என் மலர்tooltip icon

    ஈரோடு

    • ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.
    • கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது/ தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய சந்தையாக திகழும் இந்த சந்தை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கூடுகிறது.

    இந்த சந்தையில் கர்நா டகா மற்றும் கேரளா மாநி லங்களில் இருந்தும் மற்றும் வெளி மாவட்டங்களான திருப்பூர், நாம க்கல், கரூர், தாராபுரம், நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து கால்நடைகளை வாங்கி செல்கிறார்கள்.

    மேலும் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் சத்தியமங்கலம், புளியம்பட்டி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை விற்பதும் வாங்கி செல்வதும் வழக்கம்.

    இந்நிலையில் கடந்த புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை வழக்கம் போல் சந்தை கூடியது. இந்த மாட்டுசந்தையில் ஜெர்சி மாடுகள் ரூ.55 ஆயிரத்துக்கும், சிந்து மாடுகள் ரூ.56 ஆயிரத்து க்கும், எருமை மாடுகள் ரூ.20 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை விற்பனை யானது.

    இதில் கலப்பின மாடுகள் ரூ.50 ஆயிரத்து க்கும் மற்றும் வளர்ப்பு கன்றுகள் ரூ.5 முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனை யானது. மேலும் வெள்ளாடு ரூ.7 ஆயிரம் வரையும், மற்றும் செம்மறி ஆடுகள் ரூ.6 ஆயிரம் வரையும் விற்பனை செய்ய ப்பட்டது.

    இதில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.1 கோடிக்கு விற்பனை யானது என வியாபாரிகள் தெரிவித்தனர்

    • இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழ்நாட்டில் அனைத்து பொதுமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர்களை ஊக்கு விக்கும் வகையில் இ-சேவைமையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் நிறுவி செயல்படுத்த தொடங்கப்பட்டு உள்ளது.

    இ-சேவைமையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து இ-சேவை மையத்தில் மக்கள் காத்தி ருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவையை வழங்குவதே இன் நோக்கமாகும்

    இத்திட்டம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 513 இ-சேவை மையங்கள் செயல்பட அனு மதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் இதுவரை பயன்பெறாத தொழில்முனைவோர் https://tnesevai.tn.gov.in/ (அல்லது) (https://.tnega.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    விண்ணப்பதாரர்கள் வரும் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்து வதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் மற்றும் நகர்புற த்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆன்லைன் முறை யில் செலுத்தப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்களுக்கு ரியபயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password) விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயி லாக வழங்கப்படும்.

    மேலும் அருகே உள்ள இ-சேவைமையங்களின் தகவல்களை "Mugavari" ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது https://.tnega.tn.gov.inஇணைய தளத்தில் காணலாம் என கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவி த்துள்ளார்.

    • தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது.
    • ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகி வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட கடைகள் செயல் பட்டு வருகின்றன. இங்கு மொத்தமாகவும், சில்லரையாகவும் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தாளவாடி, சத்தியமங்கலம் ,ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், கர்நாடகா, பெங்களூர் போன்ற பகுதியில் இருந்து காய்கறி கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைய தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

    ஈரோடு வ. உ. சி. மார்க்கெ ட்டுக்கு தினமும் 7000 தக்காளி பெட்டிகள் வரத்தாகி வந்தன. தற்போது விளைச்சல் பாதிக்கப்பட்டு குறைந்த அளவே வருகிறது.

    இன்று வ.உ.சி. மார்க்கெ ட்டிற்கு 2,500 தக்காளி பெட்டிகள் மட்டுமே வரத்தாகி இருந்தது. இன்று ஆந்திரா மாநிலம் குப்பம் , கர்நாடக மாநிலம் கொள்ளே கால் ஆகிய பகுதியில் இருந்து மட்டுமே தக்காளி வரத்தாகி உள்ளது.

    இதனால் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையானது.

    அதனைத்தொடர்ந்து சிறிது சிறிதாக விலை உயர்ந்து கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.35 -க்கு விற்பனையானது. இன்று மேலும் அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.45 முதல் 50 வரை விற்பனையாகி வருகிறது.

    தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் விளைச்சல் பாதிப்பாலும், வரத்து குறைந்ததாலும் கருப்பு அவரை, பச்சை மிளகாய், பீன்ஸ் ஆகிய காய்கறிகளின் விலை ரூ. 100 - ஐ தாண்டி உள்ளது.

