என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பண்ணை வீடுகளில் தங்கியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
    • தொகுதி முழுவதும் சொகுசு கார்களின் அணிவகுப்பும் அதிக அளவில் இருந்தது.

    ஈரோடு கிழக்கு தொகுதி...

    தமிழகத்தில் கடந்த 40 நாட்களாக பரவலாக பேசப்பட்ட இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. மற்றும் சுயேட்சைகள் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.

    இவ்வளவு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் காங்கிரஸ்-அ.தி.மு.க. வேட்பாளருக்கு இடையே தான் கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் பிரசார களத்தில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் கடந்த 40 நாட்களாக ஈரோட்டிலேயே தங்கி தேர்தல் பணியாற்றி வந்தனர். இடைத்தேர்தலை பொறுத்தவரை ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு கவுரவ பிரச்சனையாக இருந்தது. இதே போல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அவர்களும் கடுமையாக போராடினர். அரசியல் கட்சியினருக்கு அங்கீகாரம் பெறும் தேர்தலாக அமைந்தாலும் இந்த தொகுதி வாக்காளர்களுக்கு ஜாக்பாட்டாகவே மாறியது. தேர்தல் தேதி ஜனவரி மாதம் 18-ந்தேதி அறிவிக்கப்பட்டது. வேட்பு மனுத்தாக்கல் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. அன்று முதல் ஈரோடு தொகுதியில் பணமழை கொட்டத்தொடங்கியது.

    பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த அரசியல் கட்சியினர் வீடுகளை வாடகைக்கு எடுத்தும், பண்ணை வீடுகளில் தங்கியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனால் தொகுதி முழுவதும் சொகுசு கார்களின் அணிவகுப்பும் அதிக அளவில் இருந்தது.

    தொழிலாளர்கள் நிறைந்த இந்த கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரசாரம் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்வதை விட்டு விட்டு கடந்த 40 நாட்களாக பிரசாரத்தில் குதித்தனர். தினமும் அவர்கள் பிரசாரத்துக்கு சென்று ரூ.1000 வரை சம்பாதித்தனர். இதனால் மதுகடைகள், ஓட்டல்களில் 500 ரூபாய் நோட்டு, 2000 ரூபாய் நோட்டாகவே இருந்தது. இதனால் கடைக்காரர்கள் சில்லரை கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர்.

    அதோடு இல்லாமல் பிரியாணி, மது, ஓட்டுக்கு பணம், சேலை, லுங்கி, குக்கர், ஸ்மார்ட் வாட்ச், வெள்ளி கொலுசு, வெள்ளி டம்ளர் என ஏராளமான பரிசுபொருட்கள் அரசியல் கட்சியினர் வாரி வழங்கினர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் மீது அனைவருக்குமே பொறாமை ஏற்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ், நகைச்சுவை வீடியோக்களும் அதிக அளவில் பகிரப்பட்டது. சாதாரணமாக 4 பேர் உள்ள ஒரு குடும்பத்தில் பணம், பரிசு பொருட்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் ஒரு குடும்பத்துக்கு கிடைத்தது. தேர்தல்நேரம் நெருங்க நெருங்க வாக்காளர்கள் இன்னும் ஏதாவது கிடைக்குமா என்று எதிர்பார்த்து இருந்தனர்.

    அதே போல் வாக்குப்பதிவு அன்றும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் டோக்கன் விநியோகிக்கப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்து நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அரசியல் கட்சியினர் கொடுத்த டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வாக்காளர்கள் காத்து கிடக்கின்றனர். பொதுவாக தேர்தல் நேரத்தில் இரவு நேரங்களில் மட்டுமே வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டது. அதே போல் தற்போதும் இரவில் யாராவது பரிசு பொருட்களுடன் வருவார்களா என்று பொதுமக்கள் காத்து கிடக்கின்றனர். தேர்தல் முடிந்து 8 நாட்களாகியும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு இன்னும் ஏராளமானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசியல் கட்சியினர் கொடுத்த பணத்தை வைத்து தாராளமாக செலவு செய்து வருகிறார்கள். தேர்தல் அலை ஓய்ந்தும் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வசதியாகவே உள்ளனர். தொடந்து பொதுமக்களிடம் பணபுழக்கம் அதிகமாகவே உள்ளது. டோக்கனுக்கு ஏதாவது கிடைக்குமா? என்று தங்கள் பகுதியில் உள்ள அரசியல் கட்சி நிர்வாகிகளை தினமும் கேட்டு வருகிறார்கள்.

    தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையிலும் கிழக்கு தொகுதி மக்கள் அதற்குள் தேர்தல் முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

    • ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
    • போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த பல்வேறு ஆய்வுகள் மற்றும் கூட்டங்களை முடித்து கொண்டு திடீரென நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஈரோடு வந்தார்.

