமலை பகுதியில் வனப்பகுதியில் இது போல தீப்பிடிக்கும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
    • இது போன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள மேலப்பாளையம் பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த காட்டுப் பகுதியில் ஏரா ளமான மரங்கள் மற்றும் புல்வெளிகள் உள்ளன. இதில் சில பகுதிகளில் காய்ந்த புல் மற்றும் செடிகள் உள்ளது. தற்போது வெயி ளின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்தநிலையில் மேலப்பாளையம் காட்டுப்பகுதி யில் திடீரென தீப்பிடித்தது. அந்த தீப்பற்றி மற்ற பகுதிகளில் பரவி எரிந்து கொண்டு இருந்தது. இதை கணடு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தில் உள்ள வர்கள் உடனடியாக தீய ணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்து க்கு வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இதே போல் சென்னிமலை- பெருந்துறை ரோடு ஈங்கூர் அருகே காய்ந்த புல்வெளிகள் மற்றும் செடி களில் திடீரென தீப்பற்றி எரிந்தது.

    உடனே சென்னி மலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலையத்தினர் தண்ணீரை பீச்சியடித்து தீ மேலும் பரவாமல் அணை த்தனர்.

    இந்த 2 இடங்களிலும் நடந்த தீ விபத்தில் அதிர்ஷ்ட வசமாக பெரும் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சிறிது நேரம் தீயை அணைக்கா விட்டால் அருகே உள்ள மரங்களில் தீ பற்றி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்.

    தீயணைப்பு வீரர்கள் சரியான நேரத்துக்கு வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது.

    ஒரே நாளில் சென்னி மலை பகுதியில் 2 இட ங்களில் அடுத்தடுத்து ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சென்னிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சென்னிமலை பகுதியில் வனப்பகுதியில் இது போல தீப்பிடிக்கும் சம்பவங்கள் கடந்த ஒரு மாதத்தில் பலமுறை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    தற்போது அதிக அளவில் வெயில் அடிப்பதால் ரோட்டோரம் உள்ள புல்வெளிகள் மரங்கள் காய்ந்து கிடப்பதால் தீ பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் யாராவது தீ பற்ற வைத்து இருக்கலாமா என சந்தேகிக்கப்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வனப்பகுதியில் கண்காணித்து இது போன் சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    • சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலையை அடுத்த வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (36).

    இவர் சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது கால் தவறி மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • . இன்று காலை ரெயில் சென்று கொண்டிருந்தபோது பெண் மான் ஒன்று தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பரிதாபமாக இறந்தது.
    • இதுகுறித்து ஈரோடு வன காவலர் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு: 

    ஈரோடு ரெயில் நிலையத்திற்கும் காவேரி ரயில் நிலையத்திற்கும் இடையே இன்று காலை ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது.

    இந்த பகுதியில் இரு புறமும் தென்னை, வாழை தோட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த பகுதியில் அவ்வப்போது மான்கள் நடமாட்டமும் இருந்து வந்துள்ளது.

    இன்று காலை ரெயில் சென்று கொண்டிருந்தபோது பெண் மான் ஒன்று தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற போது ரெயில் மோதி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.இதுகுறித்து ஈரோடு வன காவலர் ரமேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரிடம் மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது.     

    • அம்மனின் வீதிஉலா நடந்தது.
    • ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்தார்.

    ஈரோடு மாவட்டம் தாளவாடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தமிழக-கர்நாடக பக்தர்கள் இனைந்து குண்டம் திருவிழாவை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த விழாவில் தலைமை பூசாரி சிவண்ணா மட்டுமே குண்டம் இறங்குவது தனிச்சிறப்பாகும்.அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    கடந்த 7-ந் தேதி இரவு மாரியம்மன் உற்சவ சிலை மேள வாத்தியங்கள் முழங்க தொட்டகாஜனூர் செல்லும் சாலையில் உள்ள ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. நேற்று காலை முதல் மாலை வரை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கோவில் முன்பு விறகுகள் அடுக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இரவு 10 மணியளவில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

    பின்னர் அம்மனின் வீதிஉலா நடந்தது. தாளவாடி முழுவதும் உள்ள ஒவ்வொரு வீதியாக சென்று பக்தர்களுக்கு மாரியம்மன் அருள்பாலித்தார். போயர் வீதி மற்றும் அம்பேத்கர் வீதிகளில் மலர் பாதங்களால் அம்மனை அழைத்து சென்றனர்.

