என் மலர்
நீங்கள் தேடியது "45 இடங்களில்"
- ஈரோடு மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.
- முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக இன்ப்ளுயன்சா எச்.3 என்.2 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் காய்ச்சல் காரணமாக வரும் மக்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
உடல் வலி, தொண்டை வலி, இருமல், வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், வாந்தி போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறியாக உள்ளது.
இந்த காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் வயதான முதியவர்களை அதிக அளவில் தாக்கி வருகிறது.
இந்த காய்ச்சலை கட்டுப்படுத்திடவும், பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய இன்று (வெள்ளிக்கிழமை) தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 இடங்கள் வீதம் மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது.
ஈரோடு மாநகர பகுதியில் புதுமை காலனி மற்றும் வளையகார வீதி பகுதியில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது. டாக்டர்கள், செவிலியர்கள், உதவியா ளர்கள் உடன் இருந்தனர்.
பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதனை செய்தனர். குறிப்பாக முதியவர்களுக்கு தனி கவனம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் சளி, காய்ச்சல் இருந்தால் அதற்கு உண்டான மாத்திரை வழங்கப்பட்டது. காய்ச்சல் அதிக அளவில் இருந்தால் அவர் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
இதேப்போல் பள்ளி களில் நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் முகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் மருத்துவ வாகனங்களில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் உடன் இருப்பார்கள்.






