கார் மோதிய விபத்தில் விவசாயி பலி

எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் சேதமான கார், மொபட்.
விபத்தில் சேதமான கார், மொபட்.
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றியம் சின்னியம்பாளையம் பஞ்சாயத்து பாலக்காட்டு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (50) விவசாயி. இவருக்கு சசிகலா என்ற மனைவியும், கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை சுரேஷ்குமார் தனது மொபட்டில் லக்காபுரத்தில் இருந்து சின்னியம்பாளையம் நோக்கி வந்து கொண்டிரு ந்தார். அப்பொழுது எதிரே வந்த கார் எதிர்பாராத விதமாக சுரேஷ்குமார் மீது மோதியது.

இந்த விபத்தில் மொபட்டில் வந்த சுரேஷ்குமார் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த போலீசார் சுரேஷ்குமாரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு பரிசோ தனை செய்த டாக்டர் சுரேஷ்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விபத்து குறித்து சுரேஷ் குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய கிருஷ்ணகிரி மாவட்டம் பண்டபள்ளி கொத்தூர் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் நந்தகுமார் (23) மீது மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com