    அதன் பின்னர் காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு 30 அடி நீளத்தில் 4 அடி உயரத்தில் உள்ள குண்டத்தில் பக்தர்கள் ஆரவாரத்துடன் பூசாரி சிவண்ணா குண்டம் இறங்கி தீ மிதித்தார்.

    பின்னர் பக்தர்கள் அனைவரும் குண்டத்தை தொட்டு வணங்கினர். இந்த குண்டம் திருவிழாவில் தாளவாடி தொட்டகாஜனூர் ,தலமலை, கோடிபுரம், சாம்ராஜ்நகர், சிக்கொலா, உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணிக்காக தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .

    • டிராக்டரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் சாலையில் குதித்து தப்பிவிட்டனர்.
    • வேலுமணி வெளியே குதிப்பதற்குள் டிராக்டர் முழுவதுமாக கவிழ்ந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று காலை கடம்பூரில் இருந்து கே.என். பாளையத்தை நோக்கி டிராக்டர் ஒன்று ஹலோ பிளாக் கற்களை ஏற்றுவதற்காக சென்று கொண்டு இருந்தது. டிரைவரின் முன் பகுதியில் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி (21) உள்பட 3 பேர் அமர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

    கடம்பூர் சாலையில் டிராக்டர் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக டிராக்டரின் மெயின் ஆக்சில் முறிந்ததால் டிராக்டர் நிலை குலைந்து கவிழ முயன்றது. அப்போது டிராக்டரில் பயணம் செய்த டிரைவர் உள்பட 2 பேர் சாலையில் குதித்து தப்பிவிட்டனர். ஆனால் வேலுமணி வெளியே குதிப்பதற்குள் டிராக்டர் முழுவதுமாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே வேலுமணி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வேலுமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்து மாரியம்மன் கோவிலில் இன்று காலை குண்டம் விழா நடந்தது.
    • பக்தர்கள் பலர் அழகு குத்தி வந்திருந்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளையத்தில் அழகு முத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் குண்டம்- தேர் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.

    இதை தொடர்ந்த இந்த ஆண்டுக்கான குண்டம்- தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 28-ந் தேதி கொடிசேலை கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி தினமும் சுவாமி சிங்கம் வாகனம் அன்ன பச்சி, காமதேனு, புலி, குதிரை, சட்டத்தேர், யானை, தொப்ப செட்டி ஆகிய வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை குண்டம் விழா நடந்தது. இதில் அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு குண்டம் தீ மிதித்தனர். மேலரும் பக்தர்கள் பலர் அழகு குத்தியும் வந்திருந்தனர்.

    இதனைத் தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி யும், இரவு சிங்காசனத்தில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், 9-ந் தேதி காலை அக்கினி கரகம் எடுத்து வருதல், அதனைத் தொடர்ந்து கம்பம் எடுத்துச் செல்லுதல் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

    • 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
    • வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத் தேர்வு வரும் 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்தந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறையினர் செய்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 105 மையங்களில் 24 ஆயிரத்து 918 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வை எழுதுகின்றனர். இதேப்போல் பிளஸ்-1 பொதுத்தேர்வை 22,442 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

    தனித் தேர்வர்களுக்கு கூடுதலாக 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் துறை சார்பில் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.

    அதன்படி ஈரோடு மாவட்டத்துக்கான வினாத்தாள்கள் வந்தடைந்தது.

    இந்த வினாத்தாள்களை ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய 5 கல்வி மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த பணியை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அய்யண்ணன் பார்வையிட்டார்.

    ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பொது தேர்வுக்கான வினாத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அந்த அறைக்கு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

    மேலும் கண்காணிப்பு கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

    இதுபோல் ஈரோடு மாவட்டத்தில் மற்ற இடங்களில் வைக்கப் பட்டுள்ள வினாத்தா ள்களின் அறைகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான அனைத்து பாட வினாத்தாள்கள், பிளஸ்-1 தேர்வுக்கான 3 பாட வினாத்தாள்கள் வந்து விட்டதாகவும், மீதமுள்ள பாடத்துக்கான வினாத்தாள்களும்,

    எஸ்.எஸ். எல். சி. பொதுத்தேர்வுக்கான வினாத்தாள்களும் விரைவில் வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் பரணிதரன் (வயது 39). இவர் தனியார் கம்பெனியில் மெக்கானி க்காக பணிபுரிந்து வரு கிறார்.

