என் மலர்tooltip icon

    ஈரோடு

    • பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சம்பத் நகர் ஆண்டவர் வீதியை சேர்ந்த வர் பரந்தாமன் (41). தொழிலாளி. இவரது மனைவி தன்யா. பர ந்தாமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதிகமாக குடிப்பதால் பரந்தாமனுக்கு வயிறு வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு பரந்தாமன் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ள்ளார். பின்னர் பரந்தா மன் வீட்டில் படுத்து தூங்கினார்.

    தன்யா சமையலறையில் படுத்து தூங்கினார். பின்னர் காலை தன்யா வீட்டுக்குள் வந்து கதவை திறந்த போது பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தார். உடனடியாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பரந்தாமன் கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வனப்பகுதியில் அனுமதியின்றி சுற்றி திரிந்த வாலிபர் பிடித்து விசாரணை செய்தனர்.
    • ரூ.10 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட விளாங்கோம்பை வனப்பகு தியில் வன காப்பாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது வனப்ப குதியில் அனுமதியின்றி சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை வனத்துறையினர் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கே.என்.பாளையம் அம்மன் நகர் முதல் வீதியை சேர்ந்த மாதேஷ் (25) என்பது தெரிய வந்தது.

    இதனை யடுத்து அனுமதி யின்றி அத்துமீறி வனப்பகு திக்குள் சுற்றி திரிந்த குற்றத்திற்காக மாதேஷ் என்பவரை டி.என்.பாளை யம் வனச்சரக அலுவலக த்திற்கு அழைத்து வந்து வனச்சரகர் கணேஷ் பாண்டியன் விசாரணை செய்தார்.

    இதனையடுத்து வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி பாதுகா க்கப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த மாதேஷ்க்கு மாவட்ட வன அலுவலர் மற்றும் துணை இயக்குனர் உத்தரவின்படி ரூ.10 ஆயிரம் அபராத விதிக்கப்பட்டது.

    மேலும் வனத்துறையினர் எச்சரிக்கை செய்து அவரை அனுப்பி வைத்தனர்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1032 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது.
    • ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    ஈரோடு:

    திராவிடர் கழக மாநில பொதுக்குழுக்கூட்டம் ஈரோடு பஸ் நிலையம் எதிரில் உள்ள மல்லிகை அரங்கில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்திற்கு செயலவை தலைவர் அறிவுக்கரசு தலைமை தாங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் என சுமார் 1000 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்கள் விளக்க பொதுக்கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு விழாவும் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, அமைச்சர் சு.முத்துசாமி, எம்.பி.க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், மேயர் நாகரத்தினம் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • கொள்ளை கும்பல் பயன்படுத்திய ஒரு மொபட், கிரிக்கெட் பேட் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைதான வாலிபர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காணலாம்.

    பவானி:

    பவானி அருகே உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் அருகே ஒரு கட்டிடத்தின் 2-வது மாடியில் ஆயுர்வேத சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. ஈரோடு அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கீர்த்தன் என்பவர் நடத்தி வரும் இந்த சிகிச்சை மையத்தில் 2 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த சிகிச்சை மையத்தில் நேற்று இரவு பணியாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த சிகிச்சை மையத்தின் உள்ளே புகுந்தனர். இதை தொடர்ந்து அவர்கள் கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய கத்தி போன்ற ஆயுதங்களை கொண்டு பணியாற்றி கொண்டு இருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் கழுத்தில் கத்தியை வைத்து பணம் மற்றும் தங்க நகைகளை பறித்தனர்.

    இதை தொடர்ந்து உரிமையாளர் கீர்த்தன் இந்த நிறுவனத்தின் உள்ளே இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் நிறுவனத்தில் புகுந்து பணம் மற்றும் நகை பறித்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உரிமையாளர் கீர்த்தன் உடனடியாக சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    தகவல் கிடைத்த தும்போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மூடப்பட்டு இருந்த ஷெட்டரை திறந்து உள்ளே சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை கிரிக்கெட் பேட்டாலும், கத்தியாலும் தாக்கி 4 வாலிபர்கள் மின்னல் வேகத்தில் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் மற்ற 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை கும்பல் பயன்படுத்திய ஒரு மொபட், கிரிக்கெட் பேட் மற்றும் கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் அவர்கள் ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், கவுதம் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி ஓடிய 4 பேர் குறித்து லட்சுமி நகர் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்களை பிடிக்க தேடுதல் பணியில் தீவிரபடுத்தி உள்ளனர்.

