தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து சாவு

சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார்.இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேங்காய் பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து சாவு
Published on

சென்னிமலை:

சென்னிமலையை அடுத்த வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (36).

இவர் சென்னிமலையை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தேங்காய் போடுவதற்காக தென்னை மரத்தில் ஏறி உள்ளார். அப்போது கால் தவறி மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்து விட்டார்.

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com