தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு சம்பத் நகர் ஆண்டவர் வீதியை சேர்ந்த வர் பரந்தாமன் (41). தொழிலாளி. இவரது மனைவி தன்யா. பர ந்தாமனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

இதனால் கணவன்-மனை விக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதிகமாக குடிப்பதால் பரந்தாமனுக்கு வயிறு வலி இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு பரந்தாமன் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்து ள்ளார். பின்னர் பரந்தா மன் வீட்டில் படுத்து தூங்கினார்.

தன்யா சமையலறையில் படுத்து தூங்கினார். பின்னர் காலை தன்யா வீட்டுக்குள் வந்து கதவை திறந்த போது பரந்தாமன் வீட்டில் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை கீழே இறக்கி பார்த்தபோது மூச்சுப்பேச்சு இல்லாமல் இருந்தார். உடனடியாக சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பரந்தாமன் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வீரப்ப ன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com