வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை

சுரேஷ் கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்து கொண்டார். மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை
Published on

மொடக்குறிச்சி:

கொடுமுடி அடுத்த வடக்கு புதுப்பாளையம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சுரேஷ் (வயது 37).

இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். மேலும் அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு இன்னும் திரு மணமாகவில்லை. தொடர்ந்து அவரும், அவரது பெற்றோரும் பல ஆண்டுகளாக திருமண த்துக்கு பெண் பார்த்து வந்தனர்.

இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் அவருக்கு பெண் பார்த்த போது திருமணம் செய்ய பெண் அமையவில்லை. மேலும் ஜாதகமும் பொருந்த வில்லை. இதனால் அவர் மன சேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுரேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது பற்றி தகவல் கிடை த்ததும் அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மொடக்குறிச்சி போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுரேஷ் உடலை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் சின்னியம்பாளை யம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com