தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பலி

செல்லாயாள் மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார்.
தீ விபத்தில் உடல் கருகி மூதாட்டி பலி
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அடுத்த சுண்டக்கம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செல்லாயாள் (79).

இந்நிலையில் சம்பவத் தன்று செல்லாயாள் வீட்டில் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து அடுப்பின் மேல் விழுந்து விட்டார்.

இதில் அவர் கட்டிருந்த சேலையில் தீப்பிடித்து உடல் கருகினார். அவரது கணவர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நீரை ஊற்றி ஈரத்துணியால் போற்றி அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மூதாட்டி செல்லாயாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com