பவானிசாகர் அணையில் இருந்து 1,032 கனஅடி நீர் வெளியேற்றம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணையில் இருந்து 1,032 கனஅடி நீர் வெளியேற்றம்
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேலும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.52 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1032 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கீழ்பவானி பாசனத்திற்காக 5 கனஅடி, தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 800 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கன அடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 955 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com