என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
- பூச்சி செடிக்கு அடிக்கும் மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டார்.
- இதனையடுத்து சர்புதீனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம், ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் சர்புதீன் (47). இவரது மனைவி லகிலாபுதுரன்சியா.
இந்நிலையில் சர்புதீனுக்கு கடந்த 5 மாதமாக வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. வலிப்பு நோய் காரணமாக தான் உயிரோடு இருக்க போவதில்லை என்று அடிக்கடி அவர் கூறி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மீண்டும் சர்புதீனுக்கு வலிப்பு வந்தது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள பூச்சி செடிக்கு அடிக்கும் மருந்தை (விஷம்) யாருக்கும் தெரியாமல் தண்ணீரில் கலந்து குடித்து விட்டு சிறிது நேரம் கழித்து வாந்தி எடுத்து உள்ளார்.
இது குறித்து அவரது மனைவி கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதனையடுத்து சர்புதீனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சர்புதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