    ஈரோடு வ. உ. சி. காய்கறி மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி களின் விலை கிலோவில் வருமாறு:

    கத்திரிக்கா - 60, வெண்டை க்காய்-40, பீர்க்கங்காய்- 60, பாவக்காய் - 60, முள்ளங்கி-50, முட்டைகோஸ் - 25, புடலங்காய்-45, கருப்பு அவரை - 110, பெல்ட் அவரை - 100,

    உருளைக்கிழங்கு - 30, குடைமிளகாய் - 60, பச்சை மிளகாய் - 120, சுரக்காய் - 15, இஞ்சி - 220, பீட்ரூட் - 55, கேரட் - 85, காலிபிளவர் - 35, கோவைக்காய் - 55,

    வெள்ளரிக்காய் - 50, சேனைக்கிழங்கு - 50, கருணைக்கி ழங்கு - 60, சவ்சவ் - 25, சின்ன வெங்காயம்- 60 முதல் 70, பெரிய வெங்காயம் - 25.

    • மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
    • பிளாஸ்டிக்களை பண்டல்களாக செய்து சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் சேகரம் செய்யப்படும் திடக்கழிவுகளை பொதுமக்களே மக்கும் குப்பை, மக்காத குப்பை மற்றும் அபாயக ரமான கழிவுகள் என தரம் பிரித்து ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது.

    சேகரம் செய்யப்படும் மக்கும் குப்பைகளை உரமாக மாற்றி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மக்காத மறுசுழற்சிக்கு உதவும் பொருட்களை தூய்மை பணியாளர்களே விற்பனை செய்து அதற்கான பணப்பயன் அடைகின்றனர்.

    மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக்களை பண்டல்களாக செய்து சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளுக்காக அனுப்பி வைக்கின்றனர்.

    இந்நிலையில் இ வேஸ்ட் எனப்படும் பழுதடைந்த பல்ப்கள், டியூப் லைட்கள், பேட்டரிகள், கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி பிக்சர் டியூப்கள் போன்ற கழிவுகளை வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் சேகரம் செய்யும் பணிகளை நகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சிவக்குமார் உத்தரவின்படி, நகராட்சி துப்புரவு அலுவலர் சோழ ராஜ் துப்புரவு ஆய்வாளர்கள் செந்தில்குமார், கார்த்திக், சவுந்தரராஜன் துப்புரவு பணி மேற்பார்வையாள ர்கள் தூய்மை பாரத திட்ட பரப்புரையாளர்கள் இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

    சேகரம் செய்யப்படும் மின் கழிவுகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மின்னணு கழிவுகளை முறைப்படி அப்புறப்படுத்தும் மறுசுழற்சி யாளரிம் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.

    ஈரோடு:

    கவுந்தப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுந்தப்பாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெத்தாம்பாளையம், எல்லீஸ்பேட்டை,

    சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தருமாபுரி, கவுந்தப்பாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேலம்பாளையம்,

    சந்திராபுரம், பெருமாபாளையம், தன்னாசிபட்டி, பாண்டியம்பாளையம், குஞ்சரமடை, ஓடமேடு, கருக்கம்பாளையம், கண்ணாடிபுதூர், மாணிக்கவலசு, அய்யன்வலசு,

    மணிபுரம், விராலிமேடு, தங்கமேடு, பி.மேட்டுப்பாளையம், செந்தாம் பாளையம், செட்டிபாளையம், ஆவாரங்காட்டுவலசு, ஆலந்தூர், கவுண்டன்பாளையம் மற்றும் செரயாம்பாளை யம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் பவானி ஊராட்சி கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (17-ந் தேதி)நடக்கிறது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவானி நகர் முழுவதும், குருப்பநாயக்கன்பாளையம், நடராஜபுரம், ராணநகர், ஜீவாநகர், ஆண்டிகுளம்,

    சொக்காரம்மன்நகர் போன்ற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

    • பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
    • வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கொண்டுரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி எழிலரசி (33). இவர்களிடம் பவானியை சேர்நத ஒருவர் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.

    பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.

    பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    பட்டதாரிகளான கணவன், மனைவி 2 பேரும் லேப்டாப் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி பவானி, அம்மாபேட்டை, சித்தோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏஜெண்டுகள் நியமித்து அவர்கள் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் அனுப்பி பரிசு விழும் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து வாட்ஸ்அப் குழுவில் இருந்த பவானியை சேர்ந்த அப்புசாமி, காடையாம்பட்டியை சேர்ந்த தினேஷ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகராஜன், ஆதிநாராயணன், அம்மாபேட்டை குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி, நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த ரசூல், சித்தோடு நால்ரோடு பகுதியை சேர்ந்த வேலுமணிகண்டன், பெருந்துறையை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 9 ஏஜெண்டுகளையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரிடம் இருந்து 2 லேப்டாப், 2 டேப், 11 செல்போன்கள், 2 வங்கி பாஸ் புத்தகம், ஒரு ஏ.டி.எம். கார்டு, ரூ.13 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கைதான 11 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஆண்கள் 10 பேர் பவானி கிளை சிறையிலும், எழிலரசி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர்.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு செல்லபாஷா வீதியில் அரசு நிதி உதவி பெறும் ஒரு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5 -ம் வகுப்பு வரை மாணவ- மாணவிகள் படித்து வருகின்ற னர்.