    சம்பவ இடத்திற்கு பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி, சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அந்த நிறுவன பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அதிக நடமாட்டம் உள்ள லட்சுமி நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் கொள்ளை கும்பல் உள்ளே புகுந்து கிரிக்கெட் மட்டை மற்றும் பெரிய கத்தியுடன் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகை பறித்துச் சென்ற இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்கள் குறித்தும் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை கும்பல் நடத்திய முதல் சம்பவமா? அல்லது வேறு இடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.கைதான வாலிபர்களையும், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கிரிக்கெட் மட்டை மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காணலாம்.

    • குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகராட்சி சென்னிமலை சாலை மற்றும் ஈ.வி.என்.சாலை சந்திப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியின் போது பிரதான குடிநீர் விநியோக குழாய் பழுதடைந்து விட்டதால் பழுது சரிபார்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகள் காரணமாக ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 51-ல் உள்ள இ.எம்.எம். மெயின் வீதி, இ.எம்.எம். வீதி, மணல்மேடு வீதி, சென்னிமலை சாலை,

    4-ம் மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 52-ல் உள்ள ஈஸ்வரன் வீதி, கள்ளியங்காடு பகுதி, பட்டக்காரர் வீதி, தங்கபெருமாள் வீதி, ஜீவானந்தம் சாலை, புதுமை காலனி ஆகிய பகுதிகளில் இன்று (12-ந் தேதி), நாளை (13-ந் தேதி) 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக்க கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நிலங்களின் வாழ்வாதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.47 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1142 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி என மொத்தம் அணையில் இருந்து பாசனத்திற்காக 955 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதேப்போல் 41.75 அடி கொள்ளளவு கொண்ட குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 35.50 அடியாக உள்ளது.

    30.84 அடி கொள்ளளவு கொண்ட பெரும் பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 24.21 அடியாக உள்ளது.

    33.46 அடி கொள்ளளவு கொண்ட வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.49 அடியாக உள்ளது.

    • ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
    • பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    கோபிசெட்டிபாளையம் சீதாலட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராமையாள் (80). இவருக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மூதாட்டி ராமையாள் மட்டும் ஆடு மேய்த்துக்கொண்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு ராமையாள் உறவினர் பிரதீப்குமாருடன் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    பிரதீப்குமார் வண்டியை ஓட்ட பின்னால் ராமையாள் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். பச்சைமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ராமையாள் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராமையாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள ஊஞ்சபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ராஜேஷ் (18). கல்லூரி மாணவர். மொடக்குறிச்சி அடுத்த பட்டறை வேலம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி மகன் பூபதி (17). இருவரும் நண்பர்கள்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோட்டார் சைக்கிளில் ராஜேஷ், பூபதி மற்றும் பூபதியின் தம்பி கலைச்செல்வன் (15) ஆகிய 3 பேரும் பட்டறை வேலம்பாளையத்தில் இருந்து மூலனூர்-ஈரோடு ரோட்டில் சென்று கொண்டிருந்த போது வளைவில் திரும்பி உள்ளனர்.

    அப்போது மூலனூரில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். பூபதிக்கு லேசான காயமும், கலைச்செல்வனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி போலீசார் ராஜேஷ் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சிறுவலூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

    கெட்டிசெவியூர், சாந்தகடை பகுதி அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார்.

    அவரை பிடித்து விசாரித்த போது அவர் நம்பியூர் சூரியம்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் (34) என்பதும் அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் கருங்கல்பாளையம், கொடுமுடி, கடம்பூர் பகுதிகளிலும் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார்.
    • எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு ரங்கம்பாளையம் சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (37). கடந்த 15 வருடமாக பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இவர் தனது தம்பியுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்திபன் குடிபோதையில் காவிரி கரை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக பார்த்திபன் நீரில் மூழ்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து சிறிது நேரத்தில் பார்த்திபன் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கோபி அருகே செரையாம்பாளையம் பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.

    இவருக்கு மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு கார்த்திக்குக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மானிய தொகை அவரது வங்கி கணக்குக்கு மீன் வளத்துறை சார்பில் செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மீன் வளத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பவானிசாகரை சேர்ந்த அருள்ராஜ் (47) என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு உங்களுக்கு 2-ம் கட்ட மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளது. அந்த மானியத்தொகை 2 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.

    எனவே மானியத் தொகை வழங்க எனக்கு ரூ.31 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கார்த்திக்கிடம் அருள்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திக்கிடம் வழங்கினர். இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜை கார்த்திக் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர் லஞ்ச பணத்துடன் ஓடத்துறை குளம் பகுதிக்கு கார்த்திகை வருமாறு கூறினார்.

    இதை தொடர்ந்து கார்த்திக்கும் பணத்துடன் ஓடத்துறை பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்ெபக்டர் முருகன் மற்றும் போலீசார் மறைந்து இருந்தனர்.

    அப்போது கார்த்திக் தான் கொண்டு வந்த பணத்தை அருள்ராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அருள்ராஜை கோபியில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அருள்ராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×