    அப்போது அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதில் காவல் நிலைய பதிவேடுகள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்படுகின்றனவா? என்றும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    அதைத்தொடர்ந்து பதிவேடுகளை முறையாக பராமரித்து வருவதையும், போலீஸ் நிலையத்தின் செயல்பாடு குறித்தும் பாராட்டி வெகுமதியளித்தார்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்ளிட்ட போலீசாரையும் பாராட்டினார்.

    • சுரேஷ் கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்து கொண்டார்.
    • மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    கொடுமுடி அடுத்த வடக்கு புதுப்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37).

    இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இவருக்கு இன்னும் திரு மணமாகவில்லை. தொடர்ந்து அவரும், அவரது பெற்றோரும் பல ஆண்டுகளாக திருமண த்துக்கு பெண் பார்த்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் அவருக்கு பெண் பார்த்த போது திருமணம் செய்ய பெண் அமையவில்லை. மேலும் ஜாதகமும் பொருந்த வில்லை. இதனால் அவர் மன சேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் சின்னியம்பாளை யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைத்தை அடுத்துள்ள பங்களாபுதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது டி.ஜி.புதூரில் இருந்து கே.என்.பாளையம் செல்லும் சாலையில் காளியூர் பிரிவு பஸ் நிறுத்தத்தில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 1,100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்த பிரபு (26), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த ரஞ்சித் (26), டி.ஜி.புதூரை சேர்ந்த சதீஷ் (19) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கர்நாடக மாநிலம் ஜல்லிபாளையம் பகுதியில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரம் மதிப்பிலான 1,100 கிராம் கஞ்சா, அதை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பணம் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் அடுத்த மாதம் 5-ந் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி தேரோட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை 5 மணியளவில் சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் முகூர்த்த கால் அமைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது கைலாசநாதர் கோவிலில் உள்ள மூலவர் மற்றும் உற்சவர் உள்பட அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பங்குனி தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியளவில் கோவிலின் தலைமை குருக்கள் ராமநாதசிவம் தலைமையில் கைலாசநாதர் கோவிலில் இருந்து சாமியின் வேலுடன் புறப்பட்டு 4 ராஜ வீதிகளில் வலம் வந்து பின்னர் மீண்டும் கைலாசநாதர் கோவிலை அடைந்தனர்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.
    • முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இன்ப்ளுயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

    உடல் வலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது.

    இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களை அதிக அளவில் தாக்கி வருகிறது.

    இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 இடங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.

    ஈரோடு மாநகர பகுதியில் புதுமை காலனி மற்றும் வளையகார வீதி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது. டாக்டர்கள், செவிலியர்கள், உதவியா ளர்கள் உடன் இருந்தனர்.

    பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். குறிப்பாக முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் சளி, காய்ச்சல் இருந்தால் அதற்கு உண்டான மாத்திரை வழங்கப்பட்டது. காய்ச்சல் அதிக அளவில் இருந்தால் அவர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    இதேப்போல் பள்ளி களில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் முகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உடன் இருப்பார்கள்.

    • ரத்தினசாமி வீட்டில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
    • கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி (35). இவரது மனைவி தீபா (27). ரத்தினசாமி தேங்காய் நார் உறிக்கும் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன் ரத்தினசாமிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு வலிப்பு நோயும் உள்ளதாக தெரிகிறது.

    இதனால் மன உளைச்சலுடன் காணப்பட்ட ரத்தினசாமி, சம்பவத்தன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதையறிந்த அவரது சகோதரர், கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது.
    • விபத்தில் ஞானபிரகாஷ் தலையில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை ஆர்.எஸ். ரோடு வசந்தம் காம்ப்ளக்ஸ் பகுதியை சேர்ந்தவர் மரிய தாஸ். இவரது மகன் ஞானபிரகாஷ் (வயது 22). இவர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பெரு ந்துறை-குன்னத்தூர் ரோட்டில் சீனாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மற்றோரு மோட்டார் சைக்கிளில் சத்தியமங்கலத்தை சேர்ந்த கபிலன் (18) மற்றும் கோபிசெட்டிபாளைம் அடுத்த கொள ப்பலூர் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவரது மகன் ஜெய் ஸ்ரீ பாலாஜி (18) ஆகியோர் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் ஞான பிரகாஷ் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதில் ஜெயஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்கள் 2பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரு ந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த ஞானபிரகாஷ் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    படுகாயம் அடைந்த ஜெய்ஸ்ரீ பாலாஜி மற்றும் கபிலன் ஆகியோர் பெரு ந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு சிவில் என்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு நகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலமும், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.

    அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

    இதையடுத்து வருகின்ற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகி றது. தொடர்ந்து 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    மேலும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.

    இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.

    தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பணியை விரைந்து முடிக்க இப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தனர்.
    • சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை இழுத்து நடுரோட்டில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு-சத்தி ரோட்டில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.

    ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் முக்கிய சாலையாக இருப்பதால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. சாலை விரிவாக்க பணிகள் காரணமாக இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்து வந்தனர்.