    இவர் வேலைக்கு சென்று விட்டு அவினாசியில் இரு ந்து நம்பியூருக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். அப்போது அந்தி யூரில் இருந்து கோவைக்கு ஒரு தனியார் பஸ் வந்தது.

    அந்த பஸ் பரணிதரன் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை ஒட்டியபடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பரணி தரன் வாகனத்தை ஓரமாக நிறுத்தினார். இதையடுத்து அவர் மொட்ட ணம் அருகே அந்த தனியார் பஸ்சை நிறுத்தினார்.

    இதில் பரணி தரனுக்கும், டிரைவர் மற்றும் கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து பரணிதரன் நான் அடிபட்டு இறந்தால் எனது குடும்பத்தை யார் காப்பாற்றுவது இனிமேல் இது போல் செய்தீர்கள் என பஸ் டிரைவரிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பரணிதரன் தான் வைத்து இருந்த கத்தியை எடுத்து டிரைவர் மற்றும் டிரைவரை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தனியார் பஸ் டிரைவர் நம்பியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பரணிதரனை கைது செய்தனர்.

    இதையடுத்து அவரை கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் அவரை கோபி செட்டிபாளையம் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • அங்கீகரிக்கப்பட்ட என்.ஜி.ஓ. மூலம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் சமீப காலமாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை நாய்களை துரத்துவதும், தெருவில் விளையாடும் சிறுவர், சிறுமிகளை நாய்கள் கடிக்க துரத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

    பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. சமீப காலமாக குடும்ப கட்டுப்பாடுகள் செய்யாததால் நாய்கள் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது.

    இதனையடுத்து சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதுகுறித்து நகர் நல அலுவலர் பிரகாஷ் கூறியதாவது:

    மாநகராட்சியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த ஏற்கனவே தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட என். ஜி. ஓ. மூலம் அடுத்த வாரம் கருத்தடை மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்காக சோலாரில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் புனரமைக்கப்பட்டுள்ளது. நாய்களை பயிற்சி பெற்ற தூய்மை பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    3 நாள் அங்கேயே வைக்கப்பட்டு பின்னர் எங்கிருந்து பிடிக்கப்பட்டதோ அதே இடத்தில் விடுவிக்கப்படும். இதனால் தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வாய்ப்பாக அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • செல்லாயாள் மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.
    • கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சுண்டக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்லாயாள் (79).

    இந்நிலையில் சம்பவத் தன்று செல்லாயாள் வீட்டில் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.

    இதில் அவர் கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார். அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரை ஊற்றி ஈரத்துணியால் போற்றி அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி செல்லாயாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஊரக வளர்ச்சி துறையில் கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது.
    • இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    ஈரோடு:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கதின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

    அலுவலர்களின் நலன், உரிமைகள் சார்ந்த கோப்பு களை உருவாக்கவதிலும், அரசாணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த போக்கு மாற்றி கொள்ளப்பட வேண்டும்.

    இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியான அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும்.

    ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம், விடுபட்டுள்ள உரிமைகள், பணி விதிகள் தொடர்பான அரசாணையை முறையாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

    100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

    அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை குண்டம் இறங்கும் விழா நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு கள்ளுக்கடை மேடு பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 21-ந் தேதி (மாசி 9) பூச்சாட்டு, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அம்மனுக்கு பால் அபிஷேகமும், 6-ந் தேதி அக்னி கபாலமும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பூ மிதித்தல் எனப்படும் குண்டம் இறங்கும் விழா காலை 5 மணிக்கு நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி பிரதீப் குண்டம் இறங்கினர்.

    தொடர்ந்து கங்கணம் கட்டி விரதமிருந்த ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர், சிறுமியர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

    இதில் கோவை, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல் உள்பட ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் 4 நாட்களாக வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதனைத்தொடர்ந்து இரவு பத்திரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் நகர் வலமும், நாளை மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் தங்காயம்மள் செய்திருந்தார்.

    குண்டம் விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    ×