என் மலர்
ஈரோடு
- மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.
- போலீசார் அவரை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த பகுதியில் உள்ள சந்தை அருகே ஒருவர் இருந்தார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர்.
இதில் அவர் கோபிசெட்டிபாளையம் அடுத்த செஞ்சிராம்பாளை யம் பகுதியை சேர்ந்த செல்வன் (40) என்பதும் அவர் டாஸ்மாக் மது பாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்த 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை- முருங்க த்தொழுவு ரோட்டில் குன்னி மரம் என்ற இடத்தில் சுதந்திர போராட்ட தியாகி குமரனுக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படவுள்ள இடத்தினை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கலெக்டர் பெருந்துறை பகுதியில் கூட்டுறவுத்துறையின் கீழ் வேளாண்மை உற்பத்தியா ளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் செயல்ப டும் பசுமை சமையல் எண்ணெய்கள் மற்றும் மங்களம் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடியினை நேரில் சென்று பார்வையிட்டார்.
தொடர்ந்து சென்னிமலை யூனியன் அலுவலகத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 22 கிராம ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் பயன்பா ட்டிற்காக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, சென்னிமலை பேரூராட்சிக் குட்பட்ட வார்டு எண்.5, அம்மாபாளையம், கே.வி.பி.நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளதையும்,
முகாசிபிடாரியூர் டி.எம்.எம்.புரம் பகுதியில் மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.1.10 லட்சம் சமுதாய முதலீட்டு நிதியுதவியுடன் கைத்தறி எந்திரம் மூலம் பெட்சீட் உற்பத்தி செய்யும் மையத்தினையும்,
குமாரவலசு ஊராட்சி, பாலாஜி கார்டன் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.23 லட்சம் மதிப்பீட்டில் சந்தன மரக்கன்றுகள் நடும் பணியினையும், வெள்ள முத்துக்கவுண்டன் வலசு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.482.36 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள 22 ஊராட்சிகளை சேர்ந்த 434 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கட்டப்பட்டு வரும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தி னையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக பெருந்துறை அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் 623 மதிப்பெண்கள் பெற்ற மாணவன் கமல்நா த்தை கலெக்டர் ராஜகோ பால் சுன்கரா பாராட்டினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினிசந்திரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், துணைப்பதி வாளர் நர்மதா, சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ராம கிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் பூபதி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவகுமார், உதவி திட்ட அலுவலர்கள் சாந்தா, அன்பழகன், சரவணகுமார், சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், பாஸ்கர் பாபு, உதவிபொறியாளர் பிரகாஷ், வட்டார பொறியாளர் ருக்மணி தேவி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
- மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ்குமார் தனது மொபட்டில் லக்காபுரத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிரு ந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.
இந்த விபத்தில் மொபட்டில் வந்த சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோ தனை செய்த டாக்டர் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
விபத்து குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டபள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார் (23) மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேனில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
- போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி வழிகாட்டுதல் படி டி.எஸ்.பி. சுரேஷ்குமார் மேற்பார்வையில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பு லனாய்வு பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை, தட்டக்கரை பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் போலீசார் தட்டக்கரை பஸ் நிறுத்தம் பகுதியில் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்துக்கிடமாக அங்கு வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். அப்போது வேனில் 50 கிலோ அளவில் 18 மூட்டைகளில் 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர்கள் பவானி, திருவ ள்ளுவர் நகரை சேர்ந்த பாலு (50), உதயகுமார் (55) என்பது தெரியவந்தது. இவர்கள் ரேஷன் அரிசியை கர்நாடகா வுக்கு கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் ேரஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேனை பறிமுதல் செய்தனர். பின்னர் பாலு, உதயகுமார் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
- கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவிரி, பவானி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.
ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வரும் இந்த கோவிலில் அமாவாசை தினத்தன்று உள்ளூர், வெளியூர் வெளி மாநில பக்தர்கள் வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல் என பல்வேறு வகையான பரிகார பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.
ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவிலின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது.
- ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- இது தொடர்பான நோட்டீஸ் அந்த பகுதியில் ஒட்டப்ப ட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை செல்லும் ெரயில்கள் வெண்டி பாளையம் ரெயில்வே கேட் கடந்து செல்ல வேண்டும். மேலும் இந்த வழியாகத்தான் வெண்டி பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு தினமும் பலமுறை லாரிகள் சென்று வருகின்றன.
இது தவிர வெண்டி பாளையம், கோண வா ய்க்கால் உள்ளிட்ட பகுதிக ளில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் மாநகர் பகுதிக்குள் வர வேண்டும்.
எனவே இந்த பகுதி முக்கியமான போக்குவரத்து பகுதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழித்தடத்தில் ரெயில் தண்டவாளம் பராமரிப்பு, ஜல்லி கொட்டுதல், சிக்னல் சரிபார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்கு வசதியாக வெண்டி பாளையம் ரெயில்வே கேட் இன்று முதல் வருகின்ற 29-ந் தேதி வரை 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் வெண்டி பாளையம் மற்றும் நாமக்கல் மாவட்டம் செல்லும் இருச க்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் மோளகவுண்டன்பாளையம், சோலார், நீல்கிரீஸ் வழியாக திருப்பி விட ப்பட்டுள்ளது.
இது தொடர்பான நோட்டீஸ் அந்த பகுதியில் ஒட்டப்ப ட்டுள்ளது.
- அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
- இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கஸ்பாபேட்டை, செல்லப்பம்பாளையம், மேற்கு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புசாமி (57). இவரது மகன் சிவன். அப்புசாமி மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 1½ வருடத்திற்கு முன்பு பாறை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது அப்புசாமி விபத்தில் சிக்கி அவரது பார்வை பறிபோனது.
இதனால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்புசாமி குளியலறைக்கு சென்ற போது வழுக்கி தவறி கீழே விழுந்தார்.
இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அப்புசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமையல் அறையில் அய்யப்பன் தூக்குபோட்டு தொங்கி கொண்டிருந்தார்.
- சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு சென்னிமலை ரோடு மணல்மேடு பகுதி யைச் சேர்ந்தவர் அய்யப்பன் (38). அவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அய்யப்பன் கிடைக்கும் வேலைக்கு சென்று வந்து கொண்டி ருந்தார். அவரது மனைவி தறிப்பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அய்யப்ப னுக்கு குடிப்பழ க்கம் இருந்துள்ளது. குடிப்ப ழக்கத்திற்கு அடிமையாகி சரிவர சாப்பிடாமல், சரியாக வேலைக்கு செல்லா மல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி யுடன் தகராறில் ஈடுபட்டு ள்ளார். மேலும் தனக்கு தானே கை, கால்களை அறுத்து ரத்த காயத்தை ஏற்படுத்திக் கொண்டு ள்ளார்.
இந்நிலையில் சம்ப வத்தன்று இரவு தனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும், பேசாமல் செத்து விடலாம் என்றும் அய்யப்பன் கூறியுள்ளார். அப்போது அவருக்கு மனைவி மகன்கள் ஆறுதல் கூறியுள்ளனர். பின்னர் அனைவரும் சாப்பிட்டு தூங்க சென்று விட்டனர்.
நேற்று அதிகாலை வேலைக்கு செல்ல வேண்டி சித்ரா எழுந்தபோது வீட்டில் உள்ள சமையல் அறையில் அய்யப்பன் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவி யுடன் ஆம்புலன்ஸ் மூலம் அய்யப்பனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அய்யப்பனின் உடலை பார்த்து அவரது மனைவி, மகன்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- தூங்கிக்கொண்டிருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது.
- சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சேவை கவுண்டனூர் காசிலிங்க புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (42). கூலி தொழிலாளி. இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 14-ந் தேதி கார்த்திகா குருநாத புரம், வாழை குட்டை தோட்டம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அன்று இரவு மனைவியை பார்க்க மணி தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்க சென்று விட்டனர். மணி வீட்டு வாசலில் தரையில் பாயை போட்டு படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென தூங்கிக் கொண்டி ருந்த மணியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதனால் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக பெருந்துறை யில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது உடலை பார்த்து மனைவி, குழந்தைகள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
- நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
ஈரோடு:
பவானிசாகர் அணையில் இருந்து இன்று காலை காலிங்கராயன் முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று காலை பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இன்று முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு அதாவது 4 மாதத்திற்கு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஈரோடு, பவானி, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். முதல் நாளான இன்று 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நாட்கள் செல்ல செல்ல கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 79.86 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1009 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றில் 200 கன அடியும், காலிங்கராயன் பாசனத்திற்கு 100 கனடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கன அடி வீதம் என மொத்தம் அணையில் இருந்து 1,105 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.
- போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கவுந்தப்பாடி:
ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி- பவானி ரோடு சுண்ணாம்பு சூலை பைபாஸ் ரோடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது இடது கையில் தனா என்ற பெயரும், வலது ைகயில் பாயும் புலி என்ற முத்தி ரையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பச்சை கட்டம் போட்ட சர்ட்டும், கைலியும் கட்டி இருந்தார். மேலும் அவரது கணத்தில் காயம் இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலை வில் டாஸ்மாக் மதுக்கடை இருந்தது.
இதனால் அதிக அளவில் மது குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இல்லை அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
- மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.
- மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கனகமலையில் உள்ள மொடக்குறிச்சி கலை அறிவியியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கை 2-ம் கட்ட கலந்தாய்வு வரும் 19-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.
பி.எஸ்.சி. கணினி அறிவியல், கணிதம், விலங்கியல், வணிகவியல், பி.காம். சி.ஏ., வணிகவியல் பயன்பாடு, பி.பி.ஏ. சி.ஏ., வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாடு, தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 8 பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் நேரிடையாக விண்ணப்பங்கள் பெற்று காலியான இடங்க ளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு அடிப்படையில் சேரலாம்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவ- மாணவிகள் 19-ந் தேதி காலை 10 மணிக்கு இணைய விண்ணப்பத்தின் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் நகல், 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் நகல், சாதி சான்றிதழ், 2 பாஸ்போஸ்ட் சைஸ் போட்டோ, ஆதார் அட்டை ஆகியவற்றின அசல், நகல் மற்றும் படிவம், கல்லூரி கட்டணத்துடன் பெற்றோருடன் வர வேண்டும்.
மாணவர்களின் கலந்தாய்வு விவரங்கள் கல்லூரி இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2-ம் ஆண்டு, 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் 2-ம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கு வரும் 19-ந் தேதி கல்லூரி திறக்கும் நாள் என கல்லூரி முதல்வர் ஜெ.எபெனேசர் தெவித்துள்ளார்.