    பணியை விரைந்து முடிக்க இப்பகுதி மக்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தனர். தற்போது சாலை நடுவே தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் பிரிவு அருகே சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க பணிகள் நடந்து வந்தது.

    இதற்கு அப்பகுதி மக்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். தற்போது அந்த பகுதியில் சாலை நடவே தடுப்பு சுவர் அமைக்கும் வகையில் கம்பிகள் கட்டப்பட்டு இருந்தன.

    இதனையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைத்தால் 1½ கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி வரும். இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பொதுமக்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

    இதனையடுத்து வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைந்து போக செய்தார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில் இன்று மீண்டும் சாலை நடுவில் தடுப்பு சுவர் அமைக்கும் வகையில் கம்பிகளுக்கு கான்கிரீட் கலவை போடும் பணி நடப்பதாக அப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் இன்று மதியம் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாரதி தியேட்டர் பிரிவு அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் 2-வது நாளாக ஈடுபட்டனர்.

    சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த கம்பிகளை இழுத்து நடுரோட்டில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஈரோட்டில் இருந்து கோபி, சத்தியமங்கலம் செல்லும் பஸ்கள், சத்தியமங்கலம், கோபிலிருந்து ஈரோட்டுக்கு வரும் வாகனங்கள் சாலையின் இரு புறம் நீண்ட வரிசையில் அணி வகுத்துனின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் தாசில்தார் பாலசுப்பிரமணியம், வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    உங்கள் கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும் உடனடியாக சாலை மறியல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினர்.

    இதனை ஏற்று பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். ரோட்டில் போட்டிருந்த கம்பிகளை எடுத்து சாலை யோரமாக போட்டனர்.

    இதனால் 30 நிமிடம் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    • உலகெங்கிலும் உள்ள அனைத்து சாலைகளையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம்.
    • கூடுதல் தகவல்க ளை இந்திய அஞ்சல் துறையின், www.indiapost.gov.in தளத்தில் அறிய லாம்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி ப்பாளர் கருணாகர பிரபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    'நீங்கள் ஒரு சூப்பர் ஹீரோ என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து சாலை களையும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற்றுவதே உங்கள் நோக்கம்.

    உங்கள் இலக்கை அடைய என்னென்ன சக்திகள் தேவை' என்பதை விளக்கி ஒருவர் ஒரு கடிதம் எழுதலாம்.கட்டாயமாக, 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கலாம். 800 வார்த்தைகளுக்கு மிகாத கிடதமாக எழுத வேண்டும்.

    ஆங்கிலம், தமிழ் மற்றும் அங்கீகரிக்க ப்பட்ட மொழியில் எழுதலாம். இப்போட்டியில் சர்க்கிள் அளவில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு முறையே, 25,000 ரூபாய், 10,000 ரூபாய், 5,000 ரூபாயும், சர்வதேச அளவிலான போட்டியில் முதல், 3 பரிசு பெறுவோருக்கு முறையே, 50,000 ரூபாய், 25,000 ரூபாய், 10,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும். தேசிய அளவில் சிறந்த கடி தங்கள் தேர்வு செய்யப்பட்டு, சர்வதேச போட்டிக்கு ஏற்கப்படும்.

    அதற்கான விண்ணப்பத்துடன், ஒரு போட்டோ, பிறந்த தேதி அல்லது ஆதார் அட்டை நகல் அல்லது பள்ளியில் வழங்கிய பிறந்த தேதிக்கான சான்றுடன், 'எஸ்.பி.ஓ., – ஈரோடு கோட்டம், ஈரோடு – 638001' என்ற முகவரியில் வரும், 13-க்குள் கிடை க்கும்படி வழங்க வேண்டும்.

    கூடுதல் தகவல்க ளை இந்திய அஞ்சல் துறையின், www.indiapost.gov.in தளத்தில் அறிய லாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.
    • இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ஈரோடு:

    நேபால் மாநிலம் ராவுத்தார் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சாராம் ராய் (29). இவர் ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியில் தங்கி அங்குள்ள ஒரு பிராசசிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று பஞ்சாராம் ராய் தனது நண்பருடன் மது அருந்திவிட்டு பி.பி. அக்கரகாரம் பகுதியில் உள்ள காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றனர்.

    வாய்க்காலில் குளித்துக் கொண்டிருக்கும் போது பஞ்சாராம் ராய் திடீரென நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் மில்லில் வேலை பார்க்கும் நபர்களிடம் இது குறித்து கூறினார்.

    இதனை அடுத்து அனைவரும் அக்ரஹாரம் வாய்க்கால் பகுதிக்கு சென்று பஞ்சாராம்ராயை தேடிப் பார்த்தனர்.

    இந்நிலையில் ஈரோடு வைரா பாளையம் பகுதியில் வி.எம்.பி. தோட்டம் அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம் பஞ்சாராம் ராய் உடல் ஒதுங்கியது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ப ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பஞ்சாராம் ராய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன

    ×