    கடந்த ஆண்டு ஆங்கில வழிக்கல்வியில் 630 மாணவ-மாணவிகளும், தமிழ் வழி கல்வியில் 130 மாணவ-மாணவிகளும் படித்தனர். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆங்கில வழி மாணவர்கள் சேர்க்கையும், தமிழ் வழி மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டன. அப்போது மாணவ, மாணவி களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    இதில் ஆங்கில வழி கல்வியில் படிக்கும் சில மாணவர்களுக்கு தமிழ் வழி கல்வி புத்தகங்களும், தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்கள் சிலருக்கு ஆங்கில வழி கல்வி புத்தகமும் வழங்கப்பட்டதாக கூறப்படு கிறது.

    இதனையடுத்து இன்று காலை மாணவர்களுடன் பெற்றோர்கள் திரண்டு பள்ளிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியரிடம் சென்று நடந்த விவரம் குறித்து கேட்டனர். அப்போது அரசு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சார்பில் ஒரு உத்தரவு பிறக்க பிறப்பிக்க ப்பட்டுள்ளது.

    அதில் ஆங்கில வழி கல்வி, தமிழ் வழி கல்வி இரண்டும் சமமாக கற்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆங்கில வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களில் ஒரு சிலரை தமிழ் வழி கல்வியிலும், அதேப்போல் தமிழ் வழி கல்வியில் சேர்ந்த சில மாணவர்களை ஆங்கில வழி கல்வியிலும் சேர்த்ததாக தலைமையாசிரியர் விளக்கம் அளித்தார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் திரண்டு உள்ளனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இங்கு வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • நிலக்கட லையை விவசாயிகள் பெற்று சென்றனர்.
    • ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீடு திரும்பினார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை சுற்று வட்டார விவசாயிகளுக்கு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்த அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலகம் உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை நலத்திட்டங்கள் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம். நெல்,தென்னங்கன்று நிலக்கடலை உள்ளிட்ட விதை வகைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களிடம் உள்ள நில ஆவணங்களை கொண்டு மானிய விலை அரசு சலுகைகளால் பயன்பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அம்மாபேட்டை வேளாண்மை அலுவல கத்தில் மானிய விலையில் நிலக்கடலை கிடைப்பதாக தகவல் அறிந்து விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்திருந்து கிலோ ரூ15 வீதம் தலா 20 கிலோ நிலக்கட லையை விவசாயிகள் பெற்று சென்றனர்.

    இதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே கிடைத்ததால் மற்றவர்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த குறிச்சி பகுதி விவசாயிகள் 2 வது நாளாக நேற்றும் வேளா ண்மை அலு வலகத்துக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் வேளாண் அலுவலர்களிடம் கேட்ட பொழுது நிலக்கடலை தீர்ந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து வீடு திரும்பினார்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் அரசு விவசாயி களுக்கு என தனி கவனம் செலுத்தி பல்வேறு நலத்தி ட்டங்களை வழங்கி வருகிறது.

    இதுகுறித்த விபரங்களை அலுவலர்கள் விவசாயிகளுக்கு முறையாக தெரி விப்பதில்லை அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே அலைபேசி மூலம் அழைப்பு விடுத்து அரசு சலுகைகள் குறித்து தெரிவித்து அவர்களுக்கு மட்டு மே வழங்கி வருகின்றனர்.

    ஏழை எளிய விவசாயிகளுக்கு எந்தவித தகவலும் முழுமை யாக கிடைப்பது இல்லை. அரசு அனைத்து விவசாயி களுக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்துவதால் எங்களைப் போன்ற சிறுகுறுவிவசாயிகள் ஏமாற்றம் அடைகின்றோம்.

    எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரசு வழங்கும் சலுகைகள் அனைத்தும் வட்டாரத்தில் உள்ள அனைத்து சிறுகுறு விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி தகவல் முறையாக தெரிவிக்கப்பட்டு பின்னர் மானிய விலை பொருட்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்

    • வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.
    • பருத்தி மொத்த விற்பனை மதிப்பு ரூ.6,98,979 ஆகும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது

    இதில் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    வருடா வருடம் பருத்தி விற்பனை நடைபெறுகிறது. இந்த வருடம் விற்பனை முறைப்படி அறிவிக்கப்பட்டு நேற்று காலை பூஜை செய்து விற்பனை தொடங்க ப்பட்டது.

    விற்பனையை ஈரோடு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சாவித்திரி தொடங்கி வைத்தார். விற்பனையில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் கோவை அன்னூர் புளியம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டி போட்டு பருத்தியை ஏலத்தில் எடுத்து சென்றனர்.

    முதல் நாள் விற்பனையில் மொத்தம் 294 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்தன கிலோ ஒன்றின் அதிக விலை ரூ 68.19 க்கும் குறைந்த விலை ரூ.61.60 க்கும் விற்பனையானது. பருத்தி மொத்த விற்பனை மதிப்பு ரூ.6,98,979 ஆகும்.

    • தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
    • வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    அதன்படி இம்மாதம் நாளை (16-ந் தேதி) வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

    எனவே ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும்,

    இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • தயாளன் பேச்சு மூச்சின்றி மயக்கநி லையில் இருந்துள்ளார்.
    • பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த திருவேங்கடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தயா ளன்(42) சினிமா துணை இயக்குனர்.

    இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர். இவரது மனைவி நியூ திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் தயா ளனுக்கு புகை மற்றும் குடிப்பழக்கம் இருந்து வந்து ள்ளது. நேற்று முன்தினம் மாலையில் தனக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதாக தனது மனைவிக்கு தொலை பேசியில் தகவல் அளித்து ள்ளார்.

    அவரது மனைவி சுடு தண்ணீர் வைத்து குடிக்க சொல்லி விட்டு நான் சற்று நேரத்தில் வருகிறேன் என கூறியுள்ளார்.

    சற்று நேரத்தில் தனது மூத்த மகன் அருகில் இருப்பவரின் தொலைபேசியில் அழைத்து அப்பா குளியல் அறைக்கு சென்று நீண்ட நேரம் ஆகி விட்டது இன்னும் வர வில்லை என கூறியுள்ளார்.

    அலறியடித்துக்கொண்டு வந்து அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடை த்து பார்த்த போது தயாளன் பேச்சு மூச்சின்றி மயக்கநி லையில் இருந்துள்ளார்.

    இதையடுத்து அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அவரது உடலை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக கூறி அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    அம்மாபேட்டை:

    பவானி வட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் படவல்கால்வாய் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் இந்திரா காந்தி ஓய்வூதிய திட்டம், கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியம், பட்டா மாறுதல்,புதிய குடும்ப மின்னணு அட்டை வழங்குதல், பொது சுகாதாரம் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகள் மூலம் 98 பயனாளிகளுக்கு ரூ.64 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் விஜயநிர்மலா சரவணபவா, துணைத் தலைவர் குமரவேல், மாவட்ட கவுன்சிலர்கள் மோகனசு ந்தரம், சதாசிவம், படவல் கால்வாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆராயி,பூனாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் பேசுகையில்,

    முகாம் என்பது மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இம்மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது.

    மேலும் இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளை தீர்ப்பது தான் இம்முகாமின் முக்கிய நோக்கமாக உள்ளது. குறிப்பாக மகளிர் திட்டம் மூலம் பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பினை ஏற்படுத்துவது குறித்து பயிற்சிகள் வழங்கப்படு கிறது.

    இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரி களும் வந்து தங்களது துறை சார்ந்த குறைகளை பொது மக்கள் நிவர்த்தி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தனர். இதனை பொதுமக்கள் அந்தந்த காலகட்டத்தில் செய்து கொள்ள வேண்டும் உதார ணமாக ஒரு சாதி சான்று குழந்தைகளுக்கு எடுப்பதாக இருந்தால் கடைசி நேரத்தில்தான் நாம் அதிகாரிகளை அணுகு கிறோம்.

    அதனைத் தவிர்த்து பட்டா மாறுதலாக இருந்தா லும் சரி, வாரிசு சான்றிதழாக இருந்தாலும் சரி அந்தந்த கால தேவைகளை அப்போதே அதிகாரிகளை அணுகி நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    அரசு வழங்கும் நல திட்டங்களை பொது மக்கள் அந்தந்த கால கட்டத்தில் விழிப்பு ணர்வுடன் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கான சில உதார ணங்களை நகைச்சுவை உணர்வுடன் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார். முன்னதாக காட்டூரில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளி குழந்தைகளை சந்தித்து கலந்துரையாடி புத்தகங்களை வழங்கினார். பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் கோபி ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி, மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் குமரன் வரவேற்று பேசினார். முடிவில் பவானி தாசில்தார் தியாகராஜன் நன்றி கூறினார். 

